பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின் என் தம்பி தான்! ரத்த சொந்தம்.. ஆனால், நடிகை தேவி பிரியா எமோஷனல்
சென்னை: நடிகை தேவி பிரியா பல சீரியல்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். சீரியலில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது தன்னுடைய சகோதரர் குறித்து பேசி இருந்தார். அவருடைய சகோதரர் வேறு யாருமில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்டாலின் தானாம், அவர் குறித்து எமோஷனலாக தேவி பிரியா பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
90ஸ் கிட்ஸ்களில் மறக்க முடியாத வில்லி என்றால் நடிகை தேவி பிரியா தான். காரணம் அந்த நேரத்தில் சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை ஆட்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் டிவி முன்னாடி தான் தஞ்சம் அடைந்து கொண்டு இருந்தார்கள். அப்போது எந்த சேனலை மாற்றினாலும் அதில் தேவி பிரியா தான் வில்லியாகவும், அன்பான கேரக்டரிலும் நடித்து கலக்கி கொண்டு இருந்தார்.

தேவி பிரியாவின் நடிப்பு
இப்போது அதிகமாக சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டு, வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் வில்லியாக நடிக்கும் போது கோபத்தையும் வெறுப்பையும் இயல்பான தனது கண்ணிலேயே கொண்டு வந்து மிரட்டுவார். அவருடைய கண்ணழகை புகழாத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவருடைய கண்கள் ரசிகர்களை வசியம் பண்ணி வைத்திருந்தது.
முதல் சீரியல்
அது மட்டுமல்லாமல் உதட்டுக்கு மேலே செயற்கையாக இவர் வைக்கும் சின்ன மச்சான் கூட இவருக்கு செம அழகு தான். சன் டிவியில் நடிகை பானுப்பிரியாவின் நடிப்பில் வெளியான சத்தி சீரியலில் தான் இவர் அறிமுகமானார். முதல் சீரியலிலேயே தன்னுடைய திறமையை நன்கு வெளிப்படுத்தி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று விட்டார். அதற்கு பிறகு பாரதிராஜாவின் சீரியலில் நடித்து மேலும் பிரபலமானார்.
போலீஸ் கேரக்டர்
குணசித்திர வேடங்களில் மட்டுமல்லாமல் பெண் போலீஸ் கேரக்டரிலும் நடித்து இருக்கிறார். குழந்தை பருவத்திலிருந்து இவருக்கு போலீஸ் ஆகணும் என்பதுதான் இவருடைய ஆசையாம். ஆனால் அந்த நேரத்தில் இவரால் பன்னிரண்டாம் வகுப்புக்கு மேலே படிக்க முடியாத சூழல் இருந்திருக்கிறது. இருந்தாலும் தொலைதூர கல்வியில் பி ஏ இங்கிலீஷ் படித்து முடித்து இருக்கிறார். இதனால் பல சீரியலில் இவர் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
தேவி பிரியா பேட்டி
தேவி பிரியாவிற்கு போல்டான கேரக்டர் மட்டுமல்லாமல் காமெடியான கேரக்டரும் கச்சிதமாக பொருந்திவிடும். ஒரு கேரக்டர் கிடைத்துவிட்டால் அந்த கேரக்டராகவே மாறிவிடும் நபர்களில் இவரும் ஒருவர். அதனாலேயே இவர் நடிக்கும் கேரக்டரின் பெயர் சொல்லியே மக்களும் இவரை கூப்பிடுகிறார்கள். அதையே இவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வாராம். தன்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் தான் அது என்று பல இடங்களில் தேவி பிரியா பேசியிருக்கிறார்.

தேவி பிரியா பற்றிய சர்ச்சை
சில வருடங்களுக்கு முன்பு இவர் பற்றி சில சர்ச்சைகளும், வதந்திகளும் பரவி வந்தது. ஆனாலும் தேவிப்பிரியா தொடர்ந்து தன்னுடைய தன்னம்பிக்கையால் சீரியலில், சினிமாவிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய சகோதரர் குறித்து பேசி இருந்தார். அவருடைய சகோதரர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியனாக நடித்த கொண்டிருக்கும் ஸ்டாலின் தான்.

நடிகை தேவிபிரியாவின் தம்பி
ஸ்டாலின் இவருடைய சொந்த தம்பி தான். ஆனால் இவருடைய கூட பிறந்த தம்பி கிடையாதாம். இது பற்றி தேவி பிரியா பேசும் போது, ஸ்டாலின் சித்தப்பா, பெரியப்பா முறையில் எனக்கு தம்பி. ரத்த சொந்தம் என்றாலும் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதே கிடையாது. ஆனால் போன் செய்து மணி கணக்கில் பேசிக்கொள்வோம், என்னுடைய தம்பி என் பக்கத்தில் இருந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது. அவனுக்கும் அப்படித்தான் சொல்லுவான். நான் பக்கத்தில் இருந்தால் ஏதாவது புரணி பேசிக் கொண்டிருப்போம். எங்கள் இருவருக்கும் நல்ல பாசம் இருக்கிறது என்று நடிகர் ஸ்டாலின் குறித்து நெகிழ்ச்சியாக தேவி பிரியா பேசியிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications