Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்ப்பிணியான தன்னை அடித்த நடிகர் கணவரால்.."கரு எப்போ வேணாலும் கலையலாம்” சீரியல் நடிகை திவ்யா கதறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாக பலருக்கும் பரிட்சையமான திவ்யா தற்போது தன்னுடைய கணவர் தன்னை அடித்ததால் எப்போ வேணாலும் கரு கலைலாம் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

திவ்யாவின் கணவரான அர்னாவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறாராம்.

மகராசியில் பாரதி

மகராசியில் பாரதி

சின்னத்திரை நடிகை ஆன திவ்யா ஸ்ரீதர் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான். இந்த சீரியலிலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த சீரியலில் இவர் பாரதி கேரக்டரில் நடித்திருப்பார். இவருடைய சொந்த ஊர் பெங்களூர் தானாம். ஸ்கூல் காலேஜ் எல்லாமே சொந்த ஊரில் படித்த இவர் மாடலிங்கில் அதிக ஆர்வமாக இருந்திருக்கிறார். அதன் காரணமாகவே காலேஜ் முடித்ததும் இவர் மாடலிங் பக்கம் திரும்பி இருக்கிறார். மாடலிங் பண்ணி கொண்டு இருக்கும்போது இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் முதலில் இவர் கன்னட திரைப்படங்களில் தான் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

சீரியல் முதல் காதல் வரை

சீரியல் முதல் காதல் வரை

கன்னட சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது இரண்டாவது சீசனாக இருந்தாலும் இந்த சீசனில் இவர் மகாலட்சுமி என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் திடீரென்று இந்த சீரியலில் இருந்து இவர் விலகி இருக்கிறார். சீரியலில் இருந்து விலகி இருந்தாலும் இந்த சீரியலில் இவரோடு நடித்திருந்த அர்ணவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. தங்களுடைய காதல் மூலமாக தங்களுடைய நடிப்பு எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்த இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை மறைத்து வைத்திருந்தார்களாம்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை

லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை

அதற்குப் பிறகு திவ்யா தமிழ் கன்னடம் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது செவ்வந்தி எனும் சீரியலில் நடித்து வருகிறார். அதுபோல அர்னாவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் எளிமையாக திருமணத்தை செய்து முடித்திருக்கின்றனர். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில், சமீபத்தில் தான் எனக்கும் அர்னாவ்க்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார். இண்டு வருஷத்துக்கு முன்னாடி சீரியல் ஒன்றில் நாங்கள் நடித்தோம்.அதற்குப் பிறகு நாங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க ஒரு வீடு வாங்கினோம். அதற்கு பைனான்ஸ் எல்லாமே நான் தான் செட்டில் பண்ணி இருந்தேன். அப்போ கல்யாணப்பரிசு சீரியல் முடிந்த பிறகு அர்னாவ்க்கு எந்த ஒரு சீரியலும் இல்லாமல் தான் இருந்தார். நான் தான் மகராசி சீரியல் முடிச்சுகிட்டு இஎம்ஐ எல்லாம் கட்டிக்கிட்டு இருந்தேன்.

கதறும் நடிகை

கதறும் நடிகை

அது மட்டுமில்லாமல் அர்னாவ் தனியாகவும் லோன் வாங்கி இருந்தார். அதையும் நான் தான் கட்டியிருந்தேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ண கூடாது என்பதற்காக நான் பார்த்து பார்த்து பண்ணுனேன். ஆனா என் ஹஸ்பண்ட் என்னை அடிச்சதால நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிறுக்கு அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு தான் நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை. என்னால் ஹாஸ்பிடலுக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது என்று திவ்யா கதறி அழுத வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+