சிநேகன் அப்படி என்றால், நான் இப்படி... வீடியோ வெளியிட்ட கன்னிகா... என்னம்மா யோசிக்கிறாங்க..!!
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன கன்னிகா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
தன்னுடைய காதல் கணவர் குறித்து அவர் செய்யும் வேலைகளை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து கன்னிகா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
சினேகன் எழுதிய பாடலுக்கு கன்னிகாவின் லேட்டஸ்ட் வீடியோ பொருந்தி இருப்பதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

எட்டு வருட காதல்
திரைத்துறை தம்பதிகளாக இருக்கும் கவிஞர் சிநேகன் மற்றும் கன்னிகா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் கன்னிகா தனக்கிருக்கும் திறமை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்களோடு அடிக்கடி பகிர்ந்து வருகிறார். எட்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் மீது இப்ப வரைக்கும் தனக்கு அன்பு குறையவில்லை என்பதை அடிக்கடி பார்ப்பவர்கள் எல்லாம் பொறாமைப்படும் வகையில் வெளிக்காட்டி வருகிறார்.

மிரள வைக்கும் சிலம்பாட்டம்
இயக்குனர் கே பாலச்சந்திரன் மூலமாக டிவி தொடரில் நடித்து திரைப்படங்களிலும் நடித்து வந்த கன்னிகா சமுத்திரகனி உடன் அடுத்த சாட்டை திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கௌதம் கார்த்திக் உடன் தேவராட்டம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஒரு எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். அதிகமாக புத்தகங்களை படிக்கும் இவர் புத்தகங்களை எழுதும் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். கன்னிகா தனக்கு சாப்டான வேலைகள் மட்டுமல்ல சண்டையின்னு வந்து விட்டா சிலம்பும் சுத்த தெரியும் என்று சிலம்பாட்டத்திலும் ஜொலித்து வருகிறார்.

திருமணம் தள்ளிப்போன காரணம்
சிலம்பத்திற்கு கில்லாடியாக இருக்கும் இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் செய்து கொண்டிருக்கும் போது நீண்ட தலை முடிக்கான அழகி பட்டங்களையும் பெற்றிருக்கிறார். அதன் மூலமாக தனக்கு அதிகமாக திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துதான் இவர் திருமணத்தை தள்ளி வைத்திருந்தாராம். ஆனால் இவர் எதிர்பார்த்த வகையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால்தான் திருமணத்தை முடித்திருக்கிறார். சிநேகனும் கன்னிகாவும் காதலிக்கும் காலங்களில் அதிகமாக வெளியே சுற்றியுள்ளதே கிடையாதாம். அதனால் தான் இவர்களுடைய காதல் ரகசியமாகவே பாதுகாக்க வந்துள்ளது.

பாடல்கள் ரீ கிரியேஷன்
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் எழுதிய பாடல்களை ரீ கிரியேஷன் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய கணவர் பாடல் எழுதும் போது அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்திருக்கிறார். அதுபோல ஒரு ஓவியராக தான் வரையும் புகைப்படங்களையும் வீடியோ எடுத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து, "நீ மட்டும் உம் என்றால் உடலோடு உடல் மாற்றம் செய்வேனே" எனும் பாடலுக்கு எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார். கடைசியில் இருவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் அதோடு சேர்த்து வெளியிட்டதால் ரசிகர்கள் சிலர் பொறாமைப்பட்டாலும் வாழ்த்துக்களை கூற தவறவில்லையாம். ஒரு சில நெட்டிசன்கள் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் சினேகளை பற்றிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த மாதிரி வீடியோ தேவையா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள் .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications