மணிரத்தினமும், இளையராஜாவும் என் வாழ்க்கையில் விளையாடிட்டாங்க! சுந்தர்.சி சொன்ன வார்த்தை! குஷ்பூ ஓபன்
சென்னை: நடிகை குஷ்பூ தன்னுடைய காதல், திருமணம், வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் சுந்தர் சி எப்படி தன்னிடம் காதலை சொன்னார் என்பதையும் பகிர்ந்து இருக்கிறார். அதுபோல தன்னுடைய வாழ்க்கையில் மணிரத்தினமும் இளையராஜாவும்
விளையாடி விட்டாங்க என்று கலகலப்பாக குஷ்பூ சொல்லி இருக்கும் நிலையில் அதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகை குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி 16 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார். அதற்குப் பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல அவருடைய கணவர் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமான முறை மாமன் திரைப்படத்தில் குஷ்பூ நடித்திருந்தபோதுதான் இவர்களுக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த காதல் கதை குறித்து குஷ்பூ பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதுபோல சுந்தர்.சி ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்து முறைமாமன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் தலைநகரம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாகவும் அறிமுகம் ஆகி இருந்தார். இப்போது நடிகராகவும் இயக்குனராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் சுந்தர் சி சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் நந்தினி சீரியலை சின்னத்திரையிலும் பிரம்மாண்டமாக எடுத்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகை குஷ்பூ பேட்டியில் சுந்தர் சி குறித்து பேசுகையில் நான் சுந்தர் சி இயக்கிய முறைமாமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு என் மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது அந்த பட யூனிட்டிடம் குஷ்பூவை தான் நான் காதலிக்கிறேன் அவரை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று சுந்தர் சி சொல்லி இருக்கிறார்.
அதற்கு அங்கிருந்தவர்கள் நீ இந்த நேரத்தில் அந்த பொண்ணு கிட்ட போய் உன் காதலை சொன்னால் அந்த பொண்ணு பாதியிலேயே படத்தை விட்டு போயிடும், அது உனக்கு தான் பிரச்சனையாகும். நீ இப்பதான் முதல் முறையா இயக்குனராக அறிமுகமாகி இருக்கிற, அதற்குள் உன் வாழ்க்கையை கெடுத்துக்காத ஒன்னு அந்த பொண்ணு பாதியிலே படத்தை விட்டு போய்விடும் இல்லன்னா உன்னை செருப்பை கழட்ட அடிக்க போகுது இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு நடக்க போகுது என்று பயமுறுத்தி இருக்கிறார்கள்.
அதோடு நீ இப்போதுதான் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிற... முதல் படம் கூட இன்னும் வெற்றியாகவில்லை ஆனால் குஷ்பூ இப்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் உன்னுடைய காதலை சொன்னால் எல்லாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல, சுந்தர் சி பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
பிறகு எனக்கு மணிரத்தினம் படங்கள் அவ்வளவு பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். முறைமாமன் திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது பம்பாய் திரைப்படம் வெளியானது. அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன் காரணம் மணிரத்தினம் இயக்கம், பாடல் இளையராஜா இவங்க ரெண்டு பேரின் படத்தை நான் எப்படி மிஸ் பண்ணுவேன்? அதனால் எப்படியாவது படத்திற்கு போக வேண்டும் என்று சொன்னேன்.
அப்போது மேட்னி ஷோக்கு டிக்கெட் கிடைத்திருந்தது. அந்த நேரத்தில் எப்போதும் என்னுடைய ஆன்ட்டி வருவாங்க அவங்க மிட் நைட் ஷோ என்பதால் அவங்க வரல சுந்தரை கூட்டிட்டு போனு சொல்லிட்டாங்க. நானும் சுந்தர் சியும் தான் படம் பார்க்க போய் இருந்தோம். அப்போது நான் படம் பார்க்க வந்திருக்கும் விஷயம் அங்கிருந்த ரசிகர்களுக்கு தெரிய வந்துவிட்டது. அவர்கள் நான் இருந்த இடத்தை நோக்கி எல்லோரும் வரத் தொடங்கி விட்டார்கள்.
உடனே தியேட்டர் ஓனர் படத்தை நாங்கள் நிறுத்தி விடுகிறோம். இதற்கு மேலே போட்டா ரசிகர்கள் தியேட்டரை அடித்து நொறுக்கிடுவாங்க என்று சொல்லிவிட்டார். என்னையும் வெளியே கூட்டிட்டு போக சொல்லி சுந்தர் சி இடம் சொல்ல, அவர் என் கையைப் பிடித்து கூட்டிட்டு வெளியே வந்தார். அந்த நேரத்தில் என்னுடைய மனதில் இளையராஜாவின் தந்தன தந்தன ராகம் என் மனதிற்குள் ஓடியது... சொல்ல போனால் இளையராஜாவும் மணிரத்தினமும் தான் என்னுடைய வாழ்க்கையில் விளையாடிட்டாங்க என்று நான் சொல்லுவேன் என்று கலகலவென குஷ்பூ சிரித்து இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், முதல் நாள் தியேட்டரில் இருந்து என்னை சுந்தர் கூட்டிட்டு வந்த பிறகு அடுத்த நாள் என்னிடம் கதை சொல்ல வேண்டும் என்று வீட்டிற்கு வந்திருந்தார். கதை சொல்ல வேண்டும் என்று அவர் மூன்று நாள் டைம் கேட்டிருந்தார் மூன்று நாளுமே ஒரு படத்தின் பாதிவரைக்கும் தான் சொல்லுவார். இண்டர்வெல்க்கு மேலே அவர் சொல்லாததால் எனக்கு கோபம் வந்துவிட்டது.
நான்காவது நாள் நான் கதை கேட்க மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள் என்று மாடிக்கு போய் விட்டேன். அங்கு சுந்தர் சி வந்து விட்டார். என்னிடம் கதை கேட்க மாட்டேன் நீங்க சொன்னீங்களாமே என்று கேட்க, ஆமா நீங்க இன்டெர்வலுக்கு மேல சொல்ல மாட்டேங்கறீங்க அப்புறம் அதே கதையை நான் எத்தனை முறை கேட்கிறது என்று சொன்னேன். அதற்கு அவர் சரி அது இருக்கட்டும் நமக்கு நாளைக்கு கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்தால் அது என்னை மாதிரி இருக்குமா? இல்ல உங்களை மாதிரி இருக்குமா? என்று கேட்டார்.
எனக்கு திக் என்றது என்ன நீங்க ப்ரொபோஸ் பண்றீங்களா என்று நான் அவரிடம் கேட்டேன். ஆமாம் ஆனால் எனக்கு எப்படி சொல்ல வேண்டும் தெரியாது இப்படி தான் தெரியும் வேணும்னா என் கையில் பூ இருக்கிறதா நினைச்சுக்கோங்க நான் இப்போ உங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ணறேன் என்று காதலை சொல்ல எனக்கும் பிடித்து போய்விட்டது அன்று தொடங்கிய காதல் இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் கல்யாணத்திற்கு முன்னாடியே நாங்கள் ஐந்து வருடமாக காதலித்தோம் அந்த நேரத்திலும் பல நாட்கள் சண்டை போட்டு இருக்கோம். கல்யாணத்திற்கு பிறகு முதல் ஏழு வருடங்களுக்கு அதிகமாக சண்டை போட்டோம். அதற்கு பிறகு ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துவிட்டோம். என்னதான் சண்டை போட்டாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களுடைய திருமண வாழ்க்கை அதனால் தான் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது என்று அந்த பேட்டியில் நடிகை குஷ்பூ பேசுகிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications