எலும்பு துண்டுக்கு ஆசைப்படுற நாய்கள்.. ரூ. 2000க்காக! பெட்ரூமுக்குள் எட்டி பார்த்து.. குஷ்பூ ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை குஷ்பூ சோசியல் மீடியாவில் நடிகைகளை விமர்சித்து பேசி வரும் நபர்களை கடுமையாக தாக்கி பேசிய வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் நாய்கள் எலும்பு துண்டுக்கு ஆசைப்படுற மாதிரி சிலர் 2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு யூடியூபில் நடிகைகள் அல்லது அடுத்த வீட்டு பெண்களைப் பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள் என்று கோபமாக குஷ்பூ பேசி இருக்கிறார்.

சிலர் யூடியூப் வீடியோக்களில் சோசியல் மீடியாவில் என்ன விஷயம் ட்ரெண்டாக போய்க் கொண்டிருக்கிறதோ? அல்லது ட்ரெண்டிங்கில் எந்த நடிகை இருக்கிறாரோ? அவரை பற்றி பேசி வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே நடிகை ராதிகா, குஷ்பூ உட்பட பல நடிகைகள் பேசி இருக்கிறார்கள். ஆனாலும் சிலர் இன்னும் அடுத்தவர்களை பற்றியே பேசி வருகிறார்கள்.

Khushbu

நடிகை குஷ்பு ஆதங்கம்

இது பற்றி சமீபத்தில் குஷ்பூ பேசும்போது, எலும்பு துண்டுக்கு ஆசைப்படுற நாய்கள் மாதிரி சிலர் இருக்கிறார்கள்... நடிகைகளை பற்றி அவதூறாகவே பேசி பணம் பாக்குறாங்க. அவங்களுக்கு 2000 ரூபாய் கிடைச்சா போதும். அதுக்காக என்ன வேணாலும் பேசுவாங்க. கணவன் மனைவி இருவருக்கும் இடையில் வந்து படுத்து பெட்ரூமில் என்ன நடக்கிறது என்று பார்த்தது போல அவர்களாக ஏதாவது பேசிக் கொண்டு இருப்பாங்க.

ஏ ஐ போட்டோ

இதுபோன்ற நபர்கள் அவங்க வீட்டில் இருக்கும் மனைவி பற்றியோ அல்லது குடும்பத்தினரை பற்றியோ இதுபோல பேசி பணம் சம்பாதிப்பாங்களா? நடிகைகள் என்றால் ஏஐ வைத்து எடிட் பண்ணி அவங்களை பற்றி என்ன வேணாலும் பேசலாம் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவங்க அவங்க வீட்டில் இருக்கிற பெண்கள் போட்டோவை எடிட் பண்ணி அவங்களோட சோசியல் மீடியாவிலேயே போட்டுக்கொள்ள வேண்டியதுதானே?

அவர்களுக்கு தேவை பணம் தானே? அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுறாங்க. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இப்போது அதற்கு மாற்றம் வந்திருக்கிறது. எங்களுடைய நடிகர் சங்கம் சார்பாகவும் இது போன்ற நபர்கள் மீது ஆக்சன் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் மீதும் எடுக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு பேசி இருக்கிறார்.

நடிகர் சங்கம்

மேலும் நடிகர் சங்கம் பற்றி பேசும் போது, விஷால் இந்த சங்கத்தை கட்டி முடித்து தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய கல்யாண சாப்பாட்டுக்காக நாங்களும் காத்திருக்கிறோம். இந்த சங்கத்திற்காக பலர் உழைக்கிறாங்க. சங்கத்தை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்று அவர்களால் முடிந்த பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் கஷ்டம் இருந்தாலும் கூட அதையும் தாண்டி சங்கத்திற்காக எத்தனையோ பேர் துணை நிற்கிறாங்க. அதனாலயே இந்த சங்க வேலை சீக்கிரமாக முடியும் என்று குஷ்பூ பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+