இர்ர்ர்ரிடேடிங் கேரக்டர் நடிகை லைலா.. எரிச்சலா வரும்! ஓபனாவே சொன்ன நடிகர் ஷாம்! ஆஹா உள்ளம் கேட்குதே
சென்னை: திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த பிரபல நடிகை லைலா, மீண்டும் 'சர்தார்' என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார்.. இப்போது பல படங்களில் பிஸியாகவே நடித்து வருகிறார். இந்நிலையில், லைலா பற்றி நடிகர் ஷாம், ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.. இதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஏற்கனவே விஜயகாந்த் பற்றி ஷாம் சொல்லியிருந்த விஷயம், பலருக்கும் திகைப்பை தந்து வரும் நிலையில், லைலா பற்றியும் கருத்து கூறியிருக்கிறார் நடிகர் ஷாம்.
கடந்த 1999ல் வெளியான கள்ளழகர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லைலா. பல படங்கள் அவர் நடித்திருந்தாலும், பிதாமகன் படம்தான், பலரையும் திரும்பி பார்க்கவைத்தது.

கொஞ்சல் பேச்சு, துருதுரு நடிப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகையாக மாறினார் லைலா. தமிழை தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றவர்.
திருமணத்துக்கு பிறகு பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் லைலா.. பிறகு வெப்சீரிஸ் மூலம் ரீஎன்ட்ரி தந்து, 'தி கோட்' மூலம் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வர துவங்கியிருக்கிறார்..
பிரசாந்த் - லைலா ஜோடி
லைலா ஹீரோயினாக புகழ்பெற்ற போது பிரசாந்த் லைலா இவர்கள் ஜோடியை தான் அனைவரும் விரும்பினார்கள். பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் கோட் படத்தில் ஜோடி சேர்ந்திருந்தது ரசிகர்களின் கவனத்தை பெற்றது..
ஒருமுறை மதன் கவுரி சேனலுக்கு லைலா தந்திருந்த பேட்டியில், "சினிமா உலகம் தொழில்நுட்ப ரீதியாக பல மடங்கு முன்னேறிவிட்டது. அப்போது இந்த அளவுக்கு சோஷியல் மீடியாக்கள் இல்லை. ஓடிடி போன்ற தளங்கள் இல்லை.
சோஷியல் மீடியா அபாரம்
நான் நடிக்க வந்த காலத்தில் இருந்து நிம்மதியாக இருந்தேன். என் சொந்த வாழ்க்கையும் சுதந்திரமும் பாதுகாப்பாக இருந்தது. இந்த ஓடிடி எல்லாம் வந்த பிறகு என் சொந்த வாழ்க்கையை கெடுத்துவிட்டது. சுத்தமாக தனிப்பட்ட வாழ்க்கை என்பதே இல்லாமல் போய்விட்டது
நான் நடிக்க வந்த போது தமிழ் கற்றுக் கொள்வது கஷ்டமாக இல்லை.. தமிழ் மக்களை அதிகம் விரும்புகிறேன்.. என்னுடைய குடும்பத்தில் ஒரு பகுதியாகவே உணர்கிறேன்.., தமிழில் பேசும் போது எதிர்காலம், கடந்த காலம் பற்றி சரியான வாக்கியங்களை என்னால் அமைக்க முடியவில்லை. அதனால் தவறாக பேசி விடக்கூடாது என்று பயமும் இருந்தால்தான், ஆங்கிலத்தில் பேசிவந்தேன்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
இரிடேடிங் கேரக்டர் லைலா
இந்த நிலையில் நடிகை லைலாவை பற்றி பிரபல நடிகர் ஷ்யாம் ஒரு விஷயத்தை ஷேர் செய்திருக்கிறார்.. உள்ளம் கேட்குதே என்ற லைலாவும் ஷாமும் இணைந்து நடித்திருந்தனர்.
அசின், பூஜா இருவருமே முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும், லைலாவின் துறுதுறு கேரக்டர் சற்று வித்தியாசமாக இருந்தது.. இந்த படத்துக்கு பிறகு, பிரசாந்த் லைலா போல, ஷ்யாம் லைலா ஜோடியும் பிரபலமான ஜோடியாக மாறியதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் அந்த படத்தில் நடிக்கும்போது, இருவருமே அப்போது அப்-கமிங் ஆர்ட்டிஸ்ட்டாகவே இருந்தனர்..
ஜாலியான கேரக்டர்
அந்த படத்தில் லைலாவுடன் நடித்தது குறித்து ஷாம் கூறும்போது, "எனக்கு பிடிக்காத நடிகை லைலா என்று சொல்லலாம்.. உள்ளம் கேட்குதே படத்தில் ஒரு மாதிரி இரிடேட்டிங் பண்ணுகிற கேரக்டரில் லைலா நடித்திருப்பார். அதனால் படம் முழுக்க அப்படியே தான் வருவார்.
அப்போது அவரை பார்க்கும்போதெல்லாம் "ஐயோ"ன்னு தோன்றும். ஒரு கட்டத்தில் இனிமேல் லைலாவுடன் நடிக்கவே கூடாது என்றுகூட நினைத்தேன்.. ஆனால் உண்மையிலேயே மிகவும் ஜாலியான கேரக்டர் லைலா" எனக் கூறியிருக்கிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது..
ஒரு பைசா கூட தரமாட்டேன்
சமீபத்தில் விஜயகாந்த் பற்றியும் ஷாம் ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார்.. அதாவது ஆரம்பகாலகட்டத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தபோது, சம்பளத்தை சரியாக தரவில்லையாம்.. அதனால் பணம் தந்தால், படத்துக்கு டப்பிங் நிச்சயம் செய்து தருகிறேன் என்று தயாரிப்பாளரிடம் ஷாம் சொல்லியிருக்கிறார்.
உடனே அப்படத்தின் ப்ரொடியூசர், ஒரு பைசா கூட தரமுடியாது என்று சொல்லி, 10 ரவுடிகளை ஷாமின் வீட்டிற்கு அனுப்பி படத்தின் டப்பிங் வேலைகளை முடித்து தரவேண்டும் என்று வீடு புகுந்து மிரட்டியிருக்கிறார்.
விஜயகாந்த் ஓடோடி வந்தார்
இதனால் பயந்துபோன ஷாம், உடனே விஜயகாந்துக்கு போனை போட்டு, சார், சிலர் வந்து வீட்டில் தகராறு செய்கிறார்கள், எனக்கு சம்பளமும் சரியாக தரவில்லை என்றாராம்.
உடனே விஜயகாந்த், 'நான் இந்த பிரச்சனையை பார்த்துக்கறேன்.. நீ போய் அமைதியாக தூங்கு" என்று சொன்னாராம்.
பிறகு உடனே அப்படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்த விஜயகாந்த் 'இனி இது ஷாம் பிரச்சனை இல்லை, இந்த விஜயகாந்த்தின் பிரச்சனை" என்று பேசி விவகாரத்தை சரி செய்துள்ளார்..
அத்துடன் ஷாமுக்கான ஊதியத்தையும் முழுவதுமாக பெற்று தந்துவிட்டாராம் கேப்டன்.. இதை ஷாம் சமீபத்தில் கூறியிருந்த நிலையில் இந்த வீடியோவும் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications