சந்தோஷமா இருங்க... கோவிலுக்கு சென்ற இடத்தில் மகாலட்சுமி வெளியிட்ட சிறப்பான பதிவு
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்திற்கு பிறகு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தர் தனது காதல் மனைவியோடு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ரவீந்தர் தான் வெளியிட்ட புகைப்படங்களுக்கு கொடுத்த கேப்ஷன் தான் ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறது.

மகாலட்சுமியின் திடீர் திருமணம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வாசுகி கேரக்டரில் நடித்து வரும் மகாலட்சுமி பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அவர் தற்போது திடீரென்று இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே அவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது திருமணம் பலரையும் வியப்புக்குள் ஆழ்த்தி இருந்தது. காரணம் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்திருந்தது தான். 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் தொகுப்பாளராக இருந்த மகாலட்சுமி இவருக்கு கொஞ்சம் கூட அழகில் பொருத்தம் இல்லாத ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் தங்களுடைய கவலைகளை கமாண்டுகளில் கொட்டி வந்தனர்.

சமூக வலைத்தளத்தை கலக்கும் செய்தி
காதலுக்கு பணமும் அழகும் தேவையில்லை என்று இவர்களுடைய திருமணத்தை வைத்து பலர் மீம்ஸ்களாக சமூக வலைத்தளத்தில் பறக்கவிட்டு வந்தனர். தங்களுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை என்று ஏக்கத்தில் இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமணம் அவர்களுக்கு சிறு ஆறுதல்களை கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர். ஆனால் மகாலட்சுமியின் தீவிரமான ரசிகர்கள் பலர் இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். திருமணம் முடிந்து ஒரு சில வாரங்கள் கடைந்த நிலையில் இவர்கள் செய்தி இன்னும் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம்
தற்போது ரவீந்தர் மகாலட்சுமி இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளனர். திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவருமே பல கோவில்களுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஹனிமூன் சென்று ரசிகர்களை வெறுப்பேற்றுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கோயில்களுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் தற்போது திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட்டபடியே ஜோடியாக போட்டோக்களை எடுத்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி, திருச்செந்தூர் முருகன் துணை..நம்ம எல்லோரும் நல்லா இருப்போம்.. சந்தோஷமாக இருங்க..!! என்று கேப்ஷனோடு புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லையே என்று கூறி வருகிறார்கள்.

ரசிகர்கள் கேள்விகள்
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் திருச்செந்தூர் கோவிலில் பதிவு திருமணம் செய்வதற்காக சென்று உள்ளார்களா?? என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் திடீர் திருமணத்தை திருப்பதி கோவிலில் செய்து முடித்திருந்த நேரத்தில் திருச்செந்தூர் கோவிலில் இவர்கள் எடுத்த புகைப்படத்தில் அருகில் பதிவு திருமண விபரம் என போர்டு இருக்கும் இடத்தில் இவர்கள் சாமி கும்பிட்டபடியே புகைப்படங்களை எடுத்து இருப்பதால் திருச்செந்தூரில் இவர்கள் பதிவு திருமணம் செய்வதற்காக வந்துள்ளார்களா என்று சிலர் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications