மனைவி சொன்னதை செய்த ரவீந்தர்.. இது அடையாளம் இல்லையாம்.. இப்படி ஒரு ஆசையா மகாலட்சுமிக்கு...!!??
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.
தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் மனைவியின் "எளிமையை"பற்றி எளிமையாய் கூறி இருக்கிறார்.
திருமணம் ஆன ஒரு சில நாட்களில் இந்த அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வெளியான புதிய புகைப்படம்
சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்படுத்தி அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்த சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியின் திடீர் திருமணம் குறித்த செய்திகள் இப்போதும் சமூக வலைத்தளத்தில் ஓய்ந்த பாடு இல்லை. இந்த நிலையில் மீண்டும் மாலையும் கழுத்துமாக மகாலட்சுமியும் அவருடைய கணவரான ரவீந்தரும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் என்ன மீண்டும் திருமணமா?? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

புதிய பங்க்ஷன்
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருப்பதியில் எளிமையாக திருமணத்தை முடித்து இருந்தனர். திருமணத்திற்கு பிரபலங்கள் மட்டுமல்லாமல் உறவினர்கள் என அதிகமாக யாரையும் கூப்பிடாத இவர்கள் தற்போது தங்கள் வீட்டிலேயே எளிமையாக திருமாங்கல்யத்தில் மஞ்சள் கயிறு கோர்க்கும் பங்க்ஷனை முடித்து இருக்கிறார்கள். இந்த பங்க்ஷனில் எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் ரவீந்தர் பதிவிட்டு இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்தர் பகிர்ந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மட்டுமில்லாமல் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

கண்டுகொள்ளாத நெகட்டிவ்
ஏற்கனவே திருமணம் முடிந்த மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் காதலித்து தற்போது மீண்டும் திருமணம் செய்து இருக்கின்றனர். இவர்களுடைய கடந்த கால வாழ்க்கை மறந்து போகும் வகையில் இவர்களுடைய புதிய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தாலும், நெட்டிசன்கள் இவர்களுடைய திருமணத்தை வைத்து சமூக வலைத்தளத்தில் பல மீம்ஸ்களை கிளப்பி வருகின்றனர். அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தினமும் தங்களுடைய அன்றாட வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

மகாலட்சுமியை குறித்த பதிவு
திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி தான் நடித்து வந்த அன்பே வா சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தன்னுடைய கணவருடன் கோவில், குளம் என்று சந்தோஷமாக சுற்றி வருகிறார். இந்த நிலையில் இப்போது இவருக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. அதில் ரவீந்தர், "திருமாங்கல்யத்திற்கு மஞ்சள் கயிறு...அது அடையாளம் அல்ல...அவள் கனவும், அவள் வாழ்க்கையும்... நான் கட்டியபோது அவள் சொன்னாள்..."என்று பதிவிட்டு இருக்கிறார். தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ரவீந்திரருக்கு வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் மழை போல பொழிகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications