கையில் குழந்தை.. உடல் எடை குறைந்து, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பவித்ரா லட்சுமி
சென்னை: நடிகை பவித்ரா லட்சுமி கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ஒருவரின் குழந்தையை பவித்ரா லட்சுமி கையில் வைத்திருக்கும் நிலையில் பவித்ரா உடல் எடை குறைந்து இருப்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பவித்ரா லட்சுமி சின்னத்திரை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சோசியல் மீடியா ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சையமானவர்தான். அவருடைய க்யூட்டான அழகுக்கு முன்பு ரசிகர்களும் கண்களுக்கு எதுவுமே பெரிதாக தெரியவில்லை என்று அவருடைய போஸ்டர்களுக்கு ரசிகர்கள் கவிதைகளை கொட்டி வருவதை பார்க்க முடிகிறது.

ஆரம்ப காலம்
பவித்ரா லட்சுமி உயரத்தில் சிறியவராக இருந்தாலும் என்னுடைய திறமை பெரியது என்று நிரூபித்து வருகிறார். பொதுவாக பெண்கள் என்றாலே குட்டையாக இருந்தால் பேரழகி என்று பலர் வர்ணிப்பார்கள். காரணம் குட்டையாக இருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் வயது தெரியாது, அவர்கள் இளமையாக தான் எப்போதும் இருக்கிறார்கள் என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. அது பவித்ரா விஷயத்தில் உண்மை என்று பலரும் கூறி இருக்கிறார்கள்.
சினிமாவில் அறிமுகம்
பவித்ரா மாடலிங்கில் காலடி எடுத்து வைத்து அழகு போட்டிகளிலும் பங்கேற்று இருக்கிறார். அதிலும் 2016 ஆம் ஆண்டு மெட்ராஸ் ராணி என்னும் பட்டத்தை பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்புத்தூர் தான் இவருடைய சொந்த ஊர். தமிழ் பெண்களும் நடிப்பில் சளைத்தவர் அல்ல என்று பவித்ரா லட்சுமி நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இவர் டைம் என்ன பாஸ் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தார்.
அம்மாவின் இழப்பு
அதுபோல பல ஷார்ட் பிலிம்களிலும் நடித்து இளைஞர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார். பவித்ரா படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிவிட்டார். பவித்ராவின் சின்ன வயதிலேயே அவருடைய அப்பா இறந்துவிட்டார். ஆனாலும் அவருடைய அம்மாவின் அரவணைப்போடு வளர்ந்த நிலையில் கடந்த வருடத்தில் அவருடைய அம்மா காலமான செய்தி அவருடைய ரசிகர்களை வருத்தம் அடைய செய்து வைத்திருந்தது.

வாக்குவாதம்
இத்தனை நாட்களாக துணையாக இருந்த ஒரே உறவும் இன்றி பவித்ரா தனியாக தவித்து வருவது குறித்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். பவித்ரா அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட அவர் வீட்டில் வளர்த்து வரும் நாய் தனியார் நிறுவனம் ஒன்றில் கவனிக்க விடப்பட்டிருந்த போது நாய்க்கு ட்ரிம்மர் போடும் போது காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்த ட்ரெயினருடன் பவித்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இது வைரல் ஆகி வருகிறது.
பவித்ராவின் போட்டோஸ்
அதைத்தொடர்ந்து இப்போது பவித்ரா கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது நடிகர் ரியாஸ் என்பவரின் குழந்தையாம். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கும் நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று இருந்த பவித்ரா அந்த குழந்தையை கொஞ்சி விளையாடியிருக்கிறார்.

ரசிகர்களின் அட்வைஸ்
ஆனால் பவித்ரா உடல் எடை குறைந்து இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் பவித்ராவுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி உடல் எடை குறைந்துவிட்டார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதோடு பவித்ரா உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது பலருடைய உரிமையான அட்வைஸ் ஆக இருக்கிறது.
-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications