எங்க வீட்டில் விசேஷம்! மகள் வீடியோ காலில் சொன்ன விஷயம்.. குழந்தை போல துள்ளி குதித்த நடிகை ராதா
சென்னை: நடிகை ராதாவின் 61வது பிறந்தநாளுக்கு அவருடைய மகள் வீடியோ கால் மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை ராதா வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
80s களின் காதல் இளவரசியாக வலம் வந்த ராதா திருவனந்தபுரம் கல்ராணி கிராமத்தை சேர்ந்தவர். நடிகை அம்பிகாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அம்பிகா தமிழ் மட்டுமல்லாமல் பலமொழிகளிலும் நடித்திருந்தார். அதனாலயே வீட்டிலேயே தனக்கு திரைதுறையில் ஒரு போட்டியாளருடன் ராதா சினிமாவில் அறிமுகமானார். ராதா சினிமாவில் அறிமுகமாகும் காலத்தில் அம்பிகா சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தார்.

நடிகை ராதாவின் அறிமுகம்
ராதாவுக்கு அறிமுகத்தை கொடுத்தது பாரதிராஜா தான். "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்தில் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், ஏழை பிராமண வகுப்பு சேர்ந்த ஆணும் காதலிப்பார்கள். பிறகு அவர்களுடைய திருமணத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக மேரி எனும் கேரக்டரில் ராதா அறிமுகமானார். முதல் திரைப்படமே இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்துவிட்டது.
நடிகை ராதா நடித்த திரைப்படம்
யார்டா.. இந்த பொண்ணு என்று சொல்லும் அளவிற்கு ராதாவின் நடிப்பு எதார்த்தமாக இருந்தது. அதற்கு பிறகு அறுபது வயதான கேரக்டரில் நடித்த சிவாஜிக்கு ஜோடியாக ராதா "முதல் மரியாதை" திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் எந்த நடிகைகளுமே அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றால் யோசிக்க மாட்டார்கள். ஆனால் ராதா அறிமுகமான சில வருடங்களிலேயே இவ்வளவு பெரிய ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
நடிகை ராதா கணவர்
அடுத்ததாக வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்ல திறந்தது கதவு, இதய கோவில், ஜல்லிக்கட்டு, ஜப்பானில் கல்யாணராமன் உட்பட ஏராளமான தமிழ் படங்களில் தன்னுடைய வெற்றியை நிலை நிறுத்தி இருந்தார். 1991 ஆம் ஆண்டு ராஜசேகர் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்தார்.

ரியாலிட்டி நிகழ்ச்சியில் ராதா
பிறகு சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கெடுக்க தொடங்கினார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் கார்த்திகா "கோ" படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்கள் தொடர்ந்து நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு அது வெற்றி கிடைக்கவில்லை. அதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கணவர் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.
நடிகை ராதாவின் மகள்கள்
இரண்டாவது மகள் "கடல்" திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அவரும் அதற்குப் பிறகு பெரிதாக திரைப்படங்களிலும் தலைகாட்டாமல் சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டார். இந்த நிலையில் ராதா நேற்று ஜூன் மூன்றாம் தேதி தன்னுடைய 61 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது ராதாவிற்கு அவருடைய மகள் கார்த்திகா சர்ப்ரைஸாக வீடியோ கால் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
நடிகை ராதா பிறந்தநாள்
அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷமாக ராதா பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த பதிவில் "நான் எத்தனை மெழுகுவர்த்திகளை ஊதினாலும் பிறந்தநாள் எப்போதும் என்னை இளமையாக உணர வைக்கிறது. குறிப்பாக என் அன்பிற்குரியவர்களிடமிருந்து வரும் அனைத்து அழகான பரிசுகளுடனும் என்னுடைய பிறந்தநாள் சந்தோஷமாக இருக்கிறது" என்று அந்த பதிவில் ராதா குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு சிவப்பு வண்ண உடையில் ராதா கேக் வெட்டிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராதாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications