"அந்த ரிசல்ட்" தெருவிலே அடித்த அப்பா.. பணத்திற்காக அம்மாவின் கேள்வி..நடிக்க காரணம்?மனம் திறந்த ஷகிலா
சென்னை: நடிகை சகிலா தான் சினிமாவில் நடிப்பதற்கு என்ன காரணம் ஏன்பதை பற்றிய முதல் முறையாக பேசி இருக்கிறார்.
குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டம் மற்றும் தந்தையின் அடாவடி தனம் அது மட்டுமல்லாமல் தாய் கேட்ட கேள்வி என ஷகிலா பேசிய வார்த்தை ரசிகர்களை அதிகமாக ஃபீல் பன்ன வைத்திருக்கிறதாம்.
படிப்பு வராததால் தெருவிலே ஷகிலாவின் தந்தை அடித்த நிலையில் அங்கே வந்த மேக்கப் மேன் ஒருவரின் உதவியால் சகிலாவை திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

கேரக்டரை மாற்றிய நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமான ஷகிலா அதற்கு முன்பு வெள்ளி திரையில் அதுவும் இளைஞர்களை கவரும் விதத்தில் பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகை ஆக நடித்து பிரபலமடைந்திருக்கிறார். இவருடைய பெயரையும் கேரக்டரையும் மாற்றி காட்டியது என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருடைய இன்னொரு முகமே ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு இவர் ஒரு திரைப்படத்தில் சில நிமிடங்களில் வந்தாலும் இவருடைய கேரக்டர் வேற மாதிரி தான் சித்திகரிக்கப்பட்டது அதைத்தான் ரசிகர்களும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவருடைய மாறுபட்ட பல திறமைகள் ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

முதல் திரைப்பட வாய்ப்பு
இந்த நிலையில், தான் சினிமாவிற்கு எப்படி வந்தேன் என்றும், எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்பதை பற்றியும் உணர்வு பூர்வமாக பேசி இருக்கிறார். அதில் இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது இரண்டு பாடங்களில் மட்டும் தான் பாஸாகி இருந்தாராம் மீதம் உள்ள அனைத்து பாடங்களிலும் இவர் ஃபெயில் ஆகிவிட்டாராம். இதனால் இவருடைய தந்தை இவர் மீது கோபத்தில் அதிகமாக அடித்துவிட்டாராம். அதற்கு பிறகு வீட்டில் இருந்து பத்தாம் வகுப்பு எக்ஸாம் எழுதிருந்தாராம். ஆனால் அதிலும் இவர் பெயல் ஆகிவிட்டதால் ரோட்டிலேயே இவருடைய தந்தை அதிகமாக அடித்து துவைத்து இருக்கிறார். அப்போது பக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே வந்த மேக்கப் மேன் இவருடைய தந்தையை தடுத்து நிறுத்தி இருந்தார்களாம்.

முதல் சம்பளம்
மேக்கப் மேன் உமாசங்கர் என்பவர் ஷகீலாவின் அப்பாவிடம் இவரை நடிக்க வைத்தீர்களா? என கேட்டதற்கு அவர் அதற்கு சரி என்று சபதம் தெரிவித்தார். முதல் திரைப்படத்தில் நடிகை சில்க் சுமிதாவின் சகோதரியாக ஷகீலா நடித்து இருக்கிறாரா? ஒரு சிலர் நாட்கள் கழித்து அதே திரைப்படத்தில் ஷகிலாவின் தங்கைக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாம். இருவரும் ஒரே திரைப்படத்தில் நடிக்க, வீட்டு வாடகை 25 ஆயிரம் கொடுக்கப்பட வேண்டியது இருந்ததாம். கூட்டு குடும்பமாக வாழ்ந்தாலும் இவருடைய வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத வகையில் தான் இருந்தாராம்.முதல் திரைப்படத்தில் இவருக்கு 7500 சம்பளம் கிடைத்ததாம். அதுபோல இவருடைய சகோதரிக்கு கிடைத்திருந்தாலும் அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லாம். ஆனால் ஷகிலா அவருடைய மொத்த பணத்தை அப்படியே அவருடைய அப்பாவிடம் கொடுத்து விட்டு வாடகை கொடுக்க வைத்திருந்தார்.

சொந்தக்காரர்களுக்கு பதிலடி
அதற்குப் பிறகு ஷகிலாவின் பல திரைப்படங்களை பார்த்து அவருடைய குடும்பத்தினர் பலர் இவருடைய கேரக்டரை பற்றி தப்பாக பேச தொடங்கியதும் இவருடைய தந்தை கூட பல நேரங்களில் இந்த மாதிரி திரைப்படங்கள் வேண்டாம் என்று ஷகிலாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாராம். ஆனால் நான் நடிக்கப் மட்டும் தான் செய்கிறேன். அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இதை விட்டுவிட்டால் யாரு சோறு போடுவார்கள்? சொந்தக்காரர்கள் இதுவரைக்கும் நமக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அதுவும் கஷ்டப்பட்ட காலத்தில் அறவே எட்டிக் கூட பார்க்கவில்லை. அவர்கள் பேச்சை எதற்காக கேட்க வேண்டும் என்று இவர் கோபத்தோடு அவருடைய வேலையை தொடர்ந்து வந்தாராம்.

பணத்திற்காக அம்மாவின் செயல்
திடீரென்று சகிலாவின் அப்பா இறந்ததும் ஷகிலாவிற்கு என்ன செய்வது என்றே தெரியாமல் எல்லா பிரச்சனைகளையும் அவருடைய அப்பா தான் பார்த்து வந்தாராம். அதனால் அப்பா இறந்த பிறகு எட்டு மாதங்கள் இவர் வீட்டிலேயே சும்மா இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் இவருடைய அம்மாவை இப்படி வீட்டில் இருந்து இருந்தால் என்ன செய்வது? வேலை ஏதும் பார்க்க வேண்டாமா என்று திட்ட தொடங்கி விட்டாராம். அதுமட்டுமல்லாமல் இவருக்கு ஒரு திரைப்படத்தில் நடிப்ப வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த திரைப்படத்தில் 30 வயது ஆன்ட்டியை ஒரு இளைஞர் லவ் பண்ணுவது போல இருக்குமாம் அப்போது எனக்கு 23 வயது தான் ஆகிறது எப்படி இப்படி ஒரு கதையில் நடிப்பது என்று இவர் வேண்டாம் என்று சொன்னாலும், இவருடைய அம்மா பணத்திற்காக இவரை வந்த வாய்ப்பையும் விட்டுவிட்டுட்டாயே என திட்டிக் கொண்டிருந்தாராம். அதனாலே அந்த திரைப்படத்தில் பிறகு இவர் சம்மதம் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications