Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாயா படத்தில் சாய்பாபாவாக நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இது பையன் இல்ல பொண்ணு தான்.. ஆனால்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் நக்மா உட்பட பலர் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு மாயா என்ற திரைப்படத்தை ராமநாராயணன் இயக்கியிருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. பிறகு சில வருடங்களுக்கு முன்பு இதே நிறுவனம் மாயா என்ற பெயரில் நடிகை நயன்தாராவை வைத்து ஒரு பேய் படத்தை தயாரித்திருந்தனர். ஆனால் முதலில் வெளிவந்த மாயா திரைப்படத்தில் நெப்போலியன் மகனாகவும் சாய்பாபாவாக கேரக்டரில் நடித்த நடிகையை பற்றிய தகவலை விரிவாக பார்க்கலாம்.

90ஸ் காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்கள் இப்போதும் பலருடைய பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் காதல் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பக்தி படங்களாகவும் பலரையும் மிரட்டும் பேய் படங்களும் வெளியானது. அப்போது 1999 ஆம் ஆண்டு சாய்பாபாவை மையமாக வைத்து வெளிவந்த படம் தான் மாயா. இந்த திரைப்படத்தை ராமநாராயணன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் நெப்போலியன், நக்மா, ராமி ரெட்டி, வடிவுக்கரசி உட்பட பலர் நடித்திருந்தனர்.

Napoleon Sheela Kapoor Arun Vijay

அந்த சமயத்தில் பலரும் சாய்பாபாவை வழிபட ஆரம்பித்து இருந்த நேரத்தில் இந்த படம் பலருடைய மனதையும் கவர்ந்தது. இந்த திரைப்படத்தில் எஸ்பிபி பாலசுப்ரமணியன் சாய்பாபாவின் தீவிர பக்தராக நடித்திருந்தார். அதுபோல நெப்போலியன் மகனாக ஜெயசூர்யா என்று கேரக்டரில் நடிகை ஷீலா கபூர் என்பவர் நடித்திருந்தார். எல்லோரும் அந்த ஜெயசூர்யா கேரக்டரை பார்த்ததும் அது ஆண் குழந்தை என்று நினைத்தனர் ஆனால் அது ஷீலா கபூர் என்பது பலருக்கு தெரியாது.

மாயா திரைப்படத்தின் கதையைப் பார்க்கும்போது இந்த அந்த படம் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே இதுபோல ஒரு படத்தில் பிரபு கதாநாயகனாக நடித்திருப்பார். ஆனால் அது வேறு விதமாக இருக்கும். இந்த மாயா திரைப்படத்தில் நெப்போலியன் தன்னுடைய மகன் மற்றும் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பார். ஒருமுறை அவர் வெளியூர் செல்லும் போது ஒரு மந்திரவாதியிடம் மாட்டிக் கொள்வார்.

Napoleon Sheela Kapoor Arun Vijay

அந்த மந்திரவாதி தான் இளமையாக இருக்க வேண்டும் என்று நெப்போலியன் உடலுக்குள் வந்து அவருடைய மகனை கொல்ல வேண்டும் என்று முயற்சிகள் செய்வார். நெப்போலியனின் மகன் ஒரு அபூர்வ குழந்தை என்பதால் அந்த குழந்தையை கொல்வதற்காக நெப்போலியன் வீட்டிற்குள் நக்மாவின் உறவினர்களாக இருக்கும் ராமி ரெட்டி மற்றும் வடிவுக்கரசியும் முயற்சி செய்வார்கள். ஆனால் நக்மா தீவிரமான பாபா பக்தை என்பதால் அவருக்காக பாபாவே அந்த குழந்தையை காப்பதற்கு முயற்சிகள் செய்வார். பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

ஷீலா கபூர் 1994 ஆம் ஆண்டு ராஜகுமாரன் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுபோல ஆயுத பூஜை, விஜயுடன் பூவே உனக்காக உட்பட பல படங்களில் நடித்திருந்தார். மாயா படத்தில் தான் அவர் ஆண் வேடத்தில் நடித்திருந்தார். அதுபோல நந்தா படத்தில் சூர்யாவின் தங்கையாகவும் நடித்திருப்பார். உன்னை நினைத்து படத்தில் சினேகாவின் தங்கையாக நடித்திருந்தார்.

அது மட்டும் அல்லாமல் டி ராஜேந்தர் உடன் வீராச்சாமி படத்தில் நடித்தார். அவர் நடித்த அதிகமான திரைப்படங்களில் தங்கை, பிரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் சீனா தானா படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுபோல நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக வேதா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் பெரிதாக தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அப்போது புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+