
போதும் இதோடு நிறுத்திக்கிங்க.. சின்னத்திரை நடிகையின் போட்டோ சூட்டுக்கு 90ஸ் கிட்ஸ்களின் புலம்பல்கள்
சென்னை: சீரியல் நடிகை ஆன சுபலட்சுமி தற்போது தான் திருமணம் செய்துள்ளார் திருமணத்திற்கு பிறகு அவர் எடுத்த போட்டோ சூட் தான் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
போட்டோ சூட் என்கிற பெயரில் இப்படியா போஸ் கொடுத்து பார்ப்பவர்களுக்கு ஏக்கத்தை மூட்டுவது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு எடுக்கும் புகைப்படத்தால் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சிலர் ஜோசியம் சொல்லியும் வருகிறார்கள்.
சாமி சிலையை எப்படி தொடலாம்? தலித் இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்.. உ.பியில் கொடூரம்!

பரவி வரும் போட்டோ சூட் ஆசை
தற்போதைய சூழ்நிலையில் பலரும் போட்டோ சூட் எடுப்பதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர் குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு மகிழ்ச்சியான நினைவுகளையும் போட்டோ ஷூட் மூலமாக பத்திரப்படுத்தி வருகிறார்கள் இன்னும் ஒரு சிலர் அதில் வித்தியாசமாக செய்கிறோம் என்று பார்ப்பவர்கள் எல்லாம் பொறாமை படுகின்ற மாதிரி சில நேரங்களில் செய்து விடுகின்றனர் அந்த மாதிரி தான் தற்போது கூட சீரியல் நடிகை ஆன சுபலட்சுமி வெளியிட்ட போட்டோக்கள் இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் திருமணம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த அழகிய தமிழ் மகள் சீரியலில் வில்லியாக நடித்து வந்த சுபலட்சுமி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமதி ஹிட்லர் என்னும் சீரியலிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் என பலவற்றில் இவர் நடித்திருக்கிறார். நடிக்கும் சீரியல் எல்லாம் இவருக்கு நெகட்டிவ் கேரக்டரே வருவதால் இவர் தற்போது இந்த சீரியலை விட்டு விலகி விட்டதாக கூறப்படுகிறது.திரைப்படங்களில் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது தான் திருமணம் செய்துள்ளார்.

ரசிகர்களின் கேள்விகள்
சுபலட்சுமியின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுபலட்சுமி தன்னுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும் அதற்கு அதிகமான வாழ்த்துக்களும், லைக்குகளும் கிடைத்து வந்தது. இவர் சீரியலை விட்டு விலகி விட்டதால் இவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இவரிடம் எதற்காக சீரியலை விட்டு விலகினார் என்று கேள்விகளை கேட்டு வந்தனர். ஆனால் அதைப் பற்றி எந்த பதிலும் கூறாமல் இருந்து வந்த இவர் தற்போது போட்டோ சூட் மூலமாக ரசிகர்களின் மனதில் மேலும் கேள்விகளை உருவாக்கி இருக்கிறார்.

அட இப்படி எல்லாம் பண்ணலாமா
திருமணத்திற்கு பிறகு இவர் அவருடைய கணவருடன் ப்ரீ வெட்டிங் சூட் புகைப்படங்களை எடுத்து இருந்தார். அது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேல் சட்டை அணியாமல் இவருடைய கணவர் நின்று இருக்க அவருடைய கண்ணம், நெற்றி, வாய் என ஒவ்வொரு இடமாக இவர் முத்தம் கொடுக்கும் வீடியோக்கள் வேற லெவலில் வைரல் ஆக வந்தது. அதுவரைக்கும் இவரை தெரியாமல் இருந்தவர்கள் கூட இந்த வீடியோவை பார்த்த பிறகு யார் இவர் என்று இவருடைய ஐடியை சர்ச் பண்ணி பார்த்திருக்கிறார்களாம். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு கலர்ஃபுல்லான போட்டோ சூட் எடுத்து இருக்கிறார். அதில் இவர் தன்னுடைய கணவருக்கு அன்பை தெரிவிக்கும் விதமாக முத்த மழைகளை பொழிந்து இருப்பதை பார்த்து, காண்டான 90ஸ் கிட்ஸ்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.