விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு ஜோடி நாட்டாமை டீச்சர் பொண்ணு.. சரத்குமாரும் இருக்கிறாரே!
சென்னை: நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்த நடிகை ராணியை 90ஸ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. இப்போது அவர் சீரியல்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய மகள் தர்னிகா விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக கொம்பு சீவி படத்தில் நடித்திருக்கிறார்.
பொதுவாக ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் பெரிய அளவில் பெயர் வாங்குகிறார்கள். சின்ன கேரக்டரில் வந்தாலும் கூட அவர்களுடைய கேரக்டர் எப்போதும் அவர்களுக்கு அடையாளம் கொடுக்கிற மாதிரியே இருக்கிறது. ஆனாலும் ஒரு சில படங்களோடு அந்த நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகை ராணி.

நடிகை ராணி 90ஸ் காலகட்டத்தில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளிலும் பல படங்களில் நடித்திருந்தார். 1992 ஆம் ஆண்டு ஜானி பட்கர் என்ற மலையாள படம் மூலம் தான் சினிமாவுக்கு நுழைந்தார். அதே ஆண்டில் ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் மூலம் கதாநாயகியாக நடிக்க தொடங்கி இருந்தார். அந்த படத்தில் வந்த "கலைவாணியோ.. ராணியோ" என்ற பாடல் அவருக்கே வைக்கப்பட்டது போல அவ்வளவு அழகாக இருக்கும்.
இப்போது கூட இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் கூட இவருடைய சிரிப்பு மற்றும் கண்ணழகை பாராட்டுவார்கள். அந்த அளவிற்கு அழகு சிலையாக இருந்த ராணி வில்லுப்பாட்டுக்காரன் படத்திற்கு பிறகு ஐ லவ் இந்தியா, நாட்டாமை, பதவி பிரமாணம், நம்ம அண்ணாச்சி, ராசையா, கர்ணா அந்த நாள், ஔவை சண்முகி என பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் அதில் நாட்டாமை படத்தில் நடித்த டீச்சர் கேரக்டர் இவருக்கு ஒரு பெரிய திருப்பத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது.
நாட்டாமை திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் நெகட்டிவ் கலந்த கவர்ச்சியான ஒரு கேரக்டராக தான் இருந்தது. ஆனாலும் அந்த பெயரை சொன்னால் இப்போதும் பலர் உச்சி கொட்டுவார்கள். அதுபோல அவ்வை சண்முகி படத்தில் கௌசல்யா என்ற ஜெமினி கணேசன் வீட்டு வேலைக்கார பெண் கேரக்டரில் நடித்திருந்தார்.
கதாநாயகியாக நடித்த இவர் பிறகு கவர்ச்சி ரூட்டுக்கு மாறி காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய் பாடல் மூலம் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட தொடங்கினார். நெஞ்சினிலே, உயிரினில் கலந்தது, காதல் சடுகுடு வர்ணஜாலம் பந்தயம், ருத்ரமாதேவி போன்ற பல படங்களில் நடித்திருந்தார் அதிலும் ஜெமினி படத்தில் காமினி என்ற கேரக்டரில் ஓ போடு பாடல் இவருக்கு மீண்டும் ஒரு பிரபலத்தை கொடுத்தது.
இப்போது ராணி சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் ராணியின் மகள் தரனிகா நடிகர் விஜயகாந்தின் மகன் நடிக்கும் கொம்பு சீவி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தை இயக்கும் இயக்குனர் பொன்ராம் இதற்கு முன்பு திருத்தம் என்ற படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார்.
அதற்கு பிறகு பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றது. அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமா ராஜா, எம்ஜிஆர் மகன் போன்ற படங்களை இயக்கியிருந்தார் சிவகார்த்திகேயனை வைத்து அவர் மூன்று படங்களை இயக்கி வெற்றியும் பெற்றிருந்தது. அந்த வரிசையில் இப்போது கொம்பு சீவி படத்தை அவர் இயக்கியிருப்பதால் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியன் உடன் நடிகர் சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள். சரத்குமார் உடன் ராணி பல படங்களில் நடித்திருக்கிறார் இப்போது அவருடைய மகளும் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறார். இது எந்த அளவிற்கு வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. கொம்பு சீவி படம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications