புற்றுநோய் சிகிச்சைக்கு மத்தியில் நடிகை உமாசங்கரி உருக்கமான பதிவு.. தீபாவளி நாளில் நெகிழ்ச்சி
சென்னை: 90ஸ் காலகட்டத்தில் ஹீரோயினாக மட்டுமல்லாமல், நடிகர் விஜயகாந்துக்கு தங்கச்சியாக சொக்கத்தங்கம் படத்தில் மரகதம் கேரக்டரில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. பல வருடங்கள் கழித்து சமீபத்தில் அவர் தனக்கு புற்றுநோய் இருப்பதாக உருக்கமாக வெளியிட்ட பதிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இப்போது அவர் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி வெளியிட்ட பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
உமா சங்கரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் "அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்து இருக்கட்டும். இனிய தீபாவளி" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவருடைய அம்மா கணவர் மற்றும் உறவினர்கள் என பலரும் இருக்கின்றனர். இவர்களின் துணையால் தான் நான் புற்று நோயுடன் போராடி கொண்டிருக்கிறேன் என்று சொல்வது போலத்தான் அவர் அந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை உமா சங்கரி பதிவு
உமா சங்கரியின் இந்த போட்டோ பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. காரணம் கடந்து ஜூன், ஜூலை மாதங்களில் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டதும் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். எப்போதும் சிரித்த முகமாக படங்களிலும், பேட்டிகளிலும் பார்த்த இவருக்கு இப்படியா ஆகணும் என்று பலரும் வருத்தப்பட்டு வந்தனர். சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லியாகவே நடித்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு சீரியல் மற்றும் சினிமாவை விட்டு விலகி இருந்தவர், திடீரென தனக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்ததும் அவர் விரைவில் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று பலரும் அவருக்காக வேண்டிக் கொண்டனர்.

நடிகை சுமித்ரா மகள்
அது போல நடிகை உமா மகேஸ்வரி நடிகை சுமித்ராவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். சுமித்ரா ரஜினி, கமலுக்கு ஜோடியாகவும், பிறகு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். அதுபோல கருப்பு படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் உமா சங்கரி சத்யராஜ் நடித்த வீரநடை படத்தில் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அர்ஜுனுடன் வானவில், முரளியுடன் கடல் பூக்கள் உட்பட தென்றல், கோவை பிரதர்ஸ் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழிகளிலும் நடித்திருந்தார். ஒரு காலத்தில் திரையில் பார்த்த நடிகை இப்போ புற்றுநோயுடன் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களுக்கு வருத்தமான விஷயம் தான். அதே நேரத்தில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ச்சியாக அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது, நீங்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று பலரும் அவருக்கு கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர். தலையில் ஷால் போட்டு மூடி இருக்கிறார் அதை பார்க்கும்போது வருத்தமாக இருந்தாலும் இவரின் சந்தோஷமான முகத்தை எப்போதும் பார்க்க வேண்டும் என்றும் பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
