Ajith: "ப்ளேடால் என் கையை கீறிட்டாங்க" மகனை ஸ்கூலுக்கு கூட கூட்டிட்டு போக முடியல! கண்ணீருடன் அஜித்
சென்னை: தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக உலா வரும் நடிகர் அஜித்குமார், கடந்த ஓராண்டாகத் தனதுப் பெரிய ஆர்வமான கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். பொதுவெளியில் வருவதைத் தவிர்த்து வரும் அஜித்குமார், தற்போதுத் தனியார்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரசிகர்கள் மத்தியில் நடந்த சோகமான சம்பவம், மகனின் ஏக்கம் மற்றும் உடல்நலப் போராட்டங்கள் குறித்து மனம் திறந்துப் பேசியுள்ளார்.

அஜித்தின் வாழ்க்கை பயோகிராபி
தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் நடித்துள்ள அஜித் குமார், ஆரம்பத்தில் சில தோல்விகளைச் சந்தித்தாலும், தனது விடாமுயற்சியால் இன்று 'தல' மற்றும் 'அல்டிமேட் ஸ்டார்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். நடிகை ஷாலினியைத் திருமணம் செய்துகொண்ட அஜித்துக்கு, அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
தற்போதைய ஆர்வம்
நடிப்புக்கு அப்பால், கார் ரேஸிங், பைக் ட்ரிப்கள் மற்றும் ஏரோ மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அஜித்குமார் தனது பேட்டியில், ரசிகர்களின் அன்பின் பெயரால் தனக்கு ஏற்பட்ட வலியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 2005ஆம் ஆண்டு இது நடந்தது. ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கை கொடுக்க விரும்பினார்கள். நான் காரின் உள்ளே சென்று பார்த்தபோது கையில் இருந்து ரத்தம் வழிகிறது. அதன்பிறகுதான் எனக்குத் தெரிந்தது. ப்ளேடால் கையை கீறியுள்ளார்கள் என்பதை உணர்ந்தேன்" என்று அஜித் உருக்கமாகப் பேசியுள்ளார்.
பேசும் பொருளாக மாறியது ரசிகர்களுடனான இந்தப் பழங்காலச் சம்பவம், தற்போது இணையத்தில்ப் பேசுபொருளாக மாறியுள்ளது. அதோடு தனது மகன் ஆத்விக் ஏன் பள்ளிக்குத் தன்னை அழைக்க வரவில்லை என்று கேட்டபோது தான் எதிர்கொண்டக் கடினமானச் சூழ்நிலையையும் அஜித் விவரித்துள்ளார். "எனது மகன் அழுதுகொண்டே என்னிடம் கேட்பான். 'அப்பா நீங்கள் ஏன் மற்ற அப்பாக்களைப் போல, என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறீர்கள்?' என்று கேட்பான். உங்களுக்கேத் தெரியும், இந்தியாவில் நான் கார் ஓட்ட இயலாது."
பாதுகாப்பு பிரச்சனை
"ஒருவேளை நான் யாராலும் கவனிக்கப்பட்டால், 50, 60 பைக்குகள் போட்டோ எடுக்கப் பின்தொடர்ந்து வரும். அப்படி நடந்தால் அனைவரது உயிர்களும் ஆபத்தில் சிக்கும்" என்று அஜித் வருத்தத்துடன் கூறியுள்ளார். "துரதிஷ்டவசமாக மற்ற ஓட்டுனர்களைப் போல நானும் மோசமான விபத்துகளில் சிக்குகிறேன். ஆனால், நான் ஒரு நடிகர் என்பதால் மக்கள் நான் எப்போதும் விபத்தில் சிக்குவதாக நினைக்கிறார்கள்." "திரையுலகில் மட்டும் எனக்கு 129 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. நான் ஒரு பாசிட்டிவ் எண்ணம் கொண்ட நபர்" என்றும் அவர் கூறியுள்ளார்.
தாக்கத்தை ஏற்படுத்தும் பேச்சு
அஜித்குமார் பொதுவாகப் பொதுவெளியில் பேட்டி அளிப்பதைத் தவிர்த்து வந்தார். கடந்த காலத்தில், கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் "நடிகர்களைக் கட்டாயப்படுத்தி விழாக்களில் பங்கேற்க வைக்கின்றனர்" என்று அவர் பேசியது பெரும் பரபரப்பை உண்டாகியது. சமீபகாலமாக அவர் கார் ரேஸிங்கில் பங்கேற்று வரும் சூழலில், தொடர்ந்துப் பேட்டிகள் அளித்து வருகிறார். சமீபத்தில் நடந்தக் கரூர் துயர சம்பவம் குறித்தும், திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம் குறித்தும், ரசிகர்கள் மோதல் குறித்தும் அஜித் அறிவுரைகளை வழங்கியுள்ளார். ரசிகர்களை வழிநடத்தும் நோக்கில் அவர் இவ்வாறு பேசியிருப்பது, பலரின் பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
-
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான்












Click it and Unblock the Notifications