ஆலியா...இந்த நேரத்துல இது தேவையா?? ஆட்டம் போட்ட ஆல்யாவுக்கு அறிவுரை கூறும் ரசிகர்கள்
சென்னை: கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் குத்தாட்டம் போட்ட ஆல்யாவிற்கு ரசிகர்கள் அறிவுரைகளை கூறி வருகின்றனர்.
ஆடிய கால் சும்மா இருக்காது என்று சொல்வது இதுதானா என்று ரசிகர்கள் ஆல்யாவை கலாய்த்து வருகின்றனர்.
ஆலியா மானசா வின் டான்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் அறிவுரை
ஆலியா வின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ டான்ஸை பார்த்த வலைதள வாசிகள்.. மாசமா இருக்கிற இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா...! என்று புலம்பி வருவதோடு மட்டுமின்றி, அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

காதல் திருமணம்
'ஆர் ஜே',டான்சர்,என்று வெரைட்டி.. வெரைட்டியான.. பெர்பாமன்ஸ் பண்ணியிருந்தாலும், விஜய் டிவியின் 'ராஜா ராணி'சீரியல் 'செம்பா' கேரக்டரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அனைவருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் ஆலியா. அந்த அளவிற்கு இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்த அந்த கேரக்டரில் இவர் அசத்தியிருந்தார். இவர் தன்னுடன் 'ராஜா ராணி' சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவையே ரியலிலும் காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்குப் பின்பும் சரி, இந்த ஜோடிகள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
சஞ்சீவ்-ஆல்யா ஜோடிகளின் ரொமான்டிக் வீடியோக்களும்,இருவரும் மாறி .. மாறி .. பாசமழை பொழியும் நிகழ்வு பதிவுகளும் சமூக வலைதளங்களில் இவர்களது பாலோயர்களிடம் வரவேற்பு பெற்றாலும், அய்யய்யோ..! இவங்களா...?! இவங்களுக்கு வேற வேலையே.. இல்லையா..? என்று பலரை சலிப்படையும் செய்திருந்தது. அந்த அளவிற்கு..நின்னால் வீடியோ, உட்கார்ந்தா வீடியோ, நடந்தால் வீடியோ என்று இன்ஸ்டாகிராமுக்கு ஓயாமல் வேலை கொடுத்து வந்தனர்.

கலக்கும் ரீல்ஸ் வீடியோ
பாப்பு.. பாப்பு.. என்று சஞ்சீவ் இவரை அழைக்கின்ற காரணத்தினாலோ..? என்னவோ..? கொஞ்சிக் கொஞ்சி குழந்தைபோல் பேசுவதும்,தமிழ் ரசிகர்களை கவரும் அளவிற்கு ஹோம்லி லுக்கில் இருந்தாலும், லேட் ரீயாக்சன் போன்றவற்றால்.. 'வாங்குற காசுக்கு மேல நடிக்கிறாங்க...ப்பா' என்று சில சமயங்களில் நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு ஆளாகிவிடுகிறார். தற்பொழுது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் ஆலியா,அதைக் குறித்து எந்தவித தயக்கமோ,பயமோ இன்றி,ரீல்ஸ் வீடியோ பாடலுக்கு போட்டுள்ள டான்ஸ் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த நேரத்தில் இந்த அளவிற்கு கடுமையான ஸ்டாப்புகளை போடவேண்டாம் என்று இவரது ரசிகர்கள் இவருக்கு அறிவுரை வழங்கி வந்தாலும், இப்படித்தான் வீடியோ போடுவாரு... ஆலயா, குறை சொல்லாமல் ...பாருயா என்று ஆலியாவின் ரசிகர்கள் வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications