கணவன் எவ்வழியோ மனைவியும் அவ்வழி.. ஆலியா எடுத்த திடீர் முடிவு.. காரணம் இதுதானா!!??
சென்னை: விஜய் டிவியின் செட் ப்ராப்பர்ட்டி செலிபிரிட்டியாகவே இருந்து வந்த ஆல்யா மான்ஸா, தனது புதிய சீரியலுக்காக சன் டிவி பக்கம் கவனத்தை திருப்பி இருப்பது சின்னத்திரை பார்வையாளர்களிடையே பல யூகங்களை கிளப்பியுள்ளது. ஏற்கனவே விஜே அர்ச்சனா வேறு விஜய் டிவியில் இருந்து மாறி ஜீ தமிழ் சேனல் கிளம்பி விட்டதால், இதுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்..!!?? என்று நெட்டிசன்கள் பல கேள்விகளை கிளப்பி வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் ஆல்யா மானசாவின் சின்னத்திரை மறுபிரவேசத்தை வரவேற்க அவரது ரசிகர்கள் இப்பொழுதே தயாராகி விட்டனர்.
புது சீரியலில் என்ன மாதிரி கேரக்டரில் ஆலியா நடிப்பார் என்று ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் விவாதங்களை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே ஆலியாவின் கணவரும் சன் டிவியின் பக்கம் இருப்பதால் ஆலியாவும் அந்தப் பக்கம் சரிந்து விட்டாரோ என பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

சின்னத்திரை காதல் ஜோடிகள்
என்னதான் உயிரைக் கொடுத்து விஜய் டிவி டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பல வித விதமான பெர்பாமன்ஸ் களை செய்திருந்தாலும், "சின்னையா.. சின்னையா.." என்று அழைத்துக் கொண்டு புல் மேக்கப்புடன் சாதாரண வேலைக்கார பெண்ணாக நடித்து, ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்தான் ஆல்யா மான்ஸா, தன்னுடன் நடித்த சஞ்சீவை காதல் திருமணம் செய்து கொண்டு, அழகான காதல் ஜோடிகளாக சின்னத்திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் கொடுத்த ரீ என்ட்ரி
திருமணத்திற்கு பின்பும் சீரியல்களில் கலக்கி கொண்டிருந்த ஆல்யா மான்ஸா, தனது முதல் பிரசவத்திற்காக சிறிது பிரேக் எடுத்தார். தனது காதல் வாழ்க்கை தொடங்கி திருமண வாழ்க்கை பின்பும் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களிலும் யூடூப் சேனலிலும் அப்டேட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இந்த ஜோடிகள். பெரும்பாலும் திறந்த புத்தகமாக இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்த சிறிது இடைவெளிக்கு பின்பு திரும்பவும் தன்னுடைய கடுமையான முயற்சியினால் மீண்டும் அதே பொலிவுடன் சீரியலில் ரீ என்ட்ரி ஆனார்.

மாறப்போகும் ரீ எண்ட்ரி
தற்பொழுது மறுபடியும் இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்று ஓய்வில் இருக்கும் ஆல்யா மானசா, தனது ரீ என்ட்ரியை சன் டிவி பக்கம் திருப்பி உள்ளார். ஏற்கனவே அதிகமான நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றதால் தான், விஜே அர்ச்சனாவை விஜய் டிவி தவிர்த்ததாகவும், அதனால் தான் அவர் ஜீ தமிழ் பக்கம் சென்று விட்டார் என்று வதந்திகள் இணையத்தில் பரவி வரும் சூழ்நிலையில், ஆல்யா மான்ஸா தற்பொழுது பழைய மாதிரி உருவ அமைப்பில் இல்லாததால் மீண்டும் ரசிகர்களை கவர முடியாது என்று அவரை விஜய் டிவி மறுத்துவிட்டதாகவும், அதனால் தான் அவர் சன் தொலைக்காட்சி சீரியல் மூலம் தனது ரி என்ட்ரியை கொடுக்க உள்ளார் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

ஏன் இந்த முடிவு
ஏற்கனவே விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ராஜா ராணி சீரியல் டைரக்டர் எப்போதும் ஆலியா மானசா தான் ராஜா ராணி சீரியலின் கதாநாயகி என்று கூறியிருந்தார். இதனால் மீண்டும் இவர் ராஜா ராணி சீரியலில் நடிப்பாரா?? என்று பலர் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அப்படி நான் வரப்போவதில்லை என்று ஆலியா ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ராஜா ராணி சீரியலின் இயக்குனர் இயக்கும் வேறு சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது ஆலியா சன் டிவி சீரியலில் நடிக்க இருக்கும் என்ற செய்தி பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறதாம்.

ரசிகர்களின் கேள்விகள்
தற்போது ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதால் ஆலியா மானசாவும் அந்த சீரியலில் இணைவாரா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் நடித்த ராஜா ராணி சீரியல் பலருடைய மனதை கவர்ந்தது போல இந்த சீரியலின் இருக்குமா..!!??என்பது பலருடைய கேள்வியாக இருந்து வருகிறது. காரணம் கயல் சீரியலில் ஹீரோயினியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இடையே கெமிஸ்ட்ரி அந்த அளவிற்கு எடுபடவில்லை என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. சஞ்சீவை விட சைத்ரா ரெட்டி உயரம் அதிகமாகவும் இருப்பதாலும் பலர் சஞ்சீவுக்கு அக்கா மாதிரி சைத்ராரட்டி இருக்கிறார், அதனால் ஆலியாவை களம் இறக்குவார்களா என்று சமூக வலைத்தளத்தில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications