கப்பல் போல காரில் 30வது பிறந்தநாளை கொண்டாடிய ஆலியா மானசா.. கணவர் சஞ்சீவ் போட்ட ஸ்பெஷல் போஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த ஆலியா மானசா அந்த சீரியலில் அவருடன் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று ஆலியா மானசா தன்னுடைய 30 ஆவது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார். அவர் பற்றி அவருடைய கணவர் சஞ்சீவ் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா மற்றும் சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் ஒரு சிலர் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சில தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக தன்னுடைய திருமண வாழ்க்கையில் பயணித்து வருகிறார்கள். அதில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதி சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள். ஆலியா டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் விஜய் டிவியில் அறிமுகமானார். அதன் நிகழ்ச்சிக்கு பிறகு ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினர்.

காதல் திருமணம்
முதல் சீரியலில் செம்பா கேரக்டரில் நடித்து அந்த கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது. அந்த நேரத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். பிறகு ராஜா ராணி சீரியலில் அவரோடு கதாநாயகனாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதல் செய்தி அறிவிக்கப்பட்டது அப்போது பெரிதாக பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சீரியலில் நடித்துவரும் ஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
பொதுவாக கதாநாயகிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். உடனே குழந்தை பெற்றுக் கொண்டால் தங்களுடைய இளமை போய்விடும், அல்லது வாய்ப்பு போய்விடும் என்றெல்லாம் நினைத்து பலர் குழந்தை பிறப்பை தள்ளி போட்டு வருகிறார்கள். ஆனால் ஆலியா திருமணம் முடிந்த சில வருடங்களில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறிவிட்டார்.
நடிகர் சஞ்சீவ் பதிவு
குழந்தை பிறக்கும் போது உடல் எடை கூடி இருந்தார். ஆனால் குழந்தை பிறந்ததும் தீவிர உடல் பயிற்சியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று இவருடைய முப்பதாவது பிறந்தநாளை அவருடைய குடும்பத்தினர் பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார்கள். கப்பல் போன்ற ஒரு பெரிய காரில் இவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. கடந்த வருடத்தில் தான் ஆலியா பெரிய வீடு ஒன்றை கட்டி முடித்து இருந்தார்.

புது அப்டேட்
ஆலியா மானசாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பிரபலங்கள் பலரும் தெரிவித்து வரும் நிலையில் அவருடைய கணவர் ஆலியாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்ஸ்டா குயின்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல ஆலியா மானசா தன்னுடைய பிறந்தநாளில் தான் புதியதாக நடிக்கும் சீரியல் குறித்து அப்டேட்டும் கொடுத்து இருக்கிறார். அதாவது ஜீ 5 சேனலில் புதியதாக நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். அது ரியாலிட்டி நிகழ்ச்சியா? அல்லது சீரியலா? என்பதே சொல்லவில்லை. ஏற்கனவே விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். அதேபோன்று சன் டிவியில் இனியா சீரியலிலும் நடித்திருந்தார். இப்போது ஜீ தமிழில் இவர் நடிக்க இருக்கிறார் என்பதை தெரிவித்து இருக்கிறார்.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications