Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

13 வயசு வித்தியாசத்தில் விழுந்த விஷால்.. மேடையில் சாய் தன்ஷிகா "பேபி"ன்னு கூப்பிட்டதுமே?: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் 40 வயதுகளை கடந்தும் சிங்கிளாக சிலர் இன்னும் இருக்கின்றனர்... உதாரணத்துக்கு திரிஷா, சிம்பு, பிரபாஸ், அனுஷ்கா என்று பலரும் திருமணம் செய்யவில்லை.. அதுபோல, 47 வது வயதிலும் சிங்கிளாக இருப்பவர் விஷால்.. தற்போது, தன்னைவிட அதிக வயது குறைந்த, 35 வயது நடிகையான சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.. இந்த வயது வித்தியாசம் சோஷியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டும் வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று, அவரது திருமணம் நடைபெற உள்ளது. அன்று விஷாலுக்கு 47 வயது நிறைவடைகிறது. சாய் தன்ஷிகாவுக்கு இப்போது 35 வயது முடிந்துள்ளது. அதாவது இருவருக்குமான வயது வித்தியாசம் 13.

Television Vishal Sai Dhanshika

ஆர்யா - சாயிஷா

இதற்கு முன்பு விஷாலின் நெருங்கிய நண்பரான நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட போதும், இதுபோலவே வயது வித்தியாசம் 17 வருடங்களாக இருந்தது.. இதை பற்றியும் அப்போது நிறையவே விமர்சனங்கள் வெளிவந்தன. இப்போது விஷால் - தன்ஷிகா வயது வித்தியாசம் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, விஷாலுக்கு திருமணம் என்பது சந்தோஷமான விஷயம்தான்.. "மாட்டிக்கினாரு ஒருத்தரு" என்று கிண்டலாக சொல்லி, விஷாலுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.. மணவாழ்க்கை என்பது அனைவருக்குமே அவசியமானதாகும்..

15 வருட காதல்?

விஷாலை திருமணம் செய்து கொள்வதாலேயே சாய் தன்ஷிகாவை பெரிய ஸ்டார் என்று சொல்லிவிட முடியாது.. பெரிய அளவிலான நடிகை கிடையாது.. ஒரு ஆவரேஜ் ஸ்டாராக, விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்துள்ளார்.. விஷாலுடன் பல நடிகைகள் இணைத்து பேசப்பட்டுள்ளனர்.. ஆனால், இப்போது திடீரென, தன்ஷிகாவுடன் விஷாலுக்கு 15 வருட காதல் என்று சொல்கிறார்கள்.. இது காது குத்துவது போல உள்ளது.. 15 நாளில்கூட ஒருவருக்கு காதல் வரலாம்..

வயது வித்தியாசம்

பொதுமேடைகளில் விஷால் பேசும் தெளிவற்ற விஷயங்கள், அவர் நடந்து கொள்ளும் நடவடிக்கைகள் சர்ச்சையை உண்டுபண்ணிவிடுகிறது.. விஷாலுக்கு 48 வயதாகிவிட்டது, தன்ஷிகாவுக்கு 36 வயதாகிவிட்டது, இவ்வளவு வயது வித்தியாசம் இருக்கலாமா? என்று சிலர் சோஷியல் மீடியாவில் பேசிவருகிறார்கள்.

இது கட்டாய திருமணம் என்றால், இந்த வயது வித்தியாசம் பெரிய விஷயமாக பேசப்பட வேண்டும். அப்பா வயது மூப்புள்ள நபரை, வயது குறைந்த பெண் திருமணம் செய்வது தவறு. வயது வித்தியாசத்துடன் நடக்கும் கட்டாய திருமணங்களை நம்மால் ஏற்க முடியாது.. அப்படி நடந்து, பல திருமணங்கள் பாழாகிவிட்டன..

மேடையிலேயே பேபி

ஆனால், விஷால் - தன்ஷிகாவின் திருமணமானது முழுக்க முழுக்க காதல் சார்ந்த திருமணம்.. மனம் விரும்பி திருமணம் செய்து கொள்ளும்போது, அவர்களுக்குள் ஓரளவு புரிதல் இருக்கும். வயது வித்தியாசத்தை அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள்.. திருமணத்தை இருவரும் சேர்ந்து அறிவித்துவிட்டார்கள்..

அதிலும் மேடையிலேயே பேபி என்று விஷாலை கூப்பிட்டுவிட்டார் தன்ஷிகா.. அதிலேயே எல்லாம் முடிந்துவிட்டது. இதற்கு பிறகு எல்லாரும் சேர்ந்து அவர்களை வாழ்த்த வேண்டியதுதான்.. இருவரும் நன்றாக வாழட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+