தாமரை கிட்ட எல்லோரும் ஏமாறுகிறீங்க... கருத்துக்களை தெரிவித்த அமீர்
சென்னை: தாமரையை பற்றி வந்த இரண்டு நாளில் அமீர் பேசிய வார்த்தை அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.
வெளியில் இருந்து ரசிகர்கள் பார்ப்பதற்கும் வீட்டிற்குள்ளே சென்று அருகிலிருந்து பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை தான் அமீர் பேசி இருக்கிறாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
என்ன பொசுக்குன்னு இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டார் என்று தாமரையின் ரசிகர்கள் காண்டில் இருக்கின்றனர்.

அமீருக்கு எதிர்ப்பும், ஆதரவும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வையில்ட் கார்ட் என்ட்ரி ஆக அறிமுகமாகியிருக்கும் அமீர் தற்போது தாமரையைப் பற்றிய கருத்து தெரிவித்தது தான் அனைவரின் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வந்த இரண்டு நாட்களில் இவர் என்ன இப்படி சொல்லிவிட்டார் என்று தாமரையின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அமீருக்கு எதிராக கமெண்டுகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அமீர் சொல்வது சரிதான் தாமரையின் இயல்பான குணம் அமீர் சொல்வது போலத்தான் இருக்கிறது என்று ஒரு சில ரசிகர்கள் அமீருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

தாமரையின் வெகுளித்தனமான குணம்
தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாவதற்கு முன்பு வரைக்கும் யாருக்கும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் தான் இருந்தார். ஆனால் தற்போது அவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். ஒரு கிராமத்திலிருந்து அடித்தட்டில் உள்ள மக்களில் ஒருவராக இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருப்பது பலருக்கும் இவர் மீது நல்ல அபிப்ரயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் வெகுளித்தனமாக இருக்கிறார் என்று ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் இவர் மீது ஒரு இமேஜை வைத்துவிட்டனர்.

வாக்குகள் குறைந்துள்ளது
காயின் விஷயத்தில் இவரிடம் சுருதி, பாவனி நடந்துகொண்டது கூட தவறு என்று இவருக்காக பல ரசிகர்கள் சுருதி மீதும் பாவனி மீதும் இப்ப வரைக்கும் கோபப்பட்டு வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் இவர் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று பலர் விருப்பங்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வார வாக்குகள் அடிப்படையில் இவருடைய வாக்குகள் குறைவாக இருந்து வரும் நிலையில் இவர் வெளியேறி விடுவாரோ என்று இவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

குறை கூறிய அமீர்
இந்த நிலையில் அமீர் தாமரை கிட்ட எல்லோருமே ஏமாறுரீங்க. அவங்க ரொம்ப கிளவராக இருக்கிறாங்க, உங்களுக்கெல்லாம் அவங்கள பத்தி தெரியலையா என்று எனக்கு தெரியல என்று கூறியிருக்கிறார். அப்போது அருகில் இருந்த நிரூப் அவங்க அறியாமை யோடு இருக்காங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு அறியாமை என்று எல்லாம் ஒன்னுமில்ல, அவங்களுக்கு வேண்டிய விஷயத்தில் கரெக்ட்டா செயல்படுகிறார்கள். அவங்க மேல ஒரு பரிதாபத்தை உருவாக்குறாங்க என்று நினைக்கிறேன். என் கண்ணுக்கு நெகட்டிவா தான் தெரிகிறாங்க என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் ஒரு சில ரசிகர்கள் எங்கள் மனதில் இருப்பதை அப்படியே கூறிவிட்டீர்கள் என்று அமீருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications