ஹேன்டில் பார் மீது ஏறி அமர்ந்து கொஞ்சிய நிஷா.. கலாய்த்த மணி.. கலகலத்துப் போன இன்ஸ்டா!
சென்னை: ரீல்ஸ் வீடியோவாக இருந்தாலும் அதில் நடிக்க தான் செய்வாங்க என்று பார்த்தால் நிஷா கேரக்டராகவே மாறி விட்டாரே.
காமெடியில் களை கட்டிக் கொண்டிருக்கும் நிஷாக்கு திரைப் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இவர் பேசியது எல்லாம் ரசிகர்கள் விட்டு விட்டார்கள். ஆனால், அவர் கேப்ஷனில் போட்ட அந்த சின்னத்திரை நயன்தாரா எனும் வார்த்தையை மட்டும் பிடித்துவிட்ட நெட்டிசன்கள் வம்புக்கு ஓடி வருகின்றனர்.

என்ன வார்த்தை சொல்லிட்டீங்க
அப்பாடா... மனசுல உள்ள பாரம் எல்லாம் இறங்கிருச்சு!.. நாங்க நினைச்சோம்,நீங்க சொல்லிட்டீங்கனு.... நெட்டிசன்கள் சொல்லுமளவிற்கு அறந்தாங்கி நிஷா அவரை அவரே கலாய்த்து போட்டுள்ள வீடியோ காமெடியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஸ்கூல் உடையில் கலக்கும் இவருடைய லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம வைரலாக வலம் வருகிறது.

விறுவிறுப்பான பேச்சாளர் தான்
காமெடி பண்ணுவதில் பொதுவாக இரண்டு ரகம் தான். ஒன்று பிறரை கலாய்த்து காமெடி செய்வது, மற்றொன்று தன்னை தானே கலாய்த்துக் கொண்டு காமெடி செய்வது, இதில் நம்ம அறந்தாங்கி நிஷா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். அடிப்படையில் பட்டிமன்ற பேச்சாளரான இவர் பட்டிமன்றங்களில் பேசும்பொழுது மற்றவர்களை பொதுவாக கலாய்த்து காமெடி செய்தாலும், சின்னத்திரைக்கு வந்த பின்பு தன் பாணியையே முற்றிலுமாக மாற்றிக் கொண்டார்.தான் ஒரு பேச்சாளர் என்பதையே மறந்து முழுநேர காமெடி நடிகையாகவே மாறிவிட்டார்.இதற்கு சாட்சியாக விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளில் இவர் பெர்பாமன்ஸ்யை பார்த்தாலே தெரியும்.

நடிப்புல பின்றாங்களே
பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனே, நீங்கள் ஒரு பேச்சாளராமே!!! உங்கள் பழைய வீடியோக்களை எல்லாம் பார்த்தேன்... என்று ஆச்சரியப்பட்டு கூறுமளவிற்கு பேச்சாற்றல் திறமையைக் கொண்டிருக்கும் அறந்தாங்கி நிஷா தன் பேச்சின் மூலம் இருந்த நகைச்சுவையை தற்பொழுது நடிப்பின் மூலம் காட்டி வருகிறார்.டிவி நிகழ்ச்சிகளில் காமெடி பெர்பாமன்ஸில் ஆண்களே கோலோச்சி வரும் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக அறந்தாங்கி நிஷா கொஞ்சமும் சலிக்காமல் கிடைக்கிற கேப்பில் எல்லாம் தன்னுடைய பெர்பாமன்ஸ் மூலம் தன் திறமையையும் நிரூபித்து வருகிறார்.

ஸ்டைலே வேற தான்
பெரும்பாலும் பிறரை கலாய்க்காமல் தன்னையே நகைச்சுவை கன்டன்டாக வைத்துக்கொண்டு, தன்னைத்தானே கலாய்த்து நிகழ்ச்சி காமெடியாக கொண்டு செல்வது அறந்தாங்கி நிஷா ஸ்டைல்.தன் நிறத்தையும் உருவத்தை வைத்து பிறர் கேலி செய்தாலும் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அதை தனக்கே பாசிட்டிவாக மாற்றி பெர்பாமன்ஸ் செய்து, பரவாயில்லையா!!!இந்த பொண்ணு என்று சொல்ல வைத்து விடுவார். என்ன... பாசம் தான் கொஞ்சம் கண்ணை மறைக்கிறது.. என்பதுபோல் தன் குழந்தையை மீதுள்ள பாசத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்து இவர் போடும் வீடியோக்கள் தான் சற்று இவர் இமேஜை டேமேஜ் செய்து விடுகிறது. தற்பொழுது கூட ஸ்டார் கிட்ஸ் இல் இவரது பெர்பாமன்ஸ் குறித்து நிறைய மீம்ஸ்கள் அவரை கலாய்த்து வந்துகொண்டிருக்கிறது.

என்னது சின்னத்திரை நயன்தாராவா
சில நாட்களுக்கு முன்பு சின்டிரெல்லா டிரஸ் உடன் நயன்தாரா பாட்டுக்கு இவர் கொடுத்த மூவ்மெண்ட் வீடியோ நெட்டிசன்களால் கலாய்த்தே வைரல் ஆக்கப்பட்டது.அப்படி நெட்டிசன்கள் கலாய்த்ததைக்கூட தன்னுடைய பிளஸ் ஆக மாற்றி தற்போது அப்லோட் செய்துள்ள வீடியோவிற்கு கேப்ஷனாக தன்னை 'சின்னத்திரை நயன்தாரா' என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.விஜய்டிவி ஸ்டூடியோவில் இவர் போட்டுள்ள வீடியோ அவரது பெர்பாமென்ஸ்காக மட்டுமின்றி அவருடைய கேப்ஷனுக்காகவும் குண்டக்க மண்டக்க கமெண்டுகளை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications