Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அச்சு அசலாக நயன்தாராவுக்கு டப் கொடுக்கும் சின்னத்திரை நயன்தாரா..அசந்து போன ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவின் கெட்டப்பில் இருக்கும் நிஷாவின் போட்டோவை அவர் வெளியிட்டு அதற்குக் கொடுத்த கேப்ஷன் தான் வேற லெவல்.

ஒரு பக்கம் நயன்தாரா, இன்னொரு பக்கம் சின்னத்திரை நயன்தாரா இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை கூறுவதற்காக ரசிகர்கள் போட்டோவை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அட இதுவும் நல்லாதான் இருக்கு என்று அறந்தாங்கி நிஷாவின் ரசிகர்கள் நக்கலாக கலாய்த்து வருகின்றனர்.

சின்னத்திரை நயன்தாராவின் அலும்பு

சின்னத்திரை நயன்தாராவின் அலும்பு

சின்னத்திரை நயன்தாரா என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் அறந்தாங்கி நிஷா தற்போது சமூக வலைதளத்தில் செய்த செயல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அட நம்ம தலை வேற லெவல் என்று அறந்தாங்கி நிஷாவின் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். எப்போதுமே ஜாலியாக சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போட்டுக்கொண்டிருக்கும் அறந்தாங்கி நிஷா தற்போது தன்னை நயன்தாராவோடு ஒப்பிட்டு ஒரு ரசிகர் வெளியிட்ட போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

கலாய்த்து தள்ளிய ஃப்ரினா

கலாய்த்து தள்ளிய ஃப்ரினா

போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் அடடே என்று சொல்லும் விதத்தில் கருப்பு கோட்டு சூட்டில் பில்லா நயன்தாராவிற்கு டப் கொடுக்கிற மாதிரி கெத்தாக அவர் கொடுத்த போஸ் அனைவருக்கும் சிரிப்பு தான் வருகிறது, என்று சிலர் சிரிப்பு ஸ்மைல்களை அனுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் ஒரு பக்கம் இவரை கலாய்த்துக் கொண்டிருக்கும் போது சக நடிகர்களும் இவரை வைத்து நன்றாக ஓட்டி வருகின்றனர். அதுவும் சின்னத்திரை நீலாம்பரி ஃப்ரினா தற்போது இவருடைய போஸ்டுக்கு கமெண்ட் போட்டுள்ளது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

விக்னேஸ் சிவனை வம்பிழுத்த நிஷா

விக்னேஸ் சிவனை வம்பிழுத்த நிஷா

என்னதான் அறந்தாங்கி நிஷா ஒரு காமெடி நடிகையாக தற்போது கலக்கி கொண்டிருந்தாலும், இவர் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை என்று ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதைத்தான் தற்போது ஃப்ரினாவும் இந்த நயன்தாராவின் போட்டோவிற்கு 'எக்......கோ அலப்பறை தாங்கல' என்று கலாய்த்திருக்கிறார். இவருடைய இந்த கமெண்டுக்கு பல ரசிகர்கள் லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நிஷாவின் அலப்பறை என்னவென்றால் நயன்தாராவோடு தன்னை ஒப்பிட்ட போட்டோவில் கேப்ஷனோடு நயன்தாராவின் காதலரான விக்னேஸ் சிவன் இன்ஸ்டாகிராம் ஐடியை டேக் பண்ணி போஸ்ட் போட்டுள்ளார்.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

அறந்தாங்கி நிஷாவின் இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் இந்த போட்டோவை பதிவிட்டு ஒரு சில நிமிடங்களில் இதற்கு லைக்கள் மட்டுமல்லாமல் கமெண்டுகளும் குவிந்து வருகிறது. அதுவும் வழக்கமாக இவருடைய போட்டோவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் கூட தற்போதைய இந்த போட்டோவிற்கு அதிகமாக சிரிப்பு ஸ்மைல்களை அனுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவருடைய தீவிரமான ரசிகர்கள் நீங்க மனசளவுல உண்மையாவே நயன்தாரா தான் அக்கா என்று இவர் மீது உள்ள பாசத்தை பொழிந்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+