திவ்யா மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார் "உண்மை இதுதான்” அர்னாவ் காட்டிய ஆதாரம்
சென்னை: சின்னத்திரை தம்பதிகளான திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் குடும்ப பிரச்சினை தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய கணவரான அர்னாவ் தன்னை அடித்ததால் தனக்கு வயிறு வலி வந்து விட்டதாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதே நேரத்தில் தன்னுடைய மனைவி தன் குழந்தையை அபார்சன் செய்ய இருப்பதாக குழந்தையை காப்பாற்றி தரும் படி அர்னாவ் கமிஷனர் ஆபீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை
திவ்யா தமிழ் கன்னடம் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது செவ்வந்தி எனும் சீரியலில் நடித்து வருகிறார். அதுபோல அர்னாவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் எளிமையாக திருமணத்தை செய்து முடித்திருக்கின்றனர். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில், சமீபத்தில் தான் எனக்கும் அர்னாவ்க்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார். சில வருஷத்துக்கு முன்னாடி சீரியல் ஒன்றில் நாங்கள் நடித்தோம்.அதற்குப் பிறகு நாங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க ஒரு வீடு வாங்கினோம். அதற்கு பைனான்ஸ் எல்லாமே நான் தான் செட்டில் பண்ணி இருந்தேன். அப்போ கல்யாணப்பரிசு சீரியல் முடிந்த பிறகு அர்னாவ்க்கு எந்த ஒரு சீரியலும் இல்லாமல் தான் இருந்தார். நான் தான் மகராசி சீரியல் முடிச்சுகிட்டு இஎம்ஐ எல்லாம் கட்டிக்கிட்டு இருந்தேன்.

கதறும் நடிகை
அது மட்டுமில்லாமல் அர்னாவ் தனியாகவும் லோன் வாங்கி இருந்தார். அதையும் நான் தான் கட்டியிருந்தேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ண கூடாது என்பதற்காக நான் பார்த்து பார்த்து பண்ணுனேன். ஆனா என் ஹஸ்பண்ட் என்னை அடிச்சதால நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிறுக்கு அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு தான் நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை. என்னால் ஹாஸ்பிடலுக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது என்று திவ்யா கதறி அழுத வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இது என்ன புது கதை
இந்த நிலையில் சின்னத்திரை நடிகர்களான திவ்யா மற்றும் அர்னாவ் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அதில் தன்னுடைய மனைவி தன் மீது மிகுந்த அன்பும் பொஸஸ்நஸ் வைத்திருக்கிறார். அதனால் தான் இவர் இப்படி செய்து கொண்டிருக்கிறார். அதோடு இல்லாமல் அவர் மனநல மருத்துவரிடம் மருத்துவம் பார்த்து வருகிறார். பல நேரங்களில் அவர் நார்மலாக இல்லாமல் தான் இப்படி இருந்து வருகிறார். என்னை ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் டார்ச்சர் செய்து வருகிறார் என்று குற்ற சாட்டுகளை கூறியிருக்கிறார்.

அர்னாவ் வெளியிட்ட ஆதாரங்கள்
அர்னாவ் ரம்ஜான் பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு ஊருக்கு செல்ல விரும்புகிறேன் என்று கூறினால், நீ ஊருக்கு போனால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று பலமுறை மிரட்டி இருக்கிறாராம். கைகளில் கத்தியால் வெட்டி அதை போட்டோ எடுத்து அர்னாவ்வுக்கு அனுப்பி இருக்கிறாராம். அதோடு சில நேரங்களில், தூக்கு மாட்ட போவதாகவும் புடவையை ஃபேனில் முடிச்சு போட்டு அருகில் நின்று செல்பி எடுத்து அனுப்பி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கூட தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று தாலியை கழற்றி வைத்துவிட்டு லெட்டர் எழுதி வைத்திருக்கிறாராம். அதேபோலத்தான் தற்போது கூட மீடியா முன்பு தன்னை பற்றி அடுக்கடுக்காக தவறான தகவல்களை கூறி தன்னை கேவலப்படுத்தி வருவதாக அர்னாவ் ஆதாரங்களை காட்டி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications