விஜய் பேசியதில் தப்பு இதுதான்! ஜல்லிக்கட்டுக்கு ரைட்ஸ் வச்சிருக்கீங்களா? ஜூலிக்கு நடிகர் பதிலடி
சென்னை: தமிழக அரசியல் களத்தில் சமீப நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக மாறியுள்ளது விஜய் - தமிழக வெற்றிக் கழகம் தலைவர் - வேலூரில் பேசிய "ஜல்லிக்கட்டு காளை" குட்டி ஸ்டோரி.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் விஜய் தனது உரையை ஒரு சின்ன கதையுடன் தொடங்கினார். "ஒரு ஊரில் யாருக்கும் அடங்காத ஜல்லிக்கட்டு காளை இருந்தது..." என தொடங்கிய அந்த உவமைக்கதை, அரசியல் சூழ்நிலைக்கு ஒப்பிட்டு கூறப்பட்டதாகவே அவரது ஆதரவாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
ஆனால் அந்தக் கதையை கேட்டு கடுப்பான ஜூலி (பிக்பாஸ் ஜூலி) தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு கடுமையாக விமர்சித்தார். "உங்கள் கட்சியில் பாதி பேர் மைனர்கள்... ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லுக்கட்டை காட்ட போயிட்டு உயிரிழப்புகள் அதிகரிச்சா என்ன செய்வீங்க?" என அவர் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் ரசிகர்கள் கடும் எதிர்வினை காட்ட ஆரம்பித்தனர்.
அருண் ராஜா கடும் தாக்கு
இந்த நிலையில் சீரியல் மற்றும் திரைப்பட நடிகரான அருண் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலியின் வீடியோவை பகிர்ந்து நேரடியாக பதிலடி கொடுத்தார். அவர் பேசியதைக் கீழே அப்படியே தருகிறோம்:
"மக்களே இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க. இந்த தங்கச்சி இப்படி பேசுறது... ஆனா அவரு ஒரு குட்டி ஸ்டோரின்னு ஒரு ரெஃபரன்ஸ் சொன்னாருமா? அதுல அவர் பண்ணுன ஒரே தப்பு என்ன தெரியுமா? காளமாடுன்னு சொல்றதுக்கு பதிலாக ஜல்லிக்கட்டு காளை மாடுன்னு சொல்லிட்டாரு.

ஜல்லிக்கட்டுன்னு சொன்ன உடனேயே அதற்கு நீங்கதான் காப்பிரைட்ஸ் வச்சிருக்கீங்க என்கிற மாதிரியும், அதற்கு நீங்கதான் பெர்மிஷன் வாங்கி கொடுத்த மாதிரியும் பேசுறீங்க.
ஏதோ நீங்க தான் கஷ்டப்பட்டு பெர்மிஷன் வாங்கி கொடுத்தாங்களாம்... ஆனா இப்ப 50, 500 ஆகிருமாம்? அப்புறம் சின்ன பசங்க எல்லாம் புல்லுக்கட்டோட போய் நின்னுருவார்களாம்... அதனால ஜல்லிக்கட்டை தடை பண்ணிடுவாங்களாம்.
அப்புறம் இவங்களால போராட திராணி இல்லையாம் எம்மா... என்னம்மா பிரச்சனை உனக்கு? ஒன்னு கவனிங்க... அவர் பேசுனது இன்டெலிஜென்ட் ஸ்பீக்கிங். உங்களுக்கு அது சம்மதம் இல்ல. அது என்னனு கூட உங்களுக்கு புரியல.
அரசியல், மக்கள் வாழ்க்கை.. இந்த மாதிரியான மேம்பட்ட மக்கள் பேசுற ஒரு பேச்சு. மக்கள் எல்லாரும் ரொம்ப எமோஷனலா இந்த எலக்சனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனா சம்பந்தமே இல்லாம நீங்க யம்மா இப்படி பேசுறீங்க.
ஏன் தங்கச்சி, இப்பதான் உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சி. உங்களுக்கு வாழ்க்கையா பாருங்க. இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையில்லை." என்ன பேசிய அருண் ராஜாவின் இந்த வீடியோ வெளியானதும், சீரியல் மற்றும் திரைப்பட நடிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கமெண்ட்ஸ் பகிர்ந்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மேலும் சூடு
இதற்கிடையில், தளபதி ரசிகர்களும் ஜூலிக்கு எதிராக பல வீடியோக்களை வெளியிட்டு கடும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர். "அரசியல் உவமையை நேரடி சம்பவமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்பதே அவர்களின் வாதம்.
ஒரு குட்டி ஸ்டோரி இவ்வளவு பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியிருப்பது, இந்த தேர்தல் சூழ்நிலையில் அரசியல் உணர்வு எவ்வளவு உச்சத்தில் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
இனி இந்த வார்த்தைப் போர் எங்கு போய் முடியும்? ஜூலி மீண்டும் பதிலளிப்பாரா? அல்லது இது இங்கேயே முடிவுக்கு வருமா? - அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications