Aryan vs Aan Paavam 1st day collection: நேற்று வெளியானதில் யாரு டாப்பு? ஆர்யனா, ஆண்பாவம் பொல்லாததா? வெளியான தகவல்
சென்னை: என்னங்க, நேற்று (அக்டோபர் 31) தமிழ் சினிமாவுக்குக் கொஞ்சம் பரபரப்பான நாள் தான்! ஏன்னா, ரெண்டு எதிர்பார்ப்புள்ள படங்கள் ரிலீஸ் ஆச்சு. ஒண்ணு, விஷ்ணு விஷாலோட க்ரைம் த்ரில்லர் படமான 'ஆர்யன்'; இன்னொன்னு, VJ ரியோ ராஜ் நடிச்ச 'ஆண் பாவம் பொல்லாதது'. படங்களோட விமர்சனமும், முதல் நாள் வசூல் நிலவரமும் எப்படி இருக்குன்னு ஒரு லுக் விட்டுடலாமா?

விஷ்ணு விஷால்: ராட்சசன் சாயல் இல்ல
விஷ்ணு விஷால் கரியர்ல 'ராட்சசன்' படத்துக்குன்னே ஒரு தனி இடம் இருக்கு. ராம் குமார் டைரக்ஷன்ல அந்தப் படத்தோட கதை, திரைக்கதை எல்லாம் வேற லெவல்ல இருந்தது. இப்போ ஏழு வருஷத்துக்கு அப்புறம், விஷ்ணு விஷால் மறுபடியும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஜானர்ல இறங்கியிருக்கார்.
பிரவீன் டைரக்ஷன்ல வந்த 'ஆர்யன்' படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் தான் வந்துட்டு இருக்கு. "ராட்சசன்" மாதிரி நேர்த்தியான திரைக்கதை இல்லைன்னு சில பேர் சொல்றாங்க. முதல் அரை மணி நேரம் மட்டுமே செமையா இருக்கு, திரைக்கதையை இன்னும் மெருகேத்தி இருந்தா "ராட்சசன்" மாதிரி சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்னு ரசிகர்கள் குறைப்பட்டுக்கிறாங்க. ஆனால் அதிகமான ரசிகர்கள் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாகவே இருக்கிறது என்றும் பாராட்டி வருகிறார்கள்.
வசூல் ரிப்போர்ட்
ஆனா, எப்படி இருந்தாலும் விஷ்ணு விஷாலோட படத்துக்கு ஒரு வரவேற்பு இருக்கு. அதனால, 'ஆர்யன்' முதல் நாள்ல 1 கோடி ரூபாய் வரைக்கும் வசூல் செஞ்சிருக்கிறதா தகவல் வந்திருக்கு.
ஆண் பாவம் பொல்லாதது
விஜய் டிவி மூலமா ஃபேமஸ் ஆகி சினிமாவுக்கு வந்தவர் ரியோ ராஜ். இவரோட 'ஜோ' படம் பெரிய ஹிட் ஆனதுனால, இப்போ ரிலீஸ் ஆன 'ஆண் பாவம் பொல்லாதது' படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. டிரெய்லர் ரிலீஸானபோதே, படம் கண்டிப்பா ஹிட் அடிக்கும்னு நிறையப் பேர் நம்புனாங்க.
ஆண்பாவம் பொல்லாதது கதை என்னன்னா
இந்த காலத்துல இருக்க ஐடி இளைஞர்களோட காதல், கல்யாணம், அப்புறம் விவாகரத்துன்னு ஒரு முக்கியமான விஷயத்தை இந்தப் படத்துலப் பேசியிருக்காங்க. எதிர்பார்த்த மாதிரியே இந்தப் படத்துக்குப் பாசிட்டிவான விமர்சனங்கள் தான் வந்துட்டு இருக்கு. அதனால ரியோ ராஜுக்கு இது இன்னொரு வெற்றிப் படமா அமைய நிறைய வாய்ப்பு இருக்குன்னு கணிக்கப்படுது. இந்த 'ஆண் பாவம் பொல்லாதது' படம், முதல் நாள்ல சுமார் 48 லட்சம் ரூபாய் வரைக்கும் வசூல் செஞ்சிருக்கிறதா சொல்றாங்க.
ஆகமொத்தம், ரெண்டு படங்களுமே ரசிகர்களோட கவனத்தை ஈர்த்திருக்கு. நீங்க எந்தப் படத்தைப் பார்த்தீங்க? உங்க விமர்சனம் என்னன்னு சொல்லுங்க!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications