நெட்டிசன்களுக்கு பதில் கொடுத்து மீண்டும் மாட்டிக்கொண்ட அஸ்வின்... என்ன வார்த்தை சொல்லி விட்டார்
சென்னை: நடிகர் அஸ்வின் தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்டுகளை அனுப்பும் ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டுள்ளார்.
பதிலடி கொடுக்கிறேன் என்று அஸ்வின் வெளியிட்ட போஸ்ட் தான் தற்போது நெட்டிசன்களால் மீண்டும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

சீரியல்களில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள் வெப்சீரிஸ் என்று நடித்து வருகிறார். ஆனால் இதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, நினைக்க தெரிந்த மனமே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் சீரியல்களில் அவருக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அவர் நடித்த சீரியல்களும் ஒரு சில காரணங்களால் விரைவில் முடிக்கப்பட்டு விட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர் அவ்வளவாக ஜொலிக்கவில்லை.

வளர்ச்சி கொடுத்த குக் வித் கோமாளி
சீரியல்களில் மட்டுமல்லாமல் ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற திரைப்படங்களிலும் சிறுசிறு ரோல்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் மூலமாகத்தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பத்து வருடங்களாக சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்க வேண்டும் என்று இவர் போராடி வருகிறார். ஆனால் அதற்குரிய வாய்ப்புகள் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு கிடைத்திருக்கிறது.

வெள்ளித்திரையில் அறிமுகம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் ஒரு கூக்காக கலந்துகொண்டு பலரது மனங்களை கவர்ந்து விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ஓமன பெண்ணே படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார். அடுத்ததாக இவருக்கு என்ன சொல்லப் போகிறாய் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புக் கிடைத்திருந்தது. தன்னுடைய படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இவர் பேசிய வார்த்தைகள் நெட்டிசன்கள் இப்ப வரைக்கும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

அஸ்வினின் புது போஸ்ட்
தான் பேசிய வார்த்தைகளுக்கு அஸ்வின் மன்னிப்பு கேட்ட பிறகும் நெட்டிசன்கள் விட்ட பாடு இல்லை. தொடர்ந்து இவர் என்ன செய்தாரோ அதை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். இதனால் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் பழி வாங்குவதற்கு எனக்கு மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது. எதுவாக இருந்தாலும் கர்மா பார்த்துக்கொள்ளும் என்பதை சொல்லும் வகையில் அஸ்வின் பதிவு போட்டிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா?? தங்களுக்கு கிடைத்த அல்வா போல அஸ்வினின் போஸ்ட் ஆகிவிட்டது. ஏற்கனவே இவர் நடித்த திரைப்படம் சரியாக ஓடவில்லை என்று இருக்கும் நேரத்தில் இவருடைய இந்த போஸ்ட் மீண்டும் ரசிகர்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications