துபாயில் கலக்கிய அயலி பட "குருவம்மா”..வெளியான புகைப்படங்கள்.. விழி பிதுங்கும் ரசிகர்கள்
அயலி வெப் சீரிஸில் அம்மா கேரக்டரில் நடித்த அனுமோல் துபாயில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: சமீபத்தில் வெளியான வெப் சீரிஸில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த வெப் சீரியசாக அயலி இருந்து வருகிறது.
அயலி வெப் சீரிஸில் கதாநாயகியின் அம்மாவாக நடிகை அனுமோல் நடித்திருந்தார்.
திரைப்படத்தில் இவரை அம்மாவாக பார்த்த ரசிகர்கள் தற்போது இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பல இளமையான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

வெப் சீரிஸ்
ஜீ 5 பிரேமில் ஒளிபரப்பான அயலி வெப் சீரிஸ் தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் 8 எபிசோடுகளை கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகி தமிழ்ச்செல்வியாக அபி நட்சத்திரா நடித்திருக்கிறார். அவருடைய அம்மா கேரக்டரில் அனுமோல் நடித்திருக்கிறார்.

மலையாள நடிகை
அனுமோல் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர் மற்றும் சூரன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் பல்வேறுபட்ட கேரக்டரில் இவருடைய நடிப்பை காட்டி இருக்கிறார். பல புரட்சிகரமான திரைப்படங்களில் இவர் நடித்து பலருக்கும் பரிட்சயம் ஆகி இருக்கிறார்.

விருதுகள்
பல்வேறு உயரிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். அதில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு மோனிஷா விருது, சாந்தாதேவி புரஸ்காரம், ஜெய்சி அறக்கட்டளை விருது, பாரத் முரளி விருது, சூர்யா டிவி விருது, ஜூரி விருது, ATஅபு விருது போன்ற பல விருதுகளை வாங்கி இருந்தாலும் பத்தாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த துணை நடிகைக்காக இவருடைய பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

திருமணம் ஆகவில்லை
நடிகை அனுமோல் 1986 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்திருக்கிறார் இவர். 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு இப்ப வரைக்கும் திருமணம் ஆகாமல் தான் இருக்கிறது. தனக்கு தன்னுடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு 14 வயதிலேயே மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வர தொடங்கிவிட்டனர் என்றும் இப்போது வரைக்கும் நான் அவர்களை ரிஜெக்ட் செய்து வருகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

கலக்கல் போட்டோஸ்
தற்போது அவர் நடித்த அயலி வெப் சீரிஸ் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். இவர் அயலி வெப் சீரிஸ் மட்டுமல்லாமல் ஏற்கனவே மைண்ட் கேப்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவர் மலையாள சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அயலி திரைப்படத்தில் பார்த்த குருவம்மாவா இது? என்று சொக்கி போய் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications