மார்டன் புகைப்படங்களை பகிர்ந்த "அயலி” பட அம்மா நடிகை.. தமிழில் நடிக்காததற்கு காரணம் இதுதானா?
அயலி வெப் சீரிஸ் அம்மா நடிகை அனுமோல் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: அயலி வெப் சீரிஸில் குருவம்மாள் கேரக்டரில் கதாநாயகியின் அம்மாவாக நடிகை அனுமோல் நடித்திருந்தார்.
தமிழ் மற்றும் மலையாள நடிகையாக இருக்கும் அனுமோல் தனக்கு பிடித்த தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் சத்யராஜ் உடன் ஒரு நாள் இரவில் என்ற திரைப்படத்திற்கு பிறகாக இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை அதற்கான காரணத்தை பற்றியும் அவர் கூறி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
சமீபத்தில் g5 ஓடிடியில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 1990 காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதை இந்த சீரிஸ் தத்ரூபமாக காட்டிதாக, தொடர்ந்து இந்த சீரியஸ்க்கு அதிகமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. தற்போது கூட உதயநிதி ஸ்டாலின் இந்த சீரியஸுக்காக இயக்குனருக்கு பெரியார் சிலை கொடுத்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த சீரிஸில் நடித்த நடிகர்கள் பலரும் சிறப்பாக நடித்ததாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு வாய்ப்பு
அந்த வகையில் இந்த சீரிஸின் தமிழ்ச்செல்வி கேரக்டர் கதாநாயகியாக நடித்திருப்பார். அவருடைய அம்மாவாக குருவம்மாள் என்கிற கேரக்டரில் மலையாள நடிகை அனுமோல் தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக காட்டியிருப்பார். தமிழ் சினிமாவில் ஏழு வருடங்களுக்கு பிறகு இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். பல வருடங்களாக இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றிருந்த வருத்தத்தை இந்த சீரிஸ் போக்கிவிட்டது. என்னை அனைவரும் கிராமத்து பெண்ணாகவே மாறிவிட்டதாக கூறினார்கள். இவற்றை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகை அனுமோல் கூறி இருந்தார்.

உடல் நடுங்கி விட்டது
அதுமட்டுமல்லாமல் அயலி கதையை இயக்குனர் முத்துகுமார் அனுமோல் என்னிடம் இந்த கதையை சொல்லும்போது என்னுடைய உடல் நடுங்கி விட்டது. ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு நேரும் அவலங்கள் குறித்து என்னுடைய நண்பரிடம் சில நாட்களுக்கு முன்புதான் சொல்லி படம் எடுக்கலாம் என்றிருந்தபோது இந்த கதையை இயக்குனர் முத்துக்குமார் சொன்னதை கேட்டதும் நானே அதிர்ந்து போய்விட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நடிகர் சத்யராஜ் உடன் நடிப்பு
அது மட்டும் அல்லாமல் இவர்
தமிழ் சினிமாவில் இத்தனை வருடங்களாக நடிக்காததற்கு காரணம் சரியாக கதாபாத்திரம் கிடைக்கவில்லையாம். "ஒருநாள் இரவில்" என்ற சத்யராஜ் திரைப்படத்தில் நான் பாலியல் தொழில் செய்யும் கதாபாத்திரமாக வருவேன். அதற்கு பின் கிடைத்த படங்களும் அப்படியே கிடைத்ததால் தான் நான் பல படங்களை தவிர்த்து விட்டேன். அது மட்டும் அல்லாமல் எனக்கு தமிழ் பேச வராது. ஆனால் டப்பிங்கில் நானே பேச வேண்டும் என்று விரும்பினேன். அயலி படத்தில் மலையாளம் கலந்த தமிழில் பேசியதற்கு அதிகமான பாராட்டு கிடைத்து வருகிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இதுவரைக்கும் தான் எடுத்த புகைப்படங்களில் தனக்கு பிடித்த மார்டன் புகைப்படங்களில் சிலவற்றை இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட அது பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications