என்னுடைய காதல் இது தான்.. ரகசியத்தை பகிர்ந்த அயலி பட குருவம்மா.. கூடவே தத்துவமும் கொட்டுது
அயலி திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த அனுமோல் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
சென்னை: சமீபத்தில் ஜி5 ஓடிடியில் வெளியான அயலி திரைப்படத்தில் குருவம்மாள் கேரக்டரில் நடிகை அனுமோல் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் உடல் எடையை குறைத்து மார்டன் உடைகளில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் நடிகை அனுமோல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் காதல் மொழி இதுதான் என்று ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
சமீபத்தில் g5 ஓடிடியில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 1990 காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதை இந்த சீரிஸ் தத்ரூபமாக காட்டிதாக, தொடர்ந்து இந்த சீரியஸ்க்கு அதிகமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. தற்போது கூட உதயநிதி ஸ்டாலின் இந்த சீரியஸுக்காக இயக்குனருக்கு பெரியார் சிலை கொடுத்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த சீரிஸில் நடித்த நடிகர்கள் பலரும் சிறப்பாக நடித்ததாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு வாய்ப்பு
அந்த வகையில் இந்த சீரிஸின் தமிழ்ச்செல்வி கேரக்டர் கதாநாயகியாக நடித்திருப்பார். அவருடைய அம்மாவாக குருவம்மாள் என்கிற கேரக்டரில் மலையாள நடிகை அனுமோல் தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக காட்டியிருப்பார். தமிழ் சினிமாவில் ஏழு வருடங்களுக்கு பிறகு இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். பல வருடங்களாக இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றிருந்த வருத்தத்தை இந்த சீரிஸ் போக்கிவிட்டது. என்னை அனைவரும் கிராமத்து பெண்ணாகவே மாறிவிட்டதாக கூறினார்கள். இவற்றை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகை அனுமோல் கூறி இருந்தார்.

வித்தியாசமான கேப்ஷன்
அயலி திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது இவர் இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்களாம். அதுபடியே அனுமோல் செய்து இருந்தாராம். அதனால்தான் குருவம்மாள் கேரக்டரில் கச்சிதமாக தன்னால் பொருந்த முடிந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து அடுத்த திரைப்படங்களுக்கு காத்துக்கொண்டிருக்கும் நிலையில் போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். அந்த மாதிரி தான் தற்போது மார்டன் உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவரா? அவர் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த வெளியிட்ட பதிவிருக்கு அனுமோல் என் காதல் மொழி என்று கேப்ஷன் கொடுத்து என்னுடன் பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு நீங்கள் பாதுகாப்பாக உணருகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தத்துவத்தை கூறி இருக்கிறார்.

புரட்சிகரமான நடிப்பு
அனுமோல், குறிப்பாக கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் பின்னணியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கேரளாவில் நிலவிய சாதி பாகுபாடு மற்றும் தடைகள் பற்றிய திரைப்படமான "நிலா வரியாதே" படத்தில் அனுமோல் ஒரு வழக்கறிஞராகவும், இன்னொரு திரைப்படத்தில் அவர் ராயல் என்ஃபீல்டு பைக்கை 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டும் பெண்ணாகவும் நடித்திருக்கிறார். இவர் பலதரப்பட்ட கேரக்டரில் நடித்திருந்தாலும் இவருடைய தைரியமான கேரக்டர்கள் தனித்துவமா வாய்ந்ததாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு கதகளி மற்றும் பரதநாட்டியமும் கற்று இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர்
அனுமோல் திரைப்படங்களின் நடிகையாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை ஒளிப்பதிவாளராகவும் இருந்திருக்கிறார்.இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரைக்கும் ஒரு கிராமத்து பெண்ணாக இவரை பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இவருடைய மார்டன் புகைப்படத்தை பார்த்து வியந்து பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications