திரில்லர் பிரியர்களுக்கு விருந்து.. "அய்யன மனே" சீசன் 2 விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: த்ரில்லர் பிரியர்களுக்கு தீனி போடும் வகையில் கன்னடத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ்தான் அய்யன மனே சீசன் 2 (Ayyana Mane Season 2). கன்னடத்தின் முதல் ஓடிடி தொடர் என்ற பெருமையுடன் வெளியான இதன் முதல் பாகம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது.

இயற்கை எழில் சூழ்ந்த, கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையோர குளுகுளு கிளைமேட் கொண்ட மாவட்டங்கள் மல்நாடு என்று அழைக்கப்படும். சிக்மகளூர் மாவட்டமும் அப்படியான மல்நாடு மண்டலத்தில் வருவதுதான். அங்குள்ள மூடிகெரே அருகேயுள்ள கிராமம்தான் கதைக் களம். இந்த இன்ட்ரோவை கொடுப்பதே அதன் இயற்கை எழிலும், அதன் மர்மமும் காட்சி வழியாகவே உள்ளே நுழைந்துவிடும் பகுதி என்பதை தெளிபடுத்தும் நோக்கத்திற்காகத்தான் வாசகர்களே.

Ayyana Mane Season 2 Review

காந்தாரா திரைப்படத்தில் காட்டப்படுவது போன்ற கடலோர கர்நாடகா பகுதிகளில் கடைபிடிக்கப்படும், தெய்வ வழிபாடு கொண்ட பகுதிதான் மல்நாடும். கொண்டையா என்ற குலதெய்வத்தை கும்பிடும் குடும்பத்தில் நடக்கும் மர்மங்கள்தான் கதை. அக்குடும்பத்திற்கு வரும் மருமகள்கள் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், இளைய மருமகளாக வரும் ஜாஜி, இதன் பின்னணியில் தனது மாமியார் இருப்பதை கண்டுபிடிப்பார். மாமியார் திடீரென மரணமடைவதோடு முதல் சீரிசும் முடிவுக்கு வந்தது. இரண்டாவது சீரிஸ் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது.

இரண்டாவது சீரிஸ் கதை

மாமியாரை கொலை செய்தது ஜாஜி என்று, குடும்பத்தின் பெண் வாரிசுக்கு கனவு வரும் நிலையில், அண்ணி மீது கடும் கோபம் கொள்கிறார் நாத்தனார். அண்ணியை மாட்டிவிட பல முயற்சிகளை எடுக்கிறார். இதனிடையே நாத்தனாருக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டிருப்பதை ஜாஜி கண்டுபிடிக்கிறார் அதை முறியடிக்க ஜாஜி முயற்சி செய்யும் நிலையில், கொலை முயற்சிக்கு உள்ளாகிறார். ஜாஜியை கொலை செய்ய முயன்றது யார், மாமியாரை கொலை செய்தது யார் என்பதற்கெல்லாம் கடைசி எபிசோடு திடுக் திருப்பங்களுடன் விடையளிக்கிறது. மொத்தமே 6 எபிசோட்தான். ஆனால் கடைசி எபிசோட் வரை யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க விடாமல் ட்விஸ்ட் தந்ததில் இயக்குநர் ரமேஷ் இந்திரா, அப்ளாஸ் வாங்குகிறார்.

சென்டிமென்ட் காட்சிகள்

நாத்தனார் கதாப்பாத்திரம் என்னதான் சிடுமூஞ்சியாக இருந்தாலும், ஜாஜி குழந்தைகளின் காது குத்து விழாவிற்கு கணவரோடு திடீரென வருகை தரும் காட்சியின் சென்டிமென்ட் ஸீனையும் சிறப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குநர். ஜாஜி தனது குடும்பத்தை காக்க அணுகும் சாமியார், அந்த குடும்பத்திற்கு சூனியம் வைத்தவரின் பெயர் எழுத்துக்களை குறிப்பால் தருவதை வைத்து, அந்த கதாப்பாத்திரத்தை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளாகட்டும், வீட்டு வேலைக்காரர் திடீரென மரணமடைய, அவரது தற்கொலை கடிதத்தில் ஏற்படும் சந்தேகத்தை தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளாகட்டும், திரைக்கதையை நங்கூரம் பாய்ச்ச உதவியுள்ளது.

கவர்ச்சி காட்சிகள்

முதல் சீரிசில் அடுத்தடுத்து மர்ம மரணங்களும், மோதல்களுமே அதிகம் இருந்தன. இம்முறை காதல், சென்டிமென்ட், த்ரில் என அனைத்தையும் நல்ல விகிதத்தில் கொடுத்து முதல் சீரிசை விடவும் ஒருபடி மேலே பெஞ்ச்மார்க் செட் செய்துள்ளார் இயக்குநர். என்ன ஒன்று என்றால், இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் கவர்ச்சியையும் கலந்துள்ளார்கள். வீட்டின் இரு மருமகள்களையும் அவ்வப்போது கவர்ச்சியை காட்டவும், நெருக்கமான ஸீனில் நடிக்க வைக்கவும் செய்து, அந்த மாதிரி ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ரமேஷ் இந்திரா.

நிறை, குறைகள்

சீரிசின் குறைபாடு என்றால், அதன் லாஜிக்குகள்தான். மூத்த மருமகள்தான் ஜாஜியை கொலை செய்ய முயற்சி செய்கிறார் என்று ஓபனாகவே சந்தேகித்து அவரது கையெழுத்தை சோதனை செய்ய கேட்பார்கள். ஆனால் அடுத்த ஸீனிலேயே ஜாஜியின் குழந்தையை மூத்த மருமகள் கொஞ்சிக் கொண்டிருப்பார். இத்தனை மர்மங்கள் இருக்கும் வீட்டில், கணவன்-மனைவி தூங்கும் அறை கதவை கூட பூட்டாமல் இருப்பார்கள், பிறகு குழந்தையை யாரோ தூக்கிவிட்டார்கள் என்றும் பதறி தேடுவார்கள். கதையோட்டத்திற்காக காட்சிகள் திணிக்கப்பட்டதுதான் குறைபாடு. அதை திணிக்கப்படாமல், இயல்பாக செல்லும் வகையில் திரைக்கதையில் காட்டியிருந்தால் கதையே வேறு. உதாரணத்திற்கு, ஜாஜி கதவை தாழிட்டாள், ஆனால் ஒழுங்காக பூட்டியுள்ளதா என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டாள் என்று காட்டியிருக்கலாம். இந்த சின்ன சின்ன கவனமான வேலைப்பாடுதான் ஒரு படத்தையோ, சீரிசையோ ஃபெர்பெக்டாக மாற்றும். அதில் கோட்டைவிட்டாலும், அடுத்து என்ன என்ற ஆவலில் ஒரே மூச்சில் 6 எபிசோடையும் பார்க்க வைப்பதில் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குநர்.

எங்கு பார்க்கலாம்?

முதல் சீரிசை போலவே இரண்டாவது சீரிசையும் ZEE5 ஓடிடி தளத்தில் கன்னடத்தில் பார்க்கலாம். தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்து பார்க்கும் வசதியை வழங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+