பாக்கியலட்சுமி: கோபியை மீண்டும் வீட்டிற்கு கூப்பிடும் ஈஸ்வரி.. ராதிகா சொன்ன விஷயம்! ரசிகர்கள் ஷாக்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் மீண்டும் கோபியை ஈஸ்வரி பாக்யா வீட்டிற்க்கே கூப்பிடுகிறார். அதற்கு ராதிகா என்ன சொன்னார் என்பது பற்றி பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ஹாஸ்பிடலில் இருக்கும் நிலையில் கோபி மீது கோபமாக இருந்த ஈஸ்வரி இப்போது தன்னுடைய மகன் மீது பாச மழை பொழிகிறார். எத்தனை முறை பட்டாலும் திருந்தாத ஈஸ்வரி என்று ரசிகர்கள் திட்டும் வகையில்தான் இவருடைய கேரக்டர் ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே இருக்கிறது.

ஏற்கனவே கோபியை நம்பி ராதிகா வீட்டிற்கு போய் ஈஸ்வரி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்திருந்தார். தன்னுடைய மகனே தன்னை நம்பவில்லை என்று விரக்தியில் இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் தன்னுடைய மகன்தான் முக்கியம் என்று பழையபடி பாக்யாவை திட்ட தொடங்கி விட்டார்.
அதோடு பாக்யாவை பிரிந்த பிறகும் பாக்யா நல்லா இருக்கக்கூடாது என்று பிரச்சனை மேல பிரச்சனை செய்து கொண்டிருந்தது கோபி தான். ஆனால் இப்போது கோபி மொத்த பழியையும் ராதிகா மீது போட்டு விடுகிறார். உன்னை கல்யாணம் செய்த பிறகு தான் என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியே போயிடுச்சு, நான் அந்த வீட்டில் இருக்கும்போது கூட நிம்மதியா இருந்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ராதிகா தான் கோபியை கல்யாணம் செய்து பல இடங்களில் அவமானப்பட்டு, கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது வெளியான ப்ரோமோவில் ஹாஸ்பிட்டலில் ஈஸ்வரி பாக்கியாவிடம் நீ என்ன சொன்னாலும் பரவாயில்லை கோபி என் கூட தான் நம்ம வீட்டுக்கு வருவான் என்று சொல்ல அதற்கு பாக்கியா அது முடியவே முடியாது அத்த.. நீங்க என்ன சொன்னாலும் பரவாயில்லை அவரை இனி அந்த வீட்டுக்கு கொண்டு கூட்டிட்டு வரக்கூடாது அவர் ராதிகா கூட தான் போகணும் என்று சொல்கிறார்.

அதற்கு ராதிகா கோபி என்கூட தான் வருவாரு என்று சொல்கிறார். ஈஸ்வரி அது முடியாது என்று வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, ராதிகா உங்க மகன் என் கூட வர மாட்டேன்னு சொன்னா நான் விட்டுட்டு போயிருவேன் என்று சொல்கிறார். பிறகு கோபி இடமே சென்று நான் இனி உங்க மீது கோபப்பட மாட்டேன் கோபி, என் கூட நம்ம வீட்டுக்கு வந்துருங்க என்று கூப்பிடுகிறார்.
அடுத்ததாக இனியா, ஈஸ்வரி எல்லோரும் கோபியை அவர்களோடு கூப்பிடுகின்றனர். இதில் கோபி எடுக்க போகும் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்புகளோடு ப்ரோமோ முடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இது போலத்தான் முதல் முறை ஹார்ட் அட்டாக் வந்த போதும் ஈஸ்வரி கோபி வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருந்தார். கோபி வந்ததால் என் புருஷன் இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என்று ராதிகாவும் பாக்கியா வீட்டிற்கு வந்திருந்தார்.

அதற்குப் பிறகு செழியன் மற்றும் எழில் கோபியை வீட்டை விட்டு துரத்தி விட்டிருந்தனர். அப்போதுதான் கோபியோடு ஈஸ்வரியும் ராதிகா வீட்டுக்கு போயிருந்தார். இப்போது பழைய கதை மீண்டும் ரிப்பீட் மோடில் வருகிறது. ஏற்கனவே கோபி பாக்யா வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இப்போது மீண்டும் கோபி ஈஸ்வரியோடு பாக்யா வீட்டிற்க்கே போய்விடுவாரா? அல்லது ராதிகா வீட்டிற்கு போக போகிறார் என்று நீங்க நினைக்கிறீங்களா உங்க கருத்து என்ன பாஸ்.












Click it and Unblock the Notifications