பாக்கியலட்சுமி: கோபி போடும் புது நாடகம்.. ஈஸ்வரிக்கு சரியான பதிலடி கொடுத்த ராதிகா.. கோபத்தில் பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025, ஜனவரி 6ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஈஸ்வரியிடம் கோபி போடும் நாடகத்தை பார்த்து பாக்கியா கோபப்படுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் கோபி பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறார். இதற்கு முன்பு வீட்டை விற்ற பிறகு இரண்டு முறை கோபி இதுபோல வீட்டிற்கு வந்து அவமானப்பட்டு போய் இருக்கிறார். இப்போது மூன்றாவது முறையாக உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சொல்லி கோபியை ஈஸ்வரி வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார்.

வழக்கம் போல கோபி வந்ததும் ராதிகாவும் பாக்யாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால் இந்த முறை கோபி இடம் பாக்யா, இந்த வீட்டில் தங்க வேண்டும் என்றால் வாடகை தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கல்யாணம் செய்த பிறகு கோபியின் குழந்தைகள் மற்றும் அப்பா அம்மாவை பாக்கியா தான் கவனித்து வருகிறார்.
ஆனால் அவருடைய குழந்தைகளும் மாமியாரும் பாக்கியாவை விடவும் கோபிக்கு தான் சப்போர்ட் செய்து வருகிறார்கள். ஆனால் பாக்கியா நான் தான் இந்த உலகத்திலேயே பெரிய தியாகி என்று தியாக மனப்பான்மையோடு ஒட்டுமொத்த குடும்பத்தையும் கட்டிக்காத்து வருகிறார்.

அதோடு தனக்கு துரோகம் செய்த தன்னுடைய தோழி ராதிகாவும் நல்லா இருக்க வேண்டும் என்று பாக்கியா தன்னுடைய வாழ்க்கையையும் தியாகம் செய்து கொண்டிருக்கிறார். இது ரிப்பீட் மோடியில் நடக்கும் கதையாக இருந்தாலும் இந்த வாரம் ஈஸ்வரிக்கு ராதிகா சரியான பதிலடி கொடுக்கிறார்.
இது ரசிகர்கள் மத்தியில் விரும்பப்படும். காரணம், கடந்த சில வாரங்களாகவே ஈஸ்வரியும் இனியாவும் கோபியை தாங்கு தாங்கு என்று தாங்கி பாக்கியாவையும் ராதிகாவையும் அவமானப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இது பார்க்கும் ரசிகர்களை கோபமாக்கி இருந்தது.
அதனால் இப்போது ராதிகா மூலமாக பதிலடி கிடைக்கிறது. அதுவும் பார்ப்பதற்கு நல்லா தான் இருக்கிறது. தற்போது வெளியான ப்ரோமோவில் கோபி வாக்கிங் போகும்போது நான் உன் கூட வரேன் கோபி என்று ஈஸ்வரியும் கிளம்புகிறார். ஆனால் அங்கு வரும் ராதிகா நானும் உங்க கூட வரேன் கோபி என்று ஈஸ்வரியை கழட்டிவிட்டு ராதிகாவும் கோபியும் வாக்கிங் போகின்றனர்.
இதனால் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அடுத்ததாக கோபியை செக் அப்க்கு கூட்டிட்டு போவதற்காக ஈஸ்வரி கிளம்புகிறார். ஆனால் ராதிகா நானும் வரேன் என்று கிளம்புகிறார். பிறகு ஹாஸ்பிடலில் டாக்டரிடம் கன்சல்ட் பண்ணும் போது ஈஸ்வரியை வெளியே விட்டு விட்டு வாங்க நாம போலாம் என்று கோபியை கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்.

இதனால் கடும் கோபத்தில் இருக்கும் ஈஸ்வரி வீட்டில் தனியாக படுத்து இருக்கிறார். அப்போது அங்கு வரும் கோபி அம்மாவிடம் என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி அவ நேத்து வந்தவடா. நான் உன்னை பெத்தவ. அவளை விட எனக்கு தான் நிறைய உரிமை இருக்கு, ஹாஸ்பிடலில் என்ன சொன்னாங்க என்று கேட்கிறார்.
இதையெல்லாம் பாக்யாவும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது கோபி எனக்கு ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கு. இதுதான் எல்லாத்துக்கும் காரணமாம் நீங்க ஸ்ட்ரெஸ் ஆகாம அமைதியா இருந்தா... உங்க பையன் அமைதியா இருப்பான் என்று சொல்லி நடிக்கிறார். இதனால் ஈஸ்வரி நான் இனிமே எதுவும் பேச மாட்டேன் பா என்று சரண்டர் ஆகிறார்.
கோபி போடும் நாடகத்தை எல்லாம் பாக்யா பார்த்து கோபமாகி கொண்டு இருக்கிறார். இதனால் அடுத்த வாரம் கலகலப்பான காட்சிகளும், சண்டை காட்சிகளும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications