கோபியிடம் சவாலில் ஜெயிக்க எழில் எடுத்த முடிவு.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.. எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் வீடு வாங்குவதற்காக செழியன் எந்த பணமும் தரப்போவதில்லை என்று உறுதியாக கூறிவிட்டார்.

எழில் வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய திரைப்படத்தின் கதையை விற்று விட முடிவெடுத்து இருக்கிறார்.

எழில் செய்த சவால் பற்றி ஈஸ்வரி வர்ஷினியிடம் கூறியிருக்கிறார்.

செழியனின் எதிர்பார்க்காத பதில்

செழியனின் எதிர்பார்க்காத பதில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோட்டில் எழியனிடம் வீடு விஷயமாக பேச, அதற்கு அவர் நான் எல்லா பணத்தையும் தூக்கி அப்பாகிட்ட கொடுக்கிறதுக்கு நான் என்ன இளிச்சவாயனா? என்று பேசுகிறார். அப்பா சொன்ன மாதிரி நாம வேற வீடு வாங்கலாம், அதுவரைக்கும் உங்க வீட்டில் இருக்கலாம் என கூறுகிறார். இந்தப் பிரச்சினைக்கு எல்லாம் காரணம் எழில்தான் அவன் தான் பார்க்க வேண்டும் என்று கூற, ஜெனி நாம எல்லாரும் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க வேண்டாமா? என்று கேட்க இந்த வீட்டில் எப்போதும் பிரச்சனை தான் நடந்து கொண்டிருக்கிறது. நிம்மதியாக இருக்கவே முடியவில்லை மீண்டும் நாம் சேர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி ஜெனிக்கு செழியன் அதிர்ச்சி கொடுக்கிறார்.

பாக்யாவின் ஆதரவு

பாக்யாவின் ஆதரவு

அடுத்து எழில் தனியாக உட்கார்ந்து யோசனை செய்து கொண்டிருக்க அப்போது அங்கே வந்த பாக்யாவிடம் என்னால் தான் இத்தனை பிரச்சனை வந்தது என்று நீ நினைக்கிறியா? என கேட்க நீ இதை செய்யவில்லை என்றாலும் அவர் இப்படித்தான் செய்வார் இதைப்பற்றி கவலைப்படாமல் நீ உன் சினிமாவை மட்டும் பாரு, நான் இந்த பிரச்சனையை பார்த்துகிறேன் என சொல்ல எழில் இந்த வீட்டை நாம கண்டிப்பாக வாங்குகிறோம். நான் சொன்ன மாதிரி இந்த வீட்டை வாங்க தான் போறோம் அதற்கான வழி இருக்கு அதை நான் செய்யப் போகிறேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

ஜெனியின் முடிவு

ஜெனியின் முடிவு

அடுத்ததாக எழில் தன்னுடைய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஏற்கனவே தயாரிப்பாளர் ராஜசேகர் நாம சந்தித்தோம் அவர் கதையை மட்டும் கேட்டாரு, அவர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன். இந்த கதையை அவருக்கு விற்று விடலாம் என்று இருக்கிறேன் என சொல்லி தயாரிப்பாளரை பார்க்க கிளம்புகிறார். இந்த பக்கம் செல்வி கோபி எல்லோரிடமும் வீட்டை விற்கப் போவதாக சொல்லி இருக்கும் விஷயத்தை வந்து சொல்ல, பாக்யா என்ன செய்வது என யோசிக்கிறார். ஜெனி இடம் வாடகைக்கு வீடுதான் பார்க்கணும். அது இவ்வளவு வசதியா இருக்குமானு தெரியல, அதுவரைக்கும் நீயும் செழியனும் உங்க வீட்டிலே இருக்கீங்களா என சொல்ல, ஜெனி நீங்க எங்க இருக்கீங்களோ அங்கதான் நானும் இருப்பேன் எனக்கு வசதி எதுவும் இல்லை என்றாலும் கூட பரவாயில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

எழிலுக்கு கிடைக்கும் ஏமாற்றம்

எழிலுக்கு கிடைக்கும் ஏமாற்றம்

அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி வர்ஷினியை சந்தித்து வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்ல வர்ஷினி எழிலிடம் அவ்வளவு பணம் இருக்காதே. நான் ஏதாவது ரெடி பண்ணவா? என கேட்க ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு எழிலுக்கு அப்போ பணம் தேவைப்படுகிறது என அதை வைத்து வர்ஷினி புது பிளான் போடுகிறார். அதற்குப் பிறகு எழில் தயாரிப்பாளரை சந்திக்க அவர் முதல் படம் தயாரித்த அதே தயாரிப்பாளர் உடன் தானே நீங்க இரண்டாவது படமும் பண்ணீங்க. ஏன் அது பாதியில் நிறுத்தப்பட்டது என்று கேட்க எழில் அது தனிப்பட்ட விஷயம் என்று சொல்ல முடியாமல் இருக்கிறார். மேலும் தன்னிடம் இரண்டு கதைகள் இருப்பதாகவும் அதை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, தயாரிப்பாளர் உங்கள் கதை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஆனா அதை நீங்க டைரக்ட் பண்ண முடியாது என்று சொல்கிறார். இதை கேட்டு எழில் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+