இனியாவிடம் அவமானப்பட்ட ராதிகா.. பரபரப்பாக நடந்த தேர்தலின் முடிவு வெளியானது... எதிர்பாராத திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரைக்கும் பேங்க் லோனுக்காக அலைந்து கொண்டிருந்த பாக்கியாவிற்கு கடைசியில் இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
ராமமூர்த்தி மற்றும் இனியா இருவரும் ராதிகாவை தேர்தலில் தோற்க வைப்பதற்காக செய்யும் செயல்களை முகத்துக்கு நேராகவே பேசியிருக்கின்றனர்.

கோபத்தில் கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்கியாவை ஜெயிக்க வைக்க வேண்டும் என தாத்தா ராமமூர்த்தி வசனங்களை எழுதிக் கொண்டிருக்க அப்போது வரும் கோபி இந்த வீட்டில் உட்கார்ந்து கொண்டு உங்க மருமகள் ஜெயிக்கனும் என முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க, அவ ஜெயிக்கனும்னு நினைச்சா அங்க போய் பண்ணுங்க என கையில் இருந்தா நோட்டை பிடித்து தூக்கி எறிந்து விடுகிறார். இதை பார்த்த ராதிகா அதிர்ச்சியாகி நீ ஒன்னும் கவலைப்படாத கண்டிப்பா நீ தான் ஜெயிப்ப ராதிகா என சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்புகிறார்.

இனியாவிடம் அசிங்கப்பட்ட ராதிகா
கோபி வெளியே சென்றதும் இனியா அம்மா தான் ஜெயிப்பாங்க என சொல்ல, ஆமா அது தெரிந்ததுதான் அதற்கான வேலையை நாம் பார்ப்போம். அந்த நோட்டை எடு என ராமமூர்த்தி கூறிக்கொண்டு இருவரும் மீண்டும் வசனங்களை எழுத தயாராகின்றனர். இதை பார்த்த ராதிகா உங்க டாடி இருக்கும் வரைக்கும் அவருக்கு பேவரா பேசிகிட்டு, இப்ப மாத்தி பேசுற என கேட்கிறார். இனியா, நான் எங்க அப்பாவுக்கு தான் எப்போதும் ஃபேவர் ஆனா, அம்மாவையும் எனக்கு பிடிக்கும் அம்மாவையும் விட முடியாது. எனக்கு எங்க அப்பா, அம்மா இரண்டு பேரும் பேவர்தான் என கூறுகிறார். அதைக் கேட்ட ராதிகா ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி பிறகு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார்.

எதிர்பாராமல் கிடைத்த உதவி
அடுத்ததாக பாக்கியா ராஜசேகரை சந்தித்து தனககு பணம் கிடைக்கவில்லை அதனால் அந்த கேட்டரிங் ஆர்டரை எடுத்து செய்வது கஷ்டம் என சொல்லி மன்னிப்பு கேட்க அவர் லோன் ஏதாவது ட்ரை பண்ணலாமே என அறிவுரை கூறுகிறார். எல்லாமே நான் ட்ரை பண்ணி பார்த்துவிட்டு தான் இங்கே வந்திருக்கிறேன் என சொல்கிறார். பேங்கில் எல்லாம் கணவருடைய ப்ரூப் கேட்கிறார்கள் நான் எப்படி இப்ப கொடுக்க முடியும் என சொல்ல, பேங்கில் உங்களுக்காக நான் கையெழுத்து போட்டால் லோன் கிடைக்கும் இல்ல என ராஜசேகர் சொல்ல பாக்கியா சந்தோஷப்பட்டு அவருக்கு நன்றி கூறுகிறார். தொழிலில் எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க கூடாது. உங்களுக்கு பணம் தானே பிரச்சனை அதை சரி செய்வதற்காக வழியை யோசிக்க வேண்டும். அதற்காக கிடைத்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது வாழ்க்கையில் நல்லபடியா ஜெயிக்கணும் என வாழ்த்துக்களை கூறி அனுப்பி வைக்கிறார்.

பாக்யாவுக்கே வெற்றி
அடுத்ததாக ஏரியா செக்ரட்டரி எலக்சன்காக எல்லோரும் ஒன்று கூடி இருக்கின்றனர். அப்போது தேர்தல் தொடங்குகிறது. கிட்டத்தட்ட 800 குடும்பங்கள் உள்ள ஏரியாவில் ஓட்டு போடும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஓட்டை உடனே எண்ணி முடித்து விடுகின்றனர். அதில் ராதிகா 112 ஓட்டுகள் பெற்றிருப்பதாக சொல்ல கோபி கைதட்டி சந்தோஷப்படுகிறார். ராதிகா ஓட்டு ரொம்ப கம்மியாக இருக்க மாதிரி தெரியுது என சொல்ல உன்னை விட கம்மியா தான் பாக்யா வாங்கி இருப்பா, நீ தான் ஜெயிப்ப என சொல்ல, அடுத்து பாக்கியா 1100க்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்று இருப்பதாக அறிவிக்கின்றனர். அதைக் கேட்டு கோபி அதிர்ச்சடைகிறார். இதில் ஏதோ தப்பு நடந்து இருக்கு, நீங்க ஓட்டை சரியாக எண்ணல ராதிகா தான் ஜெயிச்சி இருக்கணும் என கோபி சண்டை போட அதெல்லாம் சரியாகத்தான் எண்ணி இருக்கோம் என ஓட்டு எண்ணிய அதிகாரிகள் பதில் கொடுக்கின்றனர்.

பாக்கியாவுக்கு கிடைத்த மேடை
பாக்கியா ஜெயித்ததை கேட்டதும் அனைவரும் சத்தம் போட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றனர். பாக்யாவை எழில் மற்றும் செழியன் இருவரும் தோளில் தூக்கியபடி கொண்டாடுகின்றனர். அப்போது பாக்யாவை மேடைக்கு கூப்பிட்டு சால்வை அணிவித்து அவரை பேச சொல்கின்றனர். பாக்யா செல்வதை கோபி மற்றும் ராதிகா இருவரும் பார்த்து முறைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது எனக்காக ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வைத்த உங்க எல்லோருக்கும் நன்றி என பாக்யா பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications