அமிர்தாவின் குடும்பத்தை அழ வைத்த ஈஸ்வரி..பாக்கியாவை வெளியே பார்த்து சந்தேகப்படும் கோபி..இனி நடப்பது?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் எழில் திருமணத்தை தனக்கு பிடித்த மாதிரி வர்ஷினியோடு நடத்தி வைக்க ஈஸ்வரி முடிவெடுத்து இருக்கிறார்.
அமிர்தாவின் வீட்டில் சென்று ஈஸ்வரி பேசிய கடுமையான வார்த்தைகளால் அமிர்தாவின் வளர்ப்பு பெற்றோர் கண் கலங்கி இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி ஹோட்டலில் ராஜசேகர் உடன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சியாகி சந்தேகப்பட துவங்கி இருக்கிறார்.

ஈஸ்வரியின் கோபம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ஈஸ்வரி அமிர்தாவின் வீட்டிற்கு வந்து அவருடைய பெற்றோரிடம் நீங்க எழில் அமிர்தாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என கேட்க அதற்கு எழில்தான் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள விருப்பத்தை தெரிவித்தான் என்று அவர்கள் சொல்ல, அவன் சொன்னா நீங்க சரின்னு சொல்லிடுவீங்களா? அவன் அப்படித்தான் யார் கஷ்டப்பட்டாலும் அவனுக்கு பார்க்க பிடிக்காது அதுக்காக உங்க மருமகளை அவன் தலையில் கட்டி விடுவீங்களா என்று கேட்க அமிர்தாவின் அப்பா அம்மா அதிர்ச்சி ஆகின்றனர். பின்பு அமிர்தாவுக்கே அவளை மாதிரியே பொண்டாட்டி செத்துப்போன யாரையாவது ஒருத்தனை பிடித்து கல்யாணம் பண்ணி வைங்க என்னோட கல்யாணம் நடக்காது அவனுக்கு வேறு ஒரு இடத்தில் பொண்ணு பார்த்து முடிவு பண்ணியாச்சு என சொல்லி, இனி எழில் இங்கு வரக்கூடாது அது நீங்க தான் பார்த்துக்கணும் என்று கூறிவிட்டு கிளம்புகிறார்.

வர்ஷிணியின் புது பிளான்
வீட்டுக்கு வந்த ஈஸ்வரி அங்க இருந்த செல்வியை வீட்டை விட்டு பொய் காரணம் கூறி வெளியே அனுப்புகிறார். செல்விற்கு லேசாக சந்தேகம் வந்தாலும் சரி என்று கிளம்புகிறார்கள். பின்பு வர்ஷினி வீட்டிற்கு வந்ததும் செழியன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது எழிலுக்கு இனி திருமணம் செய்து வைத்து விட வேண்டும் அவனுக்கு தொடர்ந்து பல பொண்ணு வீட்டுக்காரங்க வந்துகிட்டே இருக்காங்க என்று சொல்ல அப்போது கிராமத்தில் பார்க்கலாம் என ஈஸ்வரி சொல்ல செழியன் கிராமத்து பொண்ணு வேண்டாம், மேட்ரிமோனியில் பார்க்கலாம் என்று சொல்ல வர்ஷினி கோபத்தில் அதான் நான் இருக்கேனே என்னை ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா? என கேட்க இருவரும் இன்ப அதிர்ச்சி அடைகின்றனர். பின்பு தனக்கு எழிலை ரொம்பவே பிடித்திருக்கிறது என்பதை வெளிப்படையாக கூற வீட்டில் பேசிவிட்டு சொல்லு என்று வர்ஷினியை அனுப்பி வைக்கின்றனர்.

ஹோட்டலில் நடந்த சந்திப்பு
பிறகு பாக்கியா ராஜசேகரை சந்திக்க அவரது ஹோட்டலுக்கு வந்திருக்க அதே ஹோட்டலுக்கு கோபி ஒரு கிளைமேட் சந்திக்க வர , ஒரு கட்டத்தில் கோபி பாக்கியா ராஜசேகர் உடன் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். மீண்டும் தான் பைனான்ஸில் வாங்கிய அந்த பணத்தில் தன்னுடைய கையில் இருக்கும் 5 லட்சம் ரூபாயை கொடுத்து விடலாமா? என்று கேட்க அதை குறித்து ராஜசேகர் உங்களை பைனான்சியல் பேச சொன்னேன் அல்லவா பேசினீர்களா? என்று கேட்க நான் பேசி விட்டேன். ஆனால் அவர்களும் நீங்கள் சொன்னதை தான் சொல்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

பாக்கியாவை சந்தேகப்படும் கோபி
ராஜசேகர் இதைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் இனி ஜனவரி மாதம் தொடங்கி விட்டதால் அடுத்தடுத்து பல கல்யாணம் ஆர்டர்கள் வந்த வண்ணமாகவே இருக்கும். அதனால் இனி நீங்கள் கடனை விரைவாக அடைத்து விடுவீர்கள். நானும் இப்படித்தான் ஆரம்பத்தில் பல சறுக்கள்களை சந்தித்து தான் இப்போது இந்த நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். இப்போ நடக்குற சின்ன சின்ன பிரச்சனைகளை பயப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றார். இதைப் பார்த்த கோபி இதுவரைக்கும் வீட்டிற்குள் இருந்தாள் இப்போ வெளியே வந்து பலரைப் பார்க்க தொடங்கி விட்டாளா? என்று சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications