இனியாவிடம் கோபப்படும் கோபி... "தர்ணா” செய்து புது முடிவெடுத்த பாக்யா... எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா வீட்டை விட்டு பாக்யாவின் வீட்டிற்கு சென்றதற்காக கோபி ஆரம்பத்தில் ராதிகாவிடம் கோபப்பட்டு கொண்டிருக்க அப்போது வந்த இனியாவை கோபத்தில் திட்டுகிறார்.
பாக்யா தங்களுடைய காம்பவுண்டில் அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணமாக அனைத்து வீட்டினரையும் கூட்டிக்கொண்டு தலைவருக்கு எதிராக கோஷமிட்டு கொண்டிருக்கும்போது அடுத்த அசோசியேஷன் தலைவருக்காக கடைசியில் போட்டியிட அனைவராலும் பரிந்துரை செய்யப்படுகிறார்.

இனியாவால் அழும் பாக்யா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி ராதிகாவிடம், இனியா என்னுடைய பொண்ணு இங்க தான் இருக்கணும். என் கூட இந்த வீட்டில் தான் இருக்கணும். அவள நான் அங்க இருக்க விட மாட்டேன் நான் போய் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று சத்தம் போட்டு கொண்டிருக்கிறார். மயூ பயந்து போய்விட மயூவிடம் சமாதானம் செய்கிறார். அதே நேரத்தில் பாக்யாவின் வீட்டில் இருந்து இனியா தாத்தா போகலாமா? என கிளம்பும்போது பாக்யா பாட்டி யாரிடமும் எதுவும் சொல்லாமல் எழிலிடம் மட்டும் நான் வரேன் அண்ணா என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். அதை பார்த்து ஈஸ்வரி மற்றும் பாக்யா கண்கலங்கி அழுகிறார். எழில் இருவரையும் சமாதானம் செய்கின்றார்.

கோபியின் தவிப்பு
அடுத்ததாக இனியா கோபியின் வீட்டிற்கு வந்ததும் எங்கடா போயிருந்த, நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன். நீ அந்த வீட்டுக்கு போய் திரும்பி வரமாட்டேன் என்று நினைத்தேன் என சொல்லி பதறுகிறார் .நான் எப்படி டாடி இங்கே வராமல் இருப்பேன். உங்களுடன் தான் நான் இருப்பேன் என்று இனியா கூறியபடியே ராதிகாவை பார்க்க ராதிகா கோபியை முறைத்துப் பார்க்க கோபி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.

தலைவரின் திமிர் பேச்சு
அடுத்ததாக அசோசியேஷன் மீட்டிங் கூட்டம் நடைபெற இருக்கிறது. அங்கே அனைவரும் வந்து சேர ராமமூர்த்தியும் அங்கே வருகிறார். இந்த கூட்டத்தில் மக்கள் அசோசியேஷன் தலைவர் இதுவரை எதுவும் செய்யவில்லை என குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு திமிராக நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க என்று ஒவ்வொன்றுக்கும் தலைவர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார். சிசிடிவி சரியில்லாமல் இருக்கிறது என்று சொன்னால், மெக்கானிக் தான் சரி பண்ண முடியும். நான் எப்படி பண்ண முடியும் என்று கேட்க, அடுத்து தெருவில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று பெண்கள் கம்ப்ளைன்ட் சொல்ல, ஒவ்வொன்றிற்காக கவுண்டர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

கோர்த்துவிட்ட செல்வி
கடைசியில் இந்த முறை நீங்க ஜெயிக்க முடியாது. நாங்க பெண்களில் ஒரு தரை நிறுத்துவோம் என அனைவரும் சொல்கின்றனர். முடிந்தால் நிறுத்துங்கள் யார் நிற்கிறார்கள் பார்ப்போம் என்று தலைவரும் திமிராக பேசிக் கொண்டிருக்க செல்வி கடைசியில் பாக்யா நிற்பார் எங்க அக்கா பாக்யா என்று பாக்கியாவை கோர்த்து விடுகிறார். அடுத்து எல்லோரும் பாக்யாவுக்கு ஆதரவாக இருக்க என்னால் நிற்க முடியாது என்று பாக்யா கூறிக் கொண்டிருக்கும்போது, தலைவர் பாக்யாவிடன் கோபி சார் வேற இல்ல அவங்களால் எப்படி நிற்க முடியும். அவங்க சாப்பாடு கரண்டியை தூக்கிக்கொண்டு சமைக்கிற மாதிரி இந்த பதவி கிடையாது. இதில் ஒரு நாளைக்கு 15 பிரச்சனை வரும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அனைவரும் பாக்யாவுக்கு ஆதரவாக இருக்க இந்த வருஷம் பெண்களே நிற்கட்டும். நான் என் பொண்டாட்டியை நிற்க்க வச்சி ஜெயித்துக் காட்டுவேன் என்று சவால் விடுகிறார். பாக்கியா இதனால் என்ன பிரச்சனை வருமோ என்று பயந்தபடி நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications