
அமிர்தா விஷயம் தெரிந்து வில்லனாக மாறிய தாத்தா.. பாக்கியா கடைசியில் எடுத்த எதிர்பாராத முடிவு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை காதலிக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட தாத்தா எதிர்பார்க்காத பதிலை கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.
எழில் விஷயத்தில் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரியின் முடிவால் ஒரு பக்கம் குழப்பத்தில் இருக்கும் பாக்யா அடுத்ததாக எலக்ஷனில் பாக்யாவின் செயலைக் கண்டு கலாய்க்கும் கோபியால் மேலும் அதிர்ச்சியாக இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று நான் சம்பாதித்தது இதுதான் ஓபன் ஆக பேசிய குயின்சி...இப்படி உளறிட்டாரே!

கோபியின் சில்மிஷங்கள்
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்ய நெருங்கும் போது, இனியா வந்துவிட அதைப் பார்த்த ராதிகா கோபியை தள்ளி விடுகிறார். இதில் கோபி கீழே விழுகிறார். கோபி கீழே விழுவதை பார்த்த இனியா டாடி என்ன ஆச்சி என கேட்க, போன் கீழே விழுந்த மாதிரி இருந்துச்சி அதான் தேடிட்டு இருக்கேன் என சொல்கிறார். போன் இங்க இருக்கு மேல உக்காருங்க என்ன சொல்கிறார். அடுத்து ராதிகா எழுந்து உள்ளே சென்றதும் கோபி ராதிகாவை பார்த்து நெளிந்து கொண்டே இருக்கிறார். அருகில் இருக்கும் அப்பா மற்றும் இனியாவை பார்த்து அவர்களுக்கு தெரியாத மாதிரியே சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

வில்லனாக மாறும் தாத்தா
அடுத்ததாக பாக்யா செல்வியோடு பேங்குக்கு போக அங்கே அவரிடம் கோபியின் டீடைல்ஸை கேட்கின்றனர். அதற்கு பாக்கியா கோபியோடு டைவர்ஸ் ஆகிவிட்டது என்று கூற, அப்போது எங்களால் லோன் தர முடியாது என்று பேங்கில் கூறி விடுகின்றனர். அதே நேரத்தில் ஈஸ்வரி எழில், அமிர்தா விஷயத்தை பற்றி ராமமூர்த்தி இடம் கூறுகிறார். அதை கேட்டு அதிர்ச்சியான ராமமூர்த்தி பாவம் பார்க்கலாம் தப்பில்ல, ஆனால் எதுக்கெல்லாம் பாவம் பாக்கணும்னு இருக்கு. இது நமக்கு செட்டாகாது நான் எழிலிடம் பேசுகிறேன் என சொல்ல, ஈஸ்வரி வேண்டாம் அவன் வேற ஏதாவது சொல்லி விடுவான் நான் அவனிடம் ஏற்கனவே சத்தியம் வாங்கி விட்டேன் என்று கூறுகிறார்.

தாத்தாவின் திடீர் பிளான்
அடுத்ததாக எழில் அங்கே வர எழிலிடம் தாத்தா உனக்கு ஊர்ல ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கோம் பேசி முடிச்சிடலாமா? என சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார். அப்போது அருகில் இருக்கும் ஜெனி ஒரு மூன்று படமாவது பண்ணின பிறகு கல்யாணம் செய்தால் தானே நல்லா இருக்கும் என்று எடுத்துக் கொடுக்க, எழிலும் ஆமாம் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அதை கேட்டு ஈஸ்வரி இது யார் சொன்னா? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பாக்கியா வீட்டிற்கு வந்ததும் பேங்குக்கு போனது என்ன ஆச்சு என எல்லோரும் கேட்க, லோன் கிடைக்காது என்ற விஷயத்தை சொல்ல, தாத்தா ஊர்ல இருக்க சொத்தை வித்திடலாம் என கூறுகிறார். அதற்கு ஈஸ்வரி மறுப்பு தெரிவிக்கிறார். குழந்தைகளுக்கு இருக்கிறது அந்த ஒரு சொத்து தான் அதையும் விற்கக் கூடாது என்று கூறுகிறார். எழில் நான் ஏதாவது அமௌன்ட் ரெடி பண்ணுகிறேன் என்று சொல்ல, ஈஸ்வரி அதுவெல்லாம் வேண்டாம் இந்த வேலையெல்லாம் பாக்யாவுக்கு வேண்டாம் அவள் இருக்கிற வேலையை பார்த்தாலே போதும் என்று கூறுகிறார்.

இனி பாக்கியா எடுக்க போகும் முடிவு
அடுத்ததாக அசோசியேஷன் மீட்டிங் நடைபெற இருக்கிறது. அங்கே பாக்கியா செல்வி அனைவரோடு உட்கார்ந்திருக்கின்றனர். அப்போது கோபி வருகிறார். அவர் பழைய தலைவருக்கு ஆதரவாக உட்கார்ந்து இருக்க, அப்போது பழைய தலைவர் பாக்கியா நிற்பதாக சொல்லிவிட்டு நிற்கவில்லை என நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபி சிரித்து வெறுப்பேற்றுகிறார். பாக்கியா தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னதை கேட்டு அனைத்து பெண்களும் அதிர்ச்சி அடைந்து, பாக்கியாவை தேர்தலில் நிற்க சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது யாரும் தேர்தலில் நிற்கவில்லை என்பதால் என்னுடைய மனைவியை வெற்றியாளராக அறிவித்து விடட்டுமா? என பழைய தலைவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் .அதே நேரத்தில் செல்வி இதே இடத்தில் நானாக இருந்தால் நான் சரி என்று சொல்லி இருப்பேன். என்னுடைய புருஷன் எதிர்க்கட்சிக்காரனோடு சேர்ந்து இப்படி மேடையில் சிரித்துக் கொண்டிருந்தால் நான் அதை தான் செய்வேன் என்று ஏத்தி விடுகிறார். பாக்யா எதுவும் சொல்லாமல் யோசிக்கிறார். இத்துடன் என்று எபிசோடு முடிவடைகிறது.