பாக்கியா வீட்டிற்குள் ராதிகாவின் செயல்.. கோபியை பழிவாங்க எழில் எடுத்த முடிவு.. இனி நடப்பது இது தான்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா பாக்யாவின் வீட்டில் வந்து ஜெனிக்கு சடங்கு சம்பிரதாயங்களை செய்கிறார்.
பாக்யாவை அழ வைத்த கோபியை பழிவாங்குவதற்காக எழில் அவருடைய பெயர் பலகை வீட்டில் இருக்கக் கூடாது என முடிவு எடுத்திருக்கிறார்.
எழிலின் எதிர்பாராத செயலைப் பார்த்து நடு தெருவில் கோபி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.

கோபியின் அட்ராசிட்டி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டின் செழியன் ஜெனியை கூட்டி சென்று உட்கார வைக்க, கோபி ராதிகாவை கூட்டி சென்று நலுங்கு வைக்க எல்லோரும் அதிர்ச்சியாகி பார்க்கின்றனர். கோபி செழியன் மற்றும் ஜெனியோடு ராதிகாவும் சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டிருக்க, பாக்கியா அங்கிருந்து கிச்சனுக்கு சென்று ராதிகா செய்வதையும் கோபியில் நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது அங்கே இருந்த ஜெனியின் அம்மா அங்கே நடப்பதை பார்த்து, வந்த உறவினர்கள் பேசுவதையும் பார்த்துக்கொண்டு பாக்கியாவின் அருகில் வந்து இதையெல்லாம் பார்த்துகிட்டு எப்படி உங்களால இருக்க முடியுதுன்னு தெரியல என சொல்ல, பாக்கியா வருத்தப்பட்ட படியே லேசாக சிரிக்கிறார்.

கண் கலங்கும் பாக்கியா
எழில் வந்து பாக்யாவை சமாதானப்படுத்த எழிலில் தோளில் சாய்த்தபடி பாக்கியா கண்கலகுகிறார். பின்பு அங்கே போ என சொல்ல எழில் கிளம்பி விடுகிறார்.அடுத்து அங்கே இனியா வந்து பாக்கியாவிடம் பேச போக, கோபி இனியா டைம் ஆயிடுச்சு கிளம்பலாம் என சொல்லி கூட்டிக்கொண்டு செல்கிறார். அங்கு இருப்பவர்கள் கோபியின் செயலைப் பற்றி பேச ராமமூர்த்தி கோபி ஒரு மானங்கெட்டவன் அவரைப் பற்றி இங்கே பேசாதீர்கள் என்று கூறி முடித்து வைக்கிறார்.

நேம் போர்டால் வந்த பிரச்சனை
அடுத்ததாக கொரியர் பாய் வந்து லெட்டர் கொடுக்க கோபியை கேட்க எழில் அப்படி யாரும் இந்த வீட்டில் இல்லை என சொல்ல, சுவற்றில் நேம் போடு இருக்கு இல்லன்னு சொல்றீங்க என்ன சொல்ல இனி கோபி பெயரில் ஏதாவது வந்துச்சுன்னா ரிட்டன் போட்டுடுங்க இங்க கொண்டு வராதீங்க என எழில் பேசுகிறார். பிறகு சுவற்றில் இருக்கும் நேம் போர்டை பார்த்து இது எங்கே இருப்பதினால் தானே இப்படி பண்றாங்க என சொல்லி அந்த நேம் போர்ட் எடுக்க போக அப்போது தாத்தா வந்து அதை எதுக்கு பார்த்துகிட்டு இருக்க என கேட்கிறார். எழில் நடந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி அங்கே காரில் வந்து இறங்க அந்த நேரம் நேம் போர்டு கழட்டி எழில் வீச கோபி அதிர்ச்சி அடைகிறார்.

நடுத்தெருவில் சண்டை
பிறகு கோபி எழிலிடம் வந்து எதுக்கு என்னுடைய பெயரை தூக்கி வீசுன என, இது என்னுடைய வீடு கழட்டுன உன் கையாலேயே இதை நீ மாட்டனும் என சொல்ல, எழில் முடியாது என கூறுகிறார். தாத்தா இருவரையும் சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். தெருவில் இவர்கள் இருவரும் சண்டையிட்டு கொண்டிருப்பதை அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். ஒரு கட்டத்தில் எழிலை ரோட்டில் வைத்து கோபி அடிக்க முயல்கிறார். பின்பு ராமமூர்த்தி தடுத்து இருவரையும் தனித்தனியாக அனுப்பி வைக்கிறார். பிறகு கோபி வீட்டில் அப்பாவிடம் இன்னும் அந்த வீடு என் பெயரில் தான் இருக்கு மறந்துடாதீங்க. நான் நினைச்சா அந்த வீட்டுக்குள்ள வந்து பாக்கியாவையும் எழிலையும் வீட்டை விட்டு வெளியே துரத்த முடியும் என எச்சரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications