இனியா மற்றும் தாத்தாவால் கோபத்தில் ராதிகா செய்த செயல்.. வசமாக மாட்டிய கோபி எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவோடு தான் நானும் இருப்பேன் என கோபியின் அப்பா ராமமூர்த்தி பேக்கை தூக்கிக்கொண்டு கோபியின் வீட்டிற்கே வந்து விட்டார்.
இனியா தாத்தா மற்றும் இனியா செய்த செயலால் ராதிகா பயங்கர கோபத்தில் இருக்கிறார்.

கதறி அழும் பாக்கியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை நினைத்து பாக்கியா அழுது கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு இனியா தன்னோடு நடந்து கொண்ட விதத்தையும் இப்போது இப்படி மாறிவிட்டாரே என்று பாக்கியா அழுதபடி இருக்கிறார். எழில் சமாதானம் செய்து தன்னுடைய மடியிலே பாக்கியாவை தூங்க வைக்கிறார். அதே நேரத்தில் கோபியின் மடியில் படுத்து இனியாவும் தூங்கிவிட்டார்.

இனியாவுக்கு கிடைத்த அதிர்ச்சி
அடுத்த நாள் காலையில் இனியா தூங்கி முழிக்கவும் ராதிகா குட் மார்னிங் சொல்லி வருகிறார். பதிலுக்கு இனியாவும் குட் மார்னிங் சொல்கிறார் .அடுத்ததாக அப்பா எங்கே என கேட்க கோபி வாக்கிங் போயிருக்கிறார் என ராதிகா சொல்ல ஓகே நீ பெட்ஷீட் மடித்து வைத்துவிட்டு பிரஷ் அப் ஆகிவிட்டு வா என ராதிகா சொல்கிறார். என்னது பெட்ஷீட் மடிக்கணுமா என தனக்குத்தானே இனியா அதிர்ச்சியாய் இருக்கிறார். பிறகு பெட்ஷீட் களை ராதிகாவும் மடிக்க அவரோடு சேர்ந்து விறுவிறுவென இனியாவும் மடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார்.

தொடங்கியது காபி பிரச்சனை
அடுத்ததாக ஹாலில் இனியா மற்றும் மயூ இருவரும் அமர்ந்திருக்க இருவருக்கும் காபி கொண்டு வந்து ராதிகா கொடுக்கிறார். நீ டீ குடிப்பியா? காபி குடிப்பியா? என எனக்கு தெரியாது. அதனால் காபியே போட்டு விட்டேன் என்று சொன்னதும் ஓகே பரவாயில்லை என இனியா வாங்கி காபியை ஒரு மடக்கு குடித்துவிட்டு மீண்டும் குடிக்க முடியாமல் கையில் வைத்தபடி இருக்கிறார். அப்போது கோபி அங்கே வருகிறார். என்ன இனியா தூக்கம் சரியாக வந்ததா? என்று இனியாவின் பக்கத்தில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருக்க நன்றாக தூங்கினேன் டாடி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஏன் குடிக்க வேண்டியது தானே? ஏன் குடிக்காமல் வைத்திருக்கிறாய் என்று கேட்க டாடி இது காபி என்று சொல்கிறார். ஓ நீ காபி குடிக்க மாட்டியா? என கேட்டுக்கொண்டே ராதிகா இனியா காபி குடிக்க மாட்டாள். பால்தான் குடிப்பாள் என சொல்ல இதை என்னிடமே சொல்லியிருக்கலாமே என ராதிகா கேட்டபடி கொடு நான் பால் கொண்டு வருகிறேன் என்று காபி கப்பை கேட்க இல்ல வேண்டாம் நான் இதையே குடித்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

தடுத்து நிறுத்திய பாக்யா
அடுத்ததாக பாக்யாவின் வீட்டில் செல்வி வந்து இனியா வந்துவிட்டாளா? என்று கேட்க இல்லை என அனைவரும் சொல்கின்றனர். இரவு தூக்கம் வராமல் இங்கே வந்து இருப்பாள் என்று நான் நினைத்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி எழில் செழியன் ரெண்டு பேரும் கீழே வாங்க என கூப்பிட்டு போய் இனியாவே கூப்பிட்டு விட்டு வாங்கள் என கூறுகிறார். பாக்யா அதற்கு மறுப்பு தெரிவித்து கொண்டிருக்கிறார். நாம போய் இப்போது கூட்டிட்டு வந்து விட்டோம் என்றால் இனியா செய்த தப்பை புரிந்து கொள்ள மாட்டாள். எதற்கெடுத்தாலும் இதே போல தான் செய்வாள் .அவள் செய்த தப்பை புரிந்து கொள்ள வேண்டும் .இனி தப்பு செய்தாலும் நாம் திட்டினால் அங்கே தான் மீண்டும் போவாள் அதனால் இப்போது பொய் அவளை கூப்பிட்டு விட்டு வர வேண்டாம் அவளாக வரட்டும் என்று கூறுகிறார்.

தாத்தாவை புரிந்து கொண்ட செல்வி
கோபி இருக்கிற வரைக்கும் சரி அவன் வேலைக்கு சென்ற பிறகு அங்கே ராதிகா மட்டும்தான் இருப்பாள் இனியாவை எப்படி பார்த்துக் கொள்வாள் என தெரியாது .அதனால் எப்படி அவளை அங்கே விட்டு வைக்க முடியும் என்று ஈஸ்வரி சொல்ல இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமமூர்த்தி அங்கிருந்து சென்று ஒரு பையை தூக்கிக் கொண்டு கிளம்பி வருகிறார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எங்கே செல்கிறீர்கள் என கேட்க என் பேத்தி இருக்கும் இடத்திருக்கு நானும் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். எல்லோரும் போக வேண்டாம் என்று கூறினாலும் நான் அங்கே தான் போவேன் ஆனால் சாப்பாட்டுக்கு இங்கே வந்து விடுவேன் நான் போய் இனியாவை மனதை மாற்றி இங்கே கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லும் போது செல்வி கூறுகிறார், நீங்கள் போகும் தோரணையே பார்க்கும்போது இனியாவே கூட்டிக் கொண்டு வருவதற்காக போன மாதிரி இல்லை கோபிக்கு சரியான பதிலடி கொடுக்க போன மாதிரி இருக்கிறதே என்று கூறுகிறார்.

கோபிக்கு இனி தான் பிரச்சனையே
அடுத்ததாக கோபியின் அப்பா ராமமூர்த்தி கோபி வீட்டுக்கு சென்று இனியா இனியா என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார் .இனியா மற்றும் கோபி ராதிகா என அனைவரும் ராமமூர்த்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றனர். கோபியின் பக்கத்தில் ராதிகா இருந்து கோபப்படாமல் பேசுங்கள் என்று கூறுகிறார். எதற்காக இங்கே வந்தீர்கள் என்று கோபி ராமமூர்த்தி இடம் கேட்க நான் என்னுடைய பேத்தியை பார்க்க வந்தேன் என்று சொல்லும்போது அவள் இனி அங்கே வரமாட்டாள் இங்கே தான் என் கூடவே இருப்பாள் என்று சொல்கிறார். அதுபோல கையில் எதுக்கு பேக்கை கொண்டு வந்திருக்கீங்க இனியாவுடைய துணியா என்று கேட்டதற்கு இல்லை இனி நானும் இங்கே தான் இருக்கப் போகிறேன் என் பேத்தி இருக்கும் இடத்தில் தான் நானும் இருக்க போகிறேன் என்று சொல்ல ஓடி வந்து இனியா தாத்தாவை கட்டிப்பிடித்து க்கொள்ள ஏண்டா இப்படி பண்ணுனா என தாத்தா கேட்க பயமா இருந்தது. அதனால்தான் இப்படி பண்ணினேன் என இனியா கூறுகிறார். இங்கே இருக்க போகிறேன் என்று சொன்னதற்கு சூப்பர் தாத்தா எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சி. இப்போ நீங்களும் வந்துட்டீங்க ஜாலியா இருக்கும். இங்கே கேரம்போர்ட்டெல்லாம் இருக்கிறது என்று சொல்ல, சேர்ந்து விளையாடுவோம் கேரம்போர்டு விளையாடுவோம், திருடன் போலீஸ் விளையாடுவோம் என சொல்ல ராதிகா கோபியை முறைத்த படி கோபத்தோடு அங்கிருந்து கிளம்புகிறார் .இனி நான் என்ன செய்யப் போகிறேனோ என கோபி அதிர்ச்சி ஆகி நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications