பாக்யாவுக்கு எதிராக கோபியின் சூழ்ச்சி.. ராதிகா கொடுத்த அதிர்ச்சி..இனியாவிற்கு நடந்த எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனி ராதிகா வேலை செய்யும் ஆபீஸிலேயே பாக்யாவிற்கு கேன்டீன் ஆர்டர் கிடைத்திருக்கிறது.

பாக்கியாவுக்கு ஆர்டர் கிடைக்கக்கூடாது என கோபி ராதிகாவிடமே கூறியதும் ராதிகா கோபியின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

ஆர்டருக்காக சொல்லப்பட்ட பொய்

ஆர்டருக்காக சொல்லப்பட்ட பொய்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா மற்றும் ஜெனி என இருவரும் ராஜசேகர் உடன் கேன்டீன் ஆர்டருக்காக ராஜசேகரின் நண்பர் ஆபீசுக்கு வந்திருக்கின்றனர். ஆபீஸில் ஆர்டருக்காக எங்கள் ஆஃபீஸில் 25 பெண்கள் வேலை செய்கிறார்கள் என்று பொய் கூறுகின்றனர் .அதோடு மூன்று நேரமும் எங்களால் சமைத்துக் கொடுக்க முடியும் என்று வாக்கு கொடுக்கும் போது 7 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என ஆபீசிலிருந்து சொன்னதும் அதற்கும் சரி என்று ஜெனி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வருகின்றனர் .வெளியே பாக்கியா மற்றும் ஜெனி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகா பார்த்து விடுகிறார்.

ராதிகாவின் எதிர்பார்க்காத செயல்

ராதிகாவின் எதிர்பார்க்காத செயல்

இவர்கள் இருவரும் வெளியே செல்வதை பார்த்து ராதிகா அவருடைய ஹெட்டிடம் எதற்காக இவர்கள் வந்து போகிறார்கள் என்று கேட்க, அவர்கள் யார் உங்களுக்கு தெரியுமா என அவர் இவரிடமே திருப்பி கேட்க, பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும் கேன்டீன் ஆர்டர் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள். உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க மாத்திடலாம் என சொல்ல அப்படி எல்லாம் இல்லை என்று கூறுகிறார். மீண்டும் மீண்டும் ராதிகாவின் ஹெட் இவரிடமே துருவி துருவி கேட்கிறார்கள். இவர்களிடம் சாப்பாடு கொடுத்தால் சரியாக வருமா என்று கேட்கும் போது எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது சார் நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்புகிறார்.

 ஐஸ் வைக்கும் கோபி

ஐஸ் வைக்கும் கோபி

பிறகு கோபி மற்றும் ராதிகா ஒரு ரெஸ்டாரண்டில் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது கோபி, நான் இனியா முன்னாடி அப்படி உன்னை பேசிருக்க கூடாது. எல்லா தப்பும் என்னுடைய தான் என மன்னிப்பு கேட்க,ராதிகா இனியாவை கண்டிக்காமல் என்னை திட்டுவது எனக்கு கஷ்டமாக இருக்கு, அதுவும் அவள் முன்னாடியே நீங்கள் செய்வது எனக்கு என்னை கேவலப்படுத்துவது போல இருக்கிறது. நான் இரண்டாவது முறை திருமணம் செய்ததும் தவறாகி விடக்கூடாது என்று பேசிக் கொண்டிருக்கும் போது பாக்யா மற்றும் ஜெனி இருவரும் தன்னுடைய ஆபீசுக்கு வந்ததை சொல்கிறார்.

கோபியின் சூழ்ச்சி

கோபியின் சூழ்ச்சி

ராதிகா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான கோபி எதற்காக இங்கே வந்தார் என்று கேட்டதற்கு கேட்டரிங் ஆர்டர் எடுப்பதற்காக என கூறுகிறார். இங்கேயோ வந்திருக்கிறார்கள். நீ வேலை செய்வது தெரிந்து தான் இங்கே வந்திருக்கிறார் என்று சொல்ல, அப்படி வந்த மாதிரி தெரியவில்லை என்று ராதிகா சொல்கிறார். நான் சொன்னாதான் அவர்களுக்கு கேன்டீன் ஆர்டர் கிடைக்கும் என ராதிகா சொல்ல கோபி அதெல்லாம் கொடுக்காத, பிராடு அவளால் அவ்வளவு பெரிய ஆர்டர் எல்லாம் பண்ண முடியாது என சொல்கிறார். அதற்கு ராதிகா வேண்டாம் திறமை இருந்தால் முன்னுக்கு வரட்டும் என சொல்கிறார்.

இனியாவுக்கு புது பிரச்சனை

இனியாவுக்கு புது பிரச்சனை

இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது கோபிக்கு ஸ்கூலில் இருந்து போன் வர, அந்த போனில் இனியா பிக்னிக் போய் இருந்த வேன் ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டதாகவும், குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஸ்கூலுக்கு திரும்பி கூட்டிகிட்டு வருவதாகவும் சொல்ல அதிர்ச்சியாகும். கோபி ஸ்கூலுக்கு கிளம்பி செல்கிறார். அதே நேரத்தில் எழில் அமிர்தாவின் போட்டோவை பார்த்து வீட்டில் வருத்தப்பட்டு கொண்டிருக்கும் போது, ஈஸ்வரி என்னடா பாக்குற என கேட்க, ஒரு வழியாக எழில் சூட்டிங் ஸ்பாட் போட்டோ என சமாளித்து விடுகிறார்.

பாக்யாவுக்கு கிடைத்த அதிர்ச்சி

பாக்யாவுக்கு கிடைத்த அதிர்ச்சி

அப்போது பாக்கியா, ஜெனியோடு வீட்டிற்கு வருகிறார். வந்ததும் என்னவென்று கேட்க எழில் சமாளித்து விஷயத்தை சொன்னதும், கேட்டரிங் ஆர்டர் கிடைத்த விஷயத்தையும் ஏழு லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்ற விஷயத்தை சொல்ல, எல்லோரும் அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக லோன் போட்டால் எப்படி கட்டுவது என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே நிகிதாவின் அம்மா பாக்யாவுக்கு போன் போட்டு இனியா பிக்னிக் போன வேன் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என சொல்ல, பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+