பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் கதாநாயகன்!? இனி கதையே மாறப்போகிறதா? அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வந்த விஜே விஷால் தற்போது புதிய திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.
வி ஜே விஷால் நடிக்கும் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிட்டார்.
விஜே விஷால் எமோன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் அந்த திரைப்படம் ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளை கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக கவர்ந்து இருக்கிறது. அதனாலேயே விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது .இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கின்றனர். இதனாலேயே இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தவண்ணமாகவே இருக்கிறது. அந்த வகையில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த விஜே விஷால் அதாவது எழில் கேரக்டரில் நடிக்கும் விஷாலுக்கு இப்போது பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது.

திரைப்படத்தின் டீசர் வெளியீடு
பாக்கியலட்சுமிக்கு உறுதுணையாக இருக்கும் செல்ல மகன் எழில், இவர் போல நமக்கு ஒரு பையன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பீல் பண்ணும் மாதிரி தாய்மார்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் எழில் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் அதேபோலவே அவர் முதல் முறையாக நடித்திருக்கும் திரைப்படத்தின் மூலமாகவும் ஆதரவு கிடைக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றார். தான் நடித்திருக்கும் திரைப்படத்தில் டீசரை இன்று இவர் வெளியிட்டு ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

தொடர்ந்து நடிப்பாரா
வி ஜே விஷால் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக தீப்தி நடிக்கிறார். இந்த திரைப்படத்தை மோகன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 8ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் எழில் நடிப்பாரா? இல்லையா? என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே செழியன் மாறியது போல இப்போது எழிலும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்குமோ என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதைக் குறித்து விஜே விஷால் இன்னும் எந்த பதிலையும் கூறவில்லை.

திருமணம் யாரோடு நடக்கும்
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது எழில் எடுத்து வந்த திரைப்படம் பாதியிலே நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அமிர்தாவை திருமணம் செய்வாரா? அல்லது ஈஸ்வரியின் பிடிவாதத்தால் அமிர்தாவை விட்டுவிட்டு வர்ஷினியை திருமணம் செய்வாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். எழிலுக்கு இதுவரைக்கும் பாக்யா மட்டுமே ஆதரவாக இருந்த நிலையில் இன்று முதல்முறையாக கோபி எழிலோடு சென்று நேரடியாக பேச சென்றிருக்கும் நிலையில், எழிலின் காதலுக்காக கோபியும் சப்போர்ட் செய்வாரா? அல்லது இது குடும்பத்திற்கு செட்டாகாது என்று கூறி பிரச்சனையை செய்வாரா? என்பது எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் எழில் அதாவது விஜே விஷால் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா? அல்லது புது திரைப்படத்திற்காக சீரியலை விட்டு விலகி விடுவாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications