மகிழ்ச்சியோடு முதல் முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பாபா பாஸ்கர்... இவர்கள்தான் உலகமாம்
சென்னை: ஒரு நடன மாஸ்டராக பலருக்கும் தெரிந்த பாபா பாஸ்கர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ஒரு சமையல் கலைஞராக அசத்தி விட்டார்.
நடனத்தில் மட்டுமல்லாமல் தன்னுடைய காமெடியின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த பாபா பாஸ்கர் தற்போது தன்னுடைய குடும்ப புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
மனைவி மற்றும் குழந்தைகளோடு பாபா பாஸ்கர் தீபாவளியை கொண்டாடி அதை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

திரை பிரபலங்களுடன் பணியாற்றியவர்
ஒரு நடன ஆசிரியராக ஆக வேண்டும் என்று என்ற ஆசையோடு பிரபல நடன இயக்குனரான சிவசங்கர் மாஸ்டர் மற்றும் ராஜசுந்தரம் மாஸ்டர் இடம் ஆரம்பத்தில் உதவியாளராக பணியாற்றிய பாபா பாஸ்கர் பின்பு பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சித்தார்த், கார்த்தி, விஜய் சேதுபதி ,பிரபுதேவா, விஷால் என பல நடிகர்களுடன் தமிழிலும் நாகர்ஜுனா, மகேஷ்பாபு ,ராம்சரண் என பிறமொழி நடிகர்களுடனும் பணியாற்றி இருக்கிறாராம். ஆரம்ப காலத்தில் எவ்வளவு சோதனைகளை கடந்து வந்தாலும் இவருடைய விடாமுயற்சியால் தற்போது தன்னுடைய திறமையை பலருக்கும் நிரூபித்திருக்கிறார்.

குக் வித் கோமாளியில் அறிமுகம்
ஒரு டான்ஸ் மாஸ்டராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடிகராகவும் இவர் நடன இயக்குனராக இருக்கும் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களுக்கு ஸ்பெஷல் கெஸ்ட் ஆகவும் இவர் அறிமுகம் ஆகி இருக்கிறார் .அந்த வகையில் இவர் ரசிகர்களின் மத்தியில் முகத்தை காட்டி இருந்தாலும், இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருடைய காமெடி மற்றும் சமையல் திறமை அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டது. நடனம் மட்டுமல்லாமல் ரசிகர்களை கவர்வதற்கான மொத்த திறமையும் தன்னிடம் இருக்கும் என்பதை இவர் பல ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் காட்டி வருகிறார்.

பிக் பாஸில் கிடைத்த வெற்றி
தமிழ் ரியாலிட்டி ஷோவில் மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 தெலுங்கு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது ரன்னரப்பாக வெற்றி பெற்று இருக்கிறார் .தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்து வருகிறார். சிங்கம் படத்தில் இவர் சிறந்த நடன இயக்குனர் விருதை 58 வது ஃபிலிம் ஃபேர் விருதுகளில் பெற்றிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் புகழோடு செய்த அட்ராசிட்டிகள் பார்த்து இவரை பல ரசிகர்கள் கலாய்த்து வந்தாலும், ஆதரவும் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. இவர் குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் மூன்றாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றிருந்தார்.

அழகான குடும்பம்
என்னதான் இவர் நடனம், நடிப்பு, ரியாலிட்டி ஷோ என பல துறைகளில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய குடும்பமும் தனக்கு அதிக அளவில் முக்கியம், தன்னுடைய வளர்ச்சிக்கும் கஷ்ட பட்ட காலங்களில் இருந்து தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவர்கள் தான் என்று மேடைகளில் உருக்கமாக பேசியிருக்கிறார் .இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை தன்னுடைய மகள், மகன் மற்றும் மனைவியோடு சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை ரசிகர்களோடு பகிர்ந்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications