Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதார்த்த படைப்புன்னா கெட்ட வார்த்தை வைப்பீங்களா? பேட் கேர்ள் பொண்ணு பேசுறது சுதந்திரமா?: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலீசுக்கு போலீஸே எதிரி என்று படத்தில் காட்டினால் எப்படி? எல்லாத்துக்குமே ஒரு வரைமுறை உள்ளது. ரத்தம் இல்லாமல் படம் எடுக்க இவர்களால் முடியாது.. பசி, வீடு, என்று ரத்தம் இல்லாமல் எடுத்த படங்கள் அன்று ஓடியதில்லையா? எந்த வசனங்களுக்குமே ஒரு லிமிட் இருக்கிறது" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா சொல்லி உள்ளார்.

BBT சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "பெண் சமூகத்துக்கே எதிரான கருத்துக்கள்தான், பேட் கேர்ள் டிரெயிலரில் பார்க்க முடிந்தது.. பேட் கேர்ள் படத்தில், அதாவது பிராமணர் என்ற அடையாளத்தை அந்த பெண்ணுக்கு தரவேண்டிய அவசியம் என்ன?

bad girl brahmin sanga

பெண் சுதந்திரம்: அதேபோல, பெண் சுதந்திரம் என்ற சொல்லிக் கொண்டு, அப்பெண் பேசுவதெல்லாம் சுதந்திரமே கிடையாது. கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது காட்டுமிராண்டித்தனம். பெண் சுதந்திரம் என்ற பெயரில், பெண் சமூகத்துக்கு ஒவ்வாத பல விஷயங்களை அதில் சொல்றாங்க. சமத்துவத்தை பற்றி பேசினால், ஆணுக்கும் ஒழுக்கம், கற்பு என்று பேச வேண்டியதுதானே? அவன் குடித்தால், நானும் குடிப்பேன் என்பதன் பெயரா பெண் சுதந்திரம்? இது எப்படி சமூகத்தை முன்னேற்றும்?

எப்படி வேண்டுமானாலும் மக்களின் கவனத்தை ஈர்க்கணும்னு நினைக்கிறாங்களே தவிர, நல்ல படம் எடுக்கணும்னு எண்ணம் பலருக்கும் இருப்பதில்லை. சரியான இயக்குனர் என்றால், தவறான விஷயத்தைதான் ஈர்க்கணும் என்று அவசியமில்லை.

bad girl brahmin sanga

போலீஸ் அதிகாரி: இந்த படத்தில் வசனங்களுக்கு எப்படி, சென்சாரில் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.. விடுதலை 2 என்ற படத்தில், கான்ஸ்டபிளை, போலீஸ் அதிகாரி மிக அசிங்கமாக திட்டுகிறார்.. இப்படி உயரதிகாரியை சினிமாவில் காட்டினால், எல்லா போலீஸ்காரர்களுமே இப்படித்தான் என்பதை சொல்ல வருகிறீர்களா?

டாணாக்காரன் என்ற படத்தில் பயிற்சி முகாமில் உள்ளவர்களை, திட்டுவது போல காட்டியிருப்பார்கள். ஆனால், அங்கேகூட அவ்வளவு ஆபாசமாக திட்டவில்லை. விடுதலை 2 படத்தில் மோசமான கெட்ட வார்த்தை அப்படியே வருகிறது.. இந்த படத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

யதார்த்த படைப்பு: யதார்த்த படைப்பு, பதார்த்த படைப்பு என்று சொல்லி கொண்டு, மக்களுக்கான காவல்துறையையும், நீதிமன்றத்தையும், மருத்துவ துறையையும் கேவலப்படுத்தி, களங்கப்படுத்தி கொண்டிருந்தால் மொத்த சினிமாவும் அழிந்துவிடும்.. அத்துடன் சினிமாவின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.

bad girl brahmin sanga

நாயகன், போக்கிரி போன்ற படங்களில், கத்தியை எடுத்து மருத்துவம் செய்யும் டாக்டர்களை தாக்குவது போல படங்களை எடுத்ததால்தானே, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், மகன் ஒருவர், தன்னுடைய அம்மாவுக்காக கத்தியை கையிலெடுக்க நேரிட்டது. ஏன், சினிமாவில் நல்ல விஷயத்தை காட்ட வேண்டியதுதானே?

கெட்ட வார்த்தை: அதற்காக அவலத்தை சினிமாவில் காட்டக்கூடாது என்று சொல்லவில்லை.. அவலத்தை எப்படி காட்ட வேண்டுமோ அப்படி காட்டுங்கள்.. போடா, வாடா என்று போலீஸ்காரரரை உயரதிகாரிகள் அழைப்பதுபோல சீன் வைத்தாலே அவமரியாதைதான். அதுக்காக கெட்ட வார்த்தையை, கொச்சையான வார்த்தையை சொல்லிதான், அதை காட்ட வேண்டியதில்லை.. மக்களுக்கு போலீஸை எதிரியாக காட்டுவதுடன், போலீசுக்கு போலீஸே எதிரி என்று காட்டினால் எப்படி?

எல்லாத்துக்குமே ஒரு வரைமுறை உள்ளது. ரத்தம் இல்லாமல் இவர்களால் படம் எடுக்க முடியாது.. பசி, வீடு, என்று ரத்தம் இல்லாமல் எடுத்த படங்கள் ஓடியதில்லையா? எந்த வசனங்களுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+