Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாந்தி வாந்தியா வருது.. "பேட் கேர்ள்" குட்டி ப்ளூபிலிம்.. ஊர் மேய போறேன்னு சொல்றது பெருமையா: கஸ்தூரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒழுக்கமான குடும்பம் என்றாலே, அது பிராமண குடும்பத்தைதான் காட்டுவீங்களா? அப்படியென்றால், அது தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்குமான ஒரு இழிவுதான்" என்று பேட்கேர்ள் படம் டீசர் குறித்து தன்னுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் கஸ்தூரி.

Dinamalar சேனலுக்கு கஸ்தூரி தந்துள்ள பேட்டியில், "டிரெயிலரில் காட்டப்படுவது பிராமண சமூகம், அதிலும் ஜெயலலிதா மேடம் நெத்தியில் வெச்சிட்டு இருப்பாங்களே, அதுபோலவே நாமம் வெச்சிட்டு இருக்காங்க.. ஒரு நிமிட டிரெயிலரிலேயே இத்தனை குறியீடுகள் இருக்கும்போது, இன்னும் எவ்வளவு எல்லாம் வரப்போகுதுன்னு தெரியல.. இந்த கதைக்களம் படத்துக்கு மிக அவசியமா? முதல்ல இப்படியொரு படமே அவசியமா?

bad girl brahmin sanga

வயசு கோளாறை பத்தி எடுக்கப்பட்ட பல தமிழ் படங்களின் கடைசி அவதாரம்தான் இந்த படம்.. இதுபோன்ற ஒரு லைட் ப்ளூ கலர் படங்கள் ஒன்றும், தமிழகத்தில் முதல் முயற்சி கிடையாது.. நிறைய படங்கள் வந்திருக்கு. "வாஞ்சரைக்குள்ள வண்டி", திரிஷா இல்லேன்னா நயன்தாரா, இருட்டு அறையில் முரட்டு குத்து, இப்படி வெவ்வேறு காலகட்டங்களில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.. வயசுக்கோளாறு அல்லது பாலியல் இச்சைகளை வெளிச்சமிடும் படங்கள் நிறைய வந்துள்ளன.

இந்த படம் பெண்ணுரிமை பற்றி பேசும் அல்ல.. வயசு கோளாறை நியாயப்படுத்தக்கூடிய அலலது வயசு கோளாறை சித்தரிக்கக்கூடிய ஒரு அசட்டு பிசட்டு படம்..

பெண்ணுரிமை:
இந்த படம் பெண்ணுரிமை பற்றியதா? குழந்தையை படிக்க வைப்பதற்காக பாடுபட்ட ஒரு பெண்ணின் கதையா இது? அல்லது வேலைக்கு போகும் பெண், பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, அதை தைரியமாக அட்கொண்ட பெண்ணின் கதையா இது? அல்லது படிக்கவே கூடாது என்று மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஒரு பெண், தடைகளை உடைத்து, பெரிய படிப்பு படிச்ச பெண்ணின் கதையா? என்னது இது?

10ம் கிளாஸ்ல படிக்கிறதுக்கு பதிலாக ஏதோ பசங்க பின்னாடி அலையற ஒரு அவுசேரி பெண்ணுடைய கதை. இது நாட்டுக்கு முக்கியமா? இந்த காடசி நல்லா இருக்கும் போலயே என்று, ரசிக்கும்படியான சீன் ஏதாவது அந்த டிரெயிலரில் இருக்கா?

வாந்தி எடுக்கிற காட்சிதான் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது. ஒரு பெண்ணின் வயசு கோளாறை படமாக எடுப்பதே தவறுதான்.. இந்த டிரெயிலரை பார்த்தால், குட்டி மினி ப்ளூபிலிம் மாதிரி இருக்கு. முகம் சுழிக்கும் அளவுக்கு காட்சிகள் டிரெயிலரில் இருக்கு.

அடையாளம்: தமிழர்களின் அடையாளம் என்பது, சாதியோ, மதமோ, உடையோ, ஊரோ கிடையாது.. தமிழர்கள் படிப்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள். எங்கே போனாலும் நன்றாக படிப்பார்கள், நன்றாக இங்கிலீஷ் பேசுவார்கள் என்ற பெயர் தமிழர்களுக்கு உள்ளது.. குறிப்பாக, தமிழ் பிராமண சமூகத்துக்கு மிக அதிக அளவில் இருக்கிறது.

படிக்க போற இடத்துல, ஊர் மேய போறேன்னு சொல்றதை, 2 மணி நேரம் பெருமையா படமாக எடுத்து தந்தால், அதை யாருமே விரும்ப மாட்டார்கள்.. நாட்டில் இருக்கிறதைதானே படத்தில் காட்டுகிறேன் என்றால், நாட்டில் இருப்பதையெல்லாம் நீங்க காட்டறீங்களா? அண்ணா யூனிவர்சிட்டியில் இருக்கிறவங்க சமூகம் என்னன்னு, இதுவரை கேள்வி கேட்டு இருக்கீங்களா? ஞானசேகரனோட சாதி என்னன்னு யாராவது ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்களா? இந்த படத்தில் பிராமண சமூகத்தை தனியாக அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் எங்கு வந்தது?

பிராமணர்கள்:
ஆசாரியமான குடும்பத்தை சேர்ந்த பெண், அவுசாரியாக போவதுதான் கதை என்றால், சிறந்த பக்தி மிக்க குடும்பங்கள், சிறந்த ஒழுக்கமிக்க குடும்பங்கள், பிராமண சமூகத்தை தவிர வேறு எங்குமே இல்லை என்று இந்த படத்தின் பெண் டைரக்டர் நினைக்கிறாரா? அல்லது வெற்றிமாறன் நினைக்கிறாரா? ஒழுக்கமான குடும்பம் என்றால், பிராமண குடும்பத்தைதான் காட்டுவீங்களா? அப்படியென்றால், அது தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்குமான ஒரு இழிவுதான்" என்று கொந்தளித்து கூறியிருக்கிறார் கஸ்தூரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+