Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்யாவை வம்பு இழுத்த கோபிக்கு தனம் கொடுத்த நெத்தியடி..ராதிகா எடுத்த திடீர் முடிவு.. கலவரமான ஹனிமூன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியர் ஸ்டோர்ஸ் சீரியலின் மகா சங்கமத்தில் ஹனிமூன் வந்த கோபிக்கு பாக்கியலட்சுமி குடும்பத்தினர் சிறப்பான பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

பாக்கியா பாடிய பாடலை மெய் மறந்து கோபி ரசித்து கைதட்டியதால் ராதிகா கோபத்தில் கிளம்பி விட்டார்.

ராதிகாவை சமாதானம் படுத்துவதற்காக பாக்யாவை கோபி நக்கல் செய்து கலாய்ப்பதை பார்த்த தனம் கோபிக்கு பதிலடி கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

ராமமூர்த்தியின் வருத்தம்

ராமமூர்த்தியின் வருத்தம்

பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் மகா சங்கமத்தில் இன்றைய எபிசோட்டில், பாக்கியா அழகாக பாடிக் கொண்டு இருக்கிறார். அதை ரசித்து கோபி கைதட்டியதும் ராதிகா கோபத்தில் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார். உடனே கோபியின் அப்பாவான ராமமூர்த்தி பாக்கியா நல்லா பாடுனதும் தாங்க முடியாமல் எந்திரிச்சி ஓடுறான் என்று கோபியை திட்டிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ராமமூர்த்தி அறையில் தனியாக பெட்டில் அமர்ந்து இருக்கிறார். அப்போது மூர்த்தி அவரிடம் வந்து கோபியை பற்றி பேசுகிறார். இப்படி எல்லாம் கோபி பண்ணவே கூடாது என்று கூறுகிறார். அதற்கு ராமமூர்த்தி அவன் நல்லாவே இருக்க மாட்டார் என்று சாபம் விடுகிறார். அதற்கு மூர்த்தி இதை விட்டு விடுவோம் .நான் மனதில் வைத்துக் கொண்டிருப்பதை பேச வேண்டாம் என்று தான் நினைத்தேன் ஆனால் அதனால் உங்களுக்கும் கஷ்டம் தான் இதை பேச வேண்டாம் என்று கூறி அதை விட்டு வெளியே செல்கிறார்.

இது பழைய பாக்கியா இல்லை

இது பழைய பாக்கியா இல்லை

புல்வெளியில் அமர்ந்திருந்த எழிலிடம் ரொம்ப குளிருது ஏதாவது ஒயின் கிடைக்குமா? என்று கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை ஒட்டு கேட்ட ஐஸ்வர்யா எனக்கும் வேண்டும். நானும் காலேஜ் படிக்கும் போதே ஆசைப்பட்டேன். வீட்டில் குடிக்க முடியாது ஒரு தடவையாவது அதை டேஸ்ட் செய்து பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். உடனே கண்ணன் சூப்பர் பொண்டாட்டி என பாராட்ட நான் சும்மா சொன்னேன்.என்னை அப்படி நினைத்தாயா? என்று கண்ணனை வெளுத்து வாங்குகிறார். அதே நேரத்தில் பாக்யாவும் தனமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் நான் ரூமுக்குள் சென்று விடுகிறேன் என்று கூறுகிறார். பாக்யா மட்டும் போன் பேசிக் கொண்டிருக்கிறார் .அங்கே வந்த கோபி பாக்யாவை சொடக்கு போட்டு கூப்பிட்டு வம்பு இழுக்கிறார். நான் கூப்பிட்டால் நீ என்னனு கேக்க மாட்டியா? என்று திமிராக பேசுகிறார். நீங்க சொடக்கு போட்டு கூப்பிட்டதும் ஓடி வந்து நிற்க நான் பழைய பாக்கியா இல்லை என்று பாக்யாவும் பதிலடி கொடுக்கிறார்.

தனம் கொடுத்த அதிரடி

தனம் கொடுத்த அதிரடி

என்னுடைய திருமணத்தை பிளான் பண்ணி நிறுத்த வேண்டும் என்று மண்டபத்துக்கு வந்து அவ்வளவு டிராமா பண்ணுன. குடும்பத்தை எல்லாம் கூட்டிக்கொண்டு பெரிய பிரச்சனை பண்ணுனது போதாது என்று நான் ஹனிமூன் வந்த இடத்தில் இங்கேயும் நீ வந்து பிரச்சனை பண்ணுவதற்காக குடும்பத்தோட வந்திருக்கியா? என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உள்ளே இருந்து வந்த தனம் கோபியை கண்ட மேணிக்கு திட்டி விடுகிறார். எங்கள் குடும்பத்தில் யாரும் உங்களை மாதிரி தரங்கெட்ட செயலை செய்தது கிடையாது. அப்படி செஞ்சுகிட்டு இவ்வளவு திமிரா வந்து பேசுனது கிடையாது? என்று கோபியின் முகத்துக்கு நேரே பேசிய அனுப்பி விடுகிறார்.

முல்லையின் புது முயற்சி

முல்லையின் புது முயற்சி

அதே நேரத்தில் மீனா கடைக்கு போக வேண்டாம் ஜீவா கூடவே இரு என்று சொல்கிறார் .அதற்கு ஜீவா கடை திறக்கணும் என கிளம்பி விடுகிறார். அடுத்ததாக கதிர் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வருகிறார். அதற்கு முல்லை எதற்கு இப்போ சாப்பாடு எடுத்துட்டு வந்தீங்க என்று கேட்கிறார். நீதானே உடனே வர சொன்னா ? அதனால்தான் சாப்பிட தான் கூப்பிடுற என்று எடுத்துக் கொண்டு வந்தேன் என்று சொல்கிறார் .அப்போ கையில் ஒரு பேப்பரை வைத்து சமையல் போட்டி இளஞ்ஜொடிகளுக்கான சமையல் போட்டி நடப்பதாகவும், அதில் ஜெயித்தால் பத்து லட்சம் கிடைக்கும் நாம் அதில் ஜெயித்தால் சீக்கிரமாக வீட்டுக்கு சென்று விடலாம் என்று கூறுகிறார். அதற்கு கதிர் இந்த மாதிரி எங்க வீட்டில் கலந்து கொண்டது கிடையாது. அதனால் இந்த இது நமக்கு வேண்டாம் என்று கூறி விடுகிறார்.

தாத்தா செய்த தரமான செய்கை

தாத்தா செய்த தரமான செய்கை

அடுத்ததாக எல்லோரும் போட்டிங் போக வந்திருக்கின்றனர். அங்கு போட் சிறியதாக இருப்பதால் இனியா மட்டும் தனியாக செல்ல வேண்டும் என்று முதலில் கூறுகின்றனர். பிறகு வேண்டாம் நீங்கள், சொல்லுங்கள் நான் இருக்கிறேன் அப்படி என்று ஒவ்வொருவராக கூறி கடைசியில் கண்ணனும் ராமமூர்த்தி மட்டும் போகாமல் வெளியே நிற்கிறார்கள். மீதமுள்ளவர்கள் ஜாலியாக போட்டிங்க் போய் இருக்கின்றனர். அப்போது ராதிகாவும் கோபியும் வருகிறார்கள். இவர்களைப் பார்த்த கண்ணன், ராமமூர்த்தி இடம் நாமளும் போவோம் வாங்க என டிக்கெட் எடுத்து கோபி ராதிகா போகும்போது ஏறி வெறுப்பேத்துகின்றனர். இவர்கள் இருவரும் போட்டில் ஏறியதை கோபியும் ராதிகாவும் பார்க்காமல் வீடியோ காலில் மயூவுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு பிறகு இருவரும் கோபியை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கின்றனர் .இவர்களின் பாடலைக் கேட்டு கோபி கடும் கோபத்தில் இருக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+