கொடைக்கானலில் ஹனிமூன்..!!தன்னை வெறுப்பவர்களுக்கு பாக்கியலட்சுமி ராதிகா கொடுத்த பதிலடி..!!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் வெறுப்பவர்களுக்கு தற்போது பதில் கொடுத்துள்ளார்.
சீரியலில் இவருக்கும் இவர் கோபிக்கும் திருமணம் நடக்குமா? இல்லையா என்று குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.
கொடைக்கானலுக்கு சென்ற ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கோபி ராதிகாவுக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சீரியலில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் தான் தற்போது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது,

மீண்டும் சங்கமம்
பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இரண்டும் சங்கமிக்கும் மகா சங்கமம் தற்போது நடைபெற இருக்கிறது. இது நான்காவது முறையாக நடக்கும் சங்கமமாக இருக்கிறது. இந்த முறை இவர்களுடைய சங்கமம் கொடைக்கானலில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சீரியல்களிலும் தற்போது கதைகளும் விறுவிறுப்பாக இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் தன்னுடைய மாமியாரிடம் விட்ட சவாலை ஜெயித்து காட்டுவாரா என்று ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் திருமணம் நடைபெறுமா பெறாதா என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

நெகட்டிவ் கருத்துக்கள்
தற்போது இரண்டு சீரியல்களும் மகா சங்கமத்தில் சேர்ந்த நேரத்தில் ராதிகாவின் கழுத்தில் தாலியும் நெத்தியில் குங்குமமும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்போ ராதிகாவிற்கு திருமணம் நடைபெற்று விட்டது என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ராதிகாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.என்னதான் காதலித்து இருந்தாலும் தான் காதலித்தவர் தன்னுடைய தோழியின் கணவர் என்பது தெரிந்தும் இந்த ராதிகா இப்படி மாறிவிட்டாரே என்று இவரை பற்றி பலர் நெகட்டிவ் கருத்துக்கள் பரப்பு வருகிறார்கள்.

ராதிகாவின் பதிலடி
தன்னைப் பற்றி நெகட்டிவ் கருத்துக்களை பரப்புபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வெறுப்பு ஒரு பெரிய சுமை& கெட்ட கர்மா. வெறுக்கத்தக்க வார்த்தைகள் இன்னும் மோசமானவை. மாறாக அன்பையும் இரக்கத்தையும் பரப்புங்கள்" என்று பதிவிட்டு தன்னுடைய லேட்டஸ்ட் ஸ்டைலான புகைப்படங்களை போஸ்ட் செய்திருக்கிறார். இவர் மீது கோபம் இருந்தாலும் இந்த புகைப்படத்தை பார்த்தாலே கோபம் எல்லாம் பறந்து விடும் என்று ரேஷ்மாவின் ரசிகர்கள் கமெண்ட்களில் ஐஸ் வைத்து வருகிறார்கள்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications