கோபியின் மூக்கை உடைத்த பாக்யா... இப்பவாவது இந்த முடிவுக்கு வந்தீங்களே.. ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல தற்போது பாக்கியா மாறி இருக்கிறார்.
தன்னிடம் வந்து திமிராக பேசிய கோபிக்கு அதிரடியாக பதில்களை கொடுத்து மூக்கை உடைத்து அனுப்பி இருக்கிறார்.
எதிர்த்து பேசாமல், தனியாக போய் புலம்பாமல் முதல் முறையாக பாக்கியா செய்த செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பாக்யாவுக்கு தெரிய வந்த உண்மை
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது திருமணம் நடைபெறுமா? பெறாது? என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கும் வேலையில் கோபியின் நக்கலான பேச்சுக்கு திருப்பி பதில் அளித்த பாக்யாவின் பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக இருந்து வருகிறது. கடந்த எபிசோடில் கோபி ரிசப்ஷன் ஸ்டேஜில் இருக்கும் போது அவருடைய தந்தை வந்து திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்று பேசிய பேச்சுகளுக்கு கோபி மண்டபத்தை விட்டு வெளியேற சொல்லி கத்தி விட்டார். பாக்யா தன்னுடைய கணவரின் திருமணத்திற்கு தான் தான் சமையல் செய்கிறோம் என்பது தெரியாமல் இருந்து வந்தார். செல்வியின் மூலமாகத்தான் கடைசியில் அவருக்கு தெரிந்தது.

சமையல் ஆர்டர் மட்டும் போதுமாம்
பாக்யாவை மண்டபத்தில் பார்த்த கோபி பாக்யா மற்றும் தன்னுடைய அப்பாவான சத்தியமூர்த்தி இருவரையும் மண்டபத்தை விட்டு வெளியேற கூறியிருந்தார். ஆனால் பாக்கியா தனக்கு இந்த சமையல் ஆர்டர் வேண்டும் என்று மண்டபத்தை விட்டு போக மாட்டேன் என்று மேனேஜரிடம் கெஞ்சி பிறகு இவரையே சமைக்க சொல்லிவிட்டு விட்டனர். இதனால் தற்போது இவர் தான் கோபியின் இரண்டாவது திருமணத்திற்கு சமையல் செய்பவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் பாக்யாவை தேடி வந்து கோபி நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார் .

கோபியின் நக்கல்
நான் கஷ்டப்பட்டு உழைச்ச வீட்டிலிருந்து என்னை நீ வெளியே துரத்துனால? எவ்வளவு திமிரு இருந்தா, நீ கோர்ட்டுக்கு போய் எனக்கு டைவர்ஸ் கொடுத்து, எங்க வீட்டில உள்ளவங்க எல்லாரும் என்ன வெறுக்கிற மாதிரி செஞ்சிருக்க? என்று கோபி பாக்யாவிடம் கோபமாக பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் உன்னை இந்த கல்யாண மண்டபத்தை விட்டு விரட்ட சொல்லி எல்லோரும் சொன்னாங்க. ஆனா, நான் நீ இருந்து நான் ராதிகா கழுத்தில் தாலி கட்டுவதை பார்க்க வேண்டும், பார்த்து மனசுக்குள்ளே நீ அழனும் அதை பாத்து நான் சந்தோஷப்படணும் அதுக்காகத்தான் வேண்டாம் என்று சொன்னேன் என்று கூறுகிறார். அது மட்டும் அல்லாமல் உன்னை எவ்வளவு சந்தோஷமா வீட்டுக்குள்ள வச்சிருந்தேன். இப்போ நீ சமையல் கட்டில் கஷ்டப்படுகிறார்? இன்னும் நீ கஷ்டப்படணும் அதுதான் என் ஆசை என்று கோபி பாக்கியாவிடம் பேசுகிறார்.

பாக்கிய கொடுத்த பதிலடி
கோபி பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த பாக்கியா, கடைசியாக உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறுகிறார். அதற்கு கோபி என்ன? மனசுக்குள்ள வேதனையை வச்சிகிட்டு இப்படி பேசுறியா? என்று கேட்க, இல்லை உங்க வாழ்க்கையில் நான் எப்படி யாரோ என்று ஆகிவிட்டனோ, அதுபோலத்தான் இப்போ என் வாழ்க்கையில நீங்க ஆகிட்டீங்க! அதனால உங்க கல்யாணத்தை பார்த்தா எனக்கு எந்த ஒரு வருத்தமும் வராது என்று பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய வாழ்க்கையில் நான் எந்த தப்பும் செய்யல, அதனால எனக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. ஆனால் நீங்க நிறைய தப்பு பண்ணி இருக்கீங்க. அதனால தான் இப்படி வந்து என்கிட்ட விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று முகத்துக்கு நேரா வார்த்தைகளால் கோபிக்கு பஞ்ச் கொடுக்கிறார். பாக்யாவின் இந்த அதிரடியான பதிலை எதிர்பார்க்காத கோபி தலையை குனிந்து கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசோடு. இதைப் பார்த்த ரசிகர்கள் இப்பதாவது பாக்கியா இந்த ஒரு முடிவுக்கு வந்தாங்களே என்று கருத்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications