ரசிகர்களின் கேள்விக்கு குதர்க்கமாக பதில் அளித்த பாலாஜி.. கடைசியில் ரவீந்தருக்கு வைத்த செக்..!!
சென்னை: பிக் பாஸ் செலிபிரிட்டி பாலாஜி முருகதாஸ் சமூக வலைதளங்களில் தன் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் சுவாரசியமாக இணையத்தில் பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் தன்னுடைய பாணியில் பாலாஜி முருகதாஸ் அளித்துள்ள பதில்கள் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் திருமணம் முடிந்து கோயில் கோயிலாக சுற்றிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் பாலாஜி முருகதாஸ் புதுப்பட அப்டேட்கள் கேட்க துவங்கி விட்டனர் அவரது ரசிகர்கள்.

அடிக்கடி நடக்கும் வார்த்தை மோதல்கள்
விஜய் டிவியின் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் பாலாஜி முருகதாஸ்.அந்த சீசனில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேராதரவோடு டைட்டில் பட்டத்தை வென்ற ஆரியுடன் பிக்பாஸ் வீட்டில் மல்லுக்கட்டியே பிரபலமாகி, போட்டியில் இரண்டாம் இடம் வரை சென்றார்.ஆரி-பாலாஜி முருகதாஸ் இடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெறுப்பு போட்டி இன்னும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இருவரது ரசிகர்களும் அவ்வப்போது வார்த்தை போரில் ஈடுபடும் சம்பவம் இணையத்தில் அடிக்கடி நிகழும்.

சாக்லேட் பாய் மாதிரி இருக்கிற ரகடு பாய்
பேச்சிலும்,உடல் மொழியிலும் தன்னை ஒரு ரகடு பாயாகவே காட்டிக் கொண்டவர் பாலாஜி முருகதாஸ்.தனக்கு பிடிக்காதவர்களிடம் ஏகத்தாளமாக பேசுவது,வம்பு இழுப்பது என்று சில சேட்டைகளை பிக் பாஸ் வீட்டிற்குள் செய்து வந்த பாலாஜி முருகதாஸிற்கும் ரசிகர்கள் ஆதரவு அதிகமாகத்தான் இருந்தது. பிக் பாஸ் சீசன் 4ல்
இறுதிப்போட்டி வரை சென்ற பாலாஜி,பிக்பாஸ் அல்டிமேட்டில் வெற்றியாளராக வாகை சூடினார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாலாஜி முருகதாஸ் மாடலிங் துறையில் நல்ல ஈடுபாடு கொண்டவர்.

அண்ணா தான் எல்லாமே
சமூக வலைதளங்களில் தங்களுக்கான கிரேஸ் குறையும் பொழுது ரசிகர்களுடன் உரையாடி தங்களை மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை பல செலிபிரிட்டிகள் ஒரு ஃபார்முலாவாக பின்பற்றி வருகின்றனர்.அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பாலாஜி முருகதாஸும் சூடாகவும் சுவையாகவும் பதில் அளித்து வந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் சமீபத்தில் உங்களது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிடுங்கள் என்று கேட்டதற்கு தன் அண்ணனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இவர்தான் எனக்கு எல்லாமே என்று கூறியுள்ளார்.

சூடான கேள்விகள் சுவாரசியமான பதில்கள்
தன்னுடைய செல்ல நாய்க்கு "விஸ்கி" என்று பெயர் வைத்துள்ள பாலாஜி முருகதாஸை பார்த்து, அந்தப் பெயர் வைக்க எப்படி தோன்றியது என்று கேட்ட ரசிகருக்கு,தனக்கு மிகவும் பிடித்த ட்ரிங்ஸ் என்று கூலாக பதில் அளித்துள்ளார்.செலிபிரிட்டி ஆவதற்கு டிப்ஸ் கேட்ட நபரிடம் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தை அணுகும் படி கூறியுள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பாலாஜி முருகதாஸ் என்ன கற்றுக் கொண்டார் என்று கேட்ட ரசிகருக்கு 'கெட்டது எப்பவும் கெட்டதா இருக்காது, நல்லது எப்பவும் நல்லதா இருக்காது' என்று விளக்கம் கொடுத்துள்ளார். பாலாஜி முருகதாஸின் புது படம் பற்றிய அப்டேட் கேட்டவருக்கு அது குறித்து விஜய் தொலைக்காட்சியில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் டிசம்பர் மாதத்தில் கூறுவார் என்று அறிவித்துள்ளார்.இன்னும் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பாலாஜி முருகதாஸ் அளித்துள்ள கலகலகப்பான பதில்கள் பாலாஜி முருகதாஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவனம் பெற்று வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications