பிக்பாஸ் அல்டிமேட்: அபிநய் செய்த செயல்களை புட்டுப்புட்டு வைத்த பாலா.. இவ்வளவு விஷயம் இருக்கா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநய் பற்றி பாலா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அபிநய்யிடம் கேள்வி கேட்க வேண்டுமென்று தாமரையிடம் பல விஷயங்களை போட்டுக் கொடுத்துள்ளார் பாலா.

இரண்டு அணியாக பிரிந்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து தங்கள் வண்டவாளங்களை அவர்களே தண்டவாளம் ஏற்றி வருகின்றனர். போட்டியாளர்களின் ஒரு அணியினர் செய்தியாளர்களாகவும், மற்றொரு அணியினர் பிக்பாஸ் பிரபலங்களாகவும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரபலங்கள் அணியினர் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த டாஸ்க் நேற்று தொடங்கிய நிலையில் இன்று அவரிடம் கேள்வி கேட்பதற்காக பாலா தாமரைச்செல்விக்கு ட்ரெய்னிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

டாஸ்க்கில் மட்டும் இப்படியா
போட்டியாளர்கள் அனைவரும் இன்று கேள்வி கேட்பதற்காக நேற்றே கேள்விகளை ப்ரிப்பேர் பண்ண தொடங்கிவிட்டனர். இதில் யார் யாருடைய சொந்த வாழ்க்கை என்ன ஆகப் போகிறதோ என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு தங்களுடைய நிறை குறைகளை சுட்டிக்காட்டும் விதமாக தான் கேள்விகள் இருந்து வருகிறது. என்னதான் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் அனுசரணையாக இருந்தாலும் டாஸ்க் என்று வந்தால் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மீண்டும் முதலில் இருந்தா
தற்போது அபிநய்யிடம் தாமரைச்செல்வி கேள்வி கேட்க இருக்கிறார். அவரிடம் பாலா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு அபிநய், இன்ஸ்டாகிராமில் பாவனிக்கு ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார். மெஸேஜ் பண்ணியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் லெட்டர் கொடுத்துள்ளார். இதைப்பற்றி கேளு என்று போட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே அபிநய் வீட்டில் பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கே அப்படி, இப்போ மறுபடியும் அதை தோன்டினால் என்ன மாதிரி பூகம்பம் வெடிக்க போகிறதோ தெரியவில்லை என்று கூறிவருகின்றனர்.
Recommended Video

இது வேற நடந்து இருக்கா
பாலா பேசிக்கொண்டிருக்கும் போது அருகிலிருந்த ஜூலி அபிநய் எனக்கும் மெசேஜ் பண்ணி இருக்கிறார் என்று உண்மையை உளறிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் அப்போ அபிநய் விஷயத்தில் நிறைய செய்திகள் கிடைக்கும் போல என்று கலாய்த்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியினால் அபிநய் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் என்றும் சிலர் அன்பு கட்டளை விட்டு வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications